தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3094

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! (அல்குர்ஆன்: 9:34) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்.

அப்போது நபித்தோழர்களில் சிலர், “தங்கம் மற்றும் வெள்ளி விஷயத்தில்தான் (இந்தக் கண்டனம்) இறங்கியுள்ளது. எந்தப் பொருள் சிறந்ததென்று நாங்கள் அறிந்தால் அதைச் சேமித்துக் கொள்வோமே!” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு, நன்றி செலுத்தும் உள்ளம், தனது ஈமானுக்கு உதவி செய்யும் இறைநம்பிக்கை கொண்ட மனைவி ஆகியவையே சிறந்த செல்வங்களாகும்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

நான் முஹம்மத் பின் இஸ்மாயீல் (புகாரீ இமாம்) அவர்களிடம், ஸாலிம் பின் அபுல்ஜஃத் அவர்கள் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்.

பிறகு நான் அவர்களிடம், “அவர் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த நபித்தோழர்களிடம் கேட்டிருக்கிறார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோரிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் இன்னும் சில நபித்தோழர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.

(திர்மிதி: 3094)

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ:

لَمَّا نَزَلَتْ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ} [التوبة: 34] قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَقَالَ بَعْضُ أَصْحَابِهِ: أُنْزِلَتْ فِي الذَّهَبِ وَالفِضَّةِ، لَوْ عَلِمْنَا أَيُّ المَالِ خَيْرٌ فَنَتَّخِذَهُ؟ فَقَالَ: «أَفْضَلُهُ لِسَانٌ ذَاكِرٌ، وَقَلْبٌ شَاكِرٌ، وَزَوْجَةٌ مُؤْمِنَةٌ تُعِينُهُ عَلَى إِيمَانِهِ».

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» سَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، فَقُلْتُ لَهُ: سَالِمُ بْنُ أَبِي الجَعْدِ سَمِعَ مِنْ ثَوْبَانَ؟ فَقَالَ: «لَا»، فَقُلْتُ لَهُ: مِمَّنْ سَمِعَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «سَمِعَ مِنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَذَكَرَ غَيْرَ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3094.
Tirmidhi-Alamiah-3019.
Tirmidhi-JawamiulKalim-3038.




 


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


 

 


1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22392, 22437, இப்னு மாஜா-1856, திர்மிதீ-3094, …


2 . பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர் … வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23101.


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1664,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.