ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிரார்த்தனை வணக்கங்களின் மூளையாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(திர்மிதி: 3371)حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الدُّعَاءُ مُخُّ العِبَادَةِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3293.
Tirmidhi-Shamila-3371.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3317.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். சிலர், குறிப்பிட்ட சில அறிவிப்பாளர்கள் இப்னு லஹீஆ விடமிருந்து அறிவித்தால் அவை சரியானது எனக் கூறியுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-3371 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3196 , கிதாபுத் துஆ-51.
- அபூதாஹிர் அவர்களின் கிதாபுத் துஆ என்ற நூலில் நுஃமான் பின் பஷீர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் ராவீ-33744-ஃபள்ல் பின் முஹம்மது அறியப்படாதவர் என்பதால் அதுவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சமீப விமர்சனங்கள்