தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3604/7

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா மய் யள்லிமுனீ, வகுத் மின்ஹு பிஸஃரீ” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! என் செவியையும், என் பார்வையையும், எனக்குப் பயனுள்ளவையாக ஆக்குவாயாக! அவ்விரண்டையும் என் வாரிசாக (அதாவது நான் மரணிக்கும் வரை சரியாக இயங்குபவையாக) அமைத்துத் தருவாயாக! எனக்கு அநீதி இழைத்தவனுக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! மேலும் என் சார்பில் அவனை நீயே பழிவாங்கிக் கொள்வாயாக!)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 3604/7)

حَدثنا يَحْيَى بْنُ مُوسَى, قَالَ: أَخبَرنا جَابِرُ بْنُ نُوحٍ, قَالَ: أَخبَرنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو, عَنْ أَبِي سَلَمَةَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, قَالَ:

كَانَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم يَدْعُو فَيَقُولُ: اللهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي وَاجْعَلْهُمَا الوَارِثَ مِنِّي, وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي, وَخُذْ مِنْهُ بِثَأْرِي.

قال أَبو عيسى: هذا حديثٌ حسنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3604/7.
Tirmidhi-Alamiah-3535.
Tirmidhi-JawamiulKalim-3565.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . யஹ்யா பின் மூஸா

3 . ஜாபிர் பின் நூஹ் பின் ஜாபிர்

4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

5 . அபூஸலமா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9982-ஜாபிர் பின் நூஹ் பின் ஜாபிர் என்பவர் பற்றி ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை…
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்றும், பலவீனமானவர் என்றும், இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் அஃமஷ், இப்னு அபூகாலித் ஆகியோர் வழியாக முன்கராக-பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார். இவ்வாறு இவர் அதிகம் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்பவர்களின் பட்டியலில் இவர் சேர்ந்தவர் ஆவார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் சில முன்கரான-ஏற்கமுடியாத செய்திகளை அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/500, அல்காமில்-2/337, தஹ்தீபுல் கமால்-4/459, அல்இக்மால்-3/137, அல்காஷிஃப்-2/197, தஹ்தீபுத் தஹ்தீப்-1/283, தக்ரீபுத் தஹ்தீப்-1/192)

இந்தச் செய்தியின் கருத்தை முஹம்மத் பின் அம்ர் அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமாவும் அறிவித்துள்ளார் என்பதால் இது ஹஸன் லிஃகைரிஹீ ஆகும். இதன்படியே திர்மிதீ இமாம் இதை ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.