அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும், லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களும் பேணி (தொடர்ந்து) தொழுது வருகிறாரோ அவரை நரகம் செல்ல விடாமல் அல்லாஹ் தடுப்பான்.
அறிவிப்பவர்: (நபி-ஸல்-அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடர், “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) காஸிம் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் குறிப்புப் பெயர் அபூஅப்திர் ரஹ்மான் என்பதாகும். இவர், அப்துர் ரஹ்மான் பின் காலித் பின் யஸீத் பின் முஆவியா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையாவார்.
காஸிம் (ரஹ்) அவர்கள், ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்த நம்பத்தகுந்த பலமான அறிவிப்பாளர் ஆவார். அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்களின் மாணவரும் ஆவார்.
(திர்மிதி: 428)حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ الشَّامِيُّ قَالَ: حَدَّثَنَا الهَيْثَمُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنِي العَلَاءُ بْنُ الحَارِثِ، عَنْ القَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ أُخْتِي أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»، «وَالقَاسِمُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ يُكْنَى أَبَا عَبْدِ الرَّحْمَنِ، وَهُوَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ ثِقَةٌ شَامِيٌّ، وَهُوَ صَاحِبُ أَبِي أُمَامَةَ»
Tirmidhi-Tamil-393.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-428.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-393.
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28730-அல்அலாஉ பின் ஹாரிஸ் அல்ஹள்ரமீ என்பவர் பற்றி அதிகமானோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
- என்றாலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். இதனால் தான் இவரை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். - அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் இவரின் அறிவித்திறன் மாறிவிட்டது என்று கூறியுள்ளார். - இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள் இவர் குறைந்த ஹதீஸ்களையுடையவர்; முஃப்தியாக இருந்தார்; (இறுதியில்) மூளைக் குழம்பிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்திலும், (இறுதியில்) மூளைக்குழம்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/341, தக்ரீபுத் தஹ்தீப்-5265, 1/759, அல்கவாகிபுன் நய்யிராத்-1/335).
«معرفة الصحابة لابن منده» (ص954):
«حدثنا عبد الرحمن بن يحيى، حدثنا أبو مسعود، أخبرنا عبد الأعلى بن مسهر، حدثنا الهيثم بن حميد، أخبرني العلاء بن الحارث، عن القاسم أبي عبد الرحمن، عن عنبسة، قال: لما حضرته الوفاة جزع، فقيل له: ما جزعك، الم تكن على سمت من الإسلام حسنة؟ قال: وما لي لا أجزع ولست أدري ما أقدم عليه، إن أرجى عملي أني سمعت أختي أم حبيبة تقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من حافظ على أربع ركعات قبل الظهر، وأربع بعدها حرمه الله على النار، والله ما تركتهن إلى يومي هذا.
غريب بهذا الإسناد، والعلاء بن الحارث عزيز الحديث، يجمع حديثه.
ورواه عمرو بن أوس، وأبو صالح، ويعلى الثقفي، ومكحول، ومعبد بن خالد، عن عنبسة، عن أم حبيبة عن النبي صلى الله عليه وسلم قال: من صلى ثنتي عشرة ركعة بني الله له بيتًا في الجنة»
மேற்கண்ட செய்தியை பதிவு செய்த இப்னு மன்தஹ் அவர்கள் இதன் அறிவிப்பாளர்தொடர் ஃகரீப்-அரிதானது என்றும், அல்அலாஉ பின் ஹாரிஸ் குறைந்த ஹதீஸ்களையுடையவர்; இவரின் செய்திகளை ஒன்று திரட்டி ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அன்பஸா அவர்களிடமிருந்து அம்ர் பின் அவ்ஸ், அபூஸாலிஹ், யஃலா, மக்ஹூல், மஃபத் பின் காலித் ஆகியோர் நாள்தோறும் “12 ரக்அத் சுன்னத் தொழுகை” என்று அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: மஃரிஃபதுஸ் ஸஹாபா, பக்கம்: 954)
«علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية» (15/ 277):
«ورواه العلاء بن الحارث، واختلف عنه؛
فرواه هيثم بن حميد، عن العلاء بن الحارث، عن القاسم أبي عبد الرحمن، عن عنبسة، عن أم حبيبة.
وخالفه عبيد الله بن زحر؛ فرواه عن علي بن يزيد، عن القاسم، عن أبي أمامة، عن عنبسة، عن أم حبيبة.
ورواه محمد بن راشد، عن العلاء بن الحارث، عمن حدثه عن عنبسة، عن أم حبيبة، ولم يسمه»
மேலும் இந்த செய்தியை (காஸிம் வழியாக 2 பேரும்); அல்அலாஉ பின் ஹாரிஸ் வழியாக 2 பேரும் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பதை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
1 . ஹைஸம் பின் ஹுமைத் அவர்கள், அல்அலாஉ பின் ஹாரிஸ் —> காஸிம் —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
(பார்க்க: தாரீகுல் கபீர்-160, 7/36 , திர்மிதீ-428 , ஹதீஸுஸ் ஸர்ராஜ்-2169 , அல்முஃஜமுல் கபீர்-, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு மன்தஹ்-, ஷரஹுஸ் ஸுன்னா-, தாரீகு திமிஷ்க்-, அல்முஃஜமுல் கபீர்-, )
2 . உபைதுல்லாஹ் பின் ஸஜ்ர் என்பவர், அலீ பின் யஸீத் —> காஸிம் —> அபூஉமாமா(ரலி) —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
(பார்க்க: அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-, அல்அஃப்ராத்-தாரகுதனீ-, )
3 . முஹம்மது பின் ராஷித் என்பவர், அல்அலாஉ பின் ஹாரிஸ் —> அன்பஸா அவர்களிடமிருந்து அறிவித்தவர் —> அன்பஸா —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
பார்க்க:
(நூல்: அல்இலலுல் வாரிதா-15/277)
காஸிம் வழியாக வேறு சில அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ள செய்திகள்:
4 . ஹிலால் பின் அலா என்பவரின் அறிவிப்பு:
பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-1813 , தாரீகு திமிஷ்க்-,
இவற்றில் முதல் வகை அறிவிப்பாளர்தொடரான-ஹைஸம் பின் ஹுமைத் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரைத் தவிர மற்றவற்றில் அதிகம் விமர்சனம் உள்ளது. (இதைப் பற்றிய தகவல் அதிகம் என்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு இதைப் பதிவு செய்யப்படும்)
2 . மேலும் இதில் வரும் ராவீ-34002-காஸிம் பின் அப்துர்ரஹ்மான் (காஸிம் அபூஅப்துர்ரஹ்மான்) அவர்களை சிலர் பலமானவர் என்று கூறியுள்ளனர். சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். சிலர் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகள் தான் முன்கரானவை என்று கூறியுள்ளனர்.
இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் இடம்பெற்றுள்ள சில செய்திகளை பற்றி கூறப்படும் போது அதை முன்கரான செய்தி என்றும், இதற்கு காரணம் காஸிமின் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.
(மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் மாணவர்களில் ஒருவரான) முஃபள்ளல் பின் ஃகஸ்ஸான் அல்ஃகலாயீ என்பவரும் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)
«المجروحين لابن حبان ت زايد» (2/ 211):
«الْقَاسِم بن عبد الرَّحْمَن مولى يزِيد بن مُعَاوِيَة بن أبي سُفْيَان كنيته أَبُو عبد الرَّحْمَن كَانَ يزْعم أَنه لَقِي أَرْبَعِينَ بَدْرِيًّا روى عَنهُ أهل الشَّام كَانَ مِمَّن يَرْوِي عَن أَصْحَاب رَسُول الله صلى الله عليه وسلم المعضلات وَيَأْتِي عَن الثِّقَات بالأشياء المقلوبات حَيّ يسْبق إِلَى الْقبل أَنه كَانَ الْمُتَعَمد لَهَا أخبرنَا مَكْحُولٌ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ أبان قَالَ سَمِعت أَحْمد بن حَنْبَل وَذكر الْقَاسِم مولى يزِيد بن مُعَاوِيَة فَقَالَ مُنكر الحَدِيث مَا أرى الْبلَاء إِلَّا من قبل الْقَاسِم»
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் நபித்தோழர்களிடமிருந்து முஃளலான செய்திகளை அறிவிப்பவர்; பலமானவர்கள் வழியாக, நம்பும்படியாக மாறுபட்ட செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக மக்ஹூல் —> ஜஃபர் பின் அபான் —> அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் என்ற அறிவிப்பாளர்தொடரில் கூறியுள்ளார்.
(நூல்: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/212)
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்திலும், அதிகம் ஃகரீபான-அரிதான செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/792)
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தாலும் மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் வழியாக வரும் செய்திகளை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று தெரிகிறது.
மேற்கண்ட செய்தி மற்ற பலமானவர்களின் செய்திக்கு மாற்றமாக உள்ளது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(மேலும், இந்த செய்தியை காஸிம் அவர்கள், அன்பஸா அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் கூட இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறியிருந்தாலும் இதை உறுதியாக கூறமுடியாது)
மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .
சமீப விமர்சனங்கள்