பாடம்: 72
மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு ரக்அத் தொழுதுள்ளார்கள் என்றக் கருத்து அடங்கியுள்ளது.
بَابُ مَا ذُكِرَ فِي الصَّلَاةِ بَعْدَ المَغْرِبِ أَنَّهُ فِي البَيْتِ أَفْضَلُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الوَزِيرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ»: وَقَدْ رُوِيَ عَنْ حُذَيْفَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى المَغْرِبَ فَمَا زَالَ يُصَلِّي فِي المَسْجِدِ حَتَّى صَلَّى العِشَاءَ الآخِرَةَ» فَفِي هَذَا الْحَدِيثِ دِلَالَةٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الرَّكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي المَسْجِدِ
Tirmidhi-Tamil-549.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-604.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-549.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7185-கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களின் மகன் இஸ்ஹாக் பின் கஅப் என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் மஸ்தூர்-அதாவது இவரின் நம்பகத்தன்மையோ, குறையோ அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: லிஸானுல் மீஸான்-9/257, தஹ்தீபுத் தஹ்தீப்-1/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/131)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இந்தச் செய்தி மஹ்மூத் பின் லபீத் (ரலி) வழியாக ஹஸன் தரத்தில் வந்துள்ளது. (பார்க்க: அஹ்மத்-23624)
2 . இந்தக் கருத்தில் கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1300 , திர்மிதீ-604 , நஸாயீ-1600 , இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: அஹ்மத்-23624 .
சமீப விமர்சனங்கள்