658.
யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்த பாடத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களின் மனைவி ஜைனப், ஜாபிர், அபூஹுரைரா (ரலி) ஆகியோரிடமிருந்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன. சல்மான் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் ஹதீஸ் ஹஸனானதாகும். அர்-ரபாப் என்பவர் அர்-ராயிஹ் பின்த் ஸுலைஃவின் தாயார் ஆவார்.
இவ்வாறே ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரீ அவர்கள் → ஆஸிம் → ஹஃப்ஸா பின்த் ஸீரீன் → ரபாப் → சல்மான் இப்னு ஆமிர் → நபி (ஸல்) அவர்கள் என்ற வழியாக இது போன்ற ஹதீஸை அறிவித்துள்ளார்.
ஷுஃபா அவர்கள் → ஆஸிம் → ஹஃப்ஸா பின்த் ஸீரீன் → சல்மான் இப்னு ஆமிர் என்று அறிவித்துள்ளார், இதில் ரபாப் அவர்களை குறிப்பிடவில்லை.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரீ மற்றும் இப்னு உயைனா அவர்களின் அறிவிப்பே மிகச் சரியானதாகும். இவ்வாறே இப்னு அவ்ன் மற்றும் ஹிஷாம் இப்னு ஹஸ்ஸான் ஆகியோரும் → ஹஃப்ஸா பின்த் ஸீரீன் → ரபாப் → சல்மான் இப்னு ஆமிர் என்ற வழியாக அறிவித்துள்ளனர்.
بَابُ مَا جَاءَ فِي الصَّدَقَةِ عَلَى ذِي القَرَابَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ الرَّبَابِ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنَّهُ بَرَكَةٌ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالمَاءُ فَإِنَّهُ طَهُورٌ» وقَالَ: ” الصَّدَقَةُ عَلَى المِسْكِينِ صَدَقَةٌ، وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ “
وَفِي البَابِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَجَابِرٍ، وَأَبِي هُرَيْرَةَ.: «حَدِيثُ سَلْمَانَ بْنِ عَامِرٍ حَدِيثٌ حَسَنٌ، وَالرَّبَابُ هِيَ أُمُّ الرَّائِحِ بِنْتُ صُلَيْعٍ»، وَهَكَذَا رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا الحَدِيثِ، وَرَوَى شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ الرَّبَابِ، وَحَدِيثُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ عُيَيْنَةَ أَصَحُّ وَهَكَذَا رَوَى ابْنُ عَوْنٍ، وَهِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-658.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-594.
சமீப விமர்சனங்கள்