தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-664

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(திர்மதி: 664)

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ الحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-664.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-600.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25306-அப்துல்லாஹ் பின் ஈஸா பின் காலித் அல்கஸ்ஸாஸ் என்பவரை பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும், குளறுபடியாக அறிவிப்பவர்; இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-15/416, தஹ்தீபுத் தஹ்தீப்-2/401, தக்ரீபுத் தஹ்தீப்-1/534)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

உக்பா பின் முக்ரம்…

பார்க்க: திர்மிதீ-664 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-,

ஸாலிஹ் பின் பஷீர்… 

…முஸ்னத் அபீ யஃலா-,


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-943 .

4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

5 . ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3228 .

6 . அபூபக்ர் …


இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.


சரியான செய்தி பார்க்க: புகாரி-660 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.