முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இரகசியமாக தர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணித்துவிடும்.
நன்மைகள், தீமைகளை வீழ்த்திவிடும்.
உறவை பேணி நடப்பது, ஆயுளை அதிகரிக்க செய்யும். வறுமையை நீக்கும்.
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாக கூறுங்கள். ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்.
மேலும் அதில் தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்துள்ளது. அவற்றில் மிகச் சிறியது கவலையாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(almujam-alawsat-943: 943)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَمْرٌو قَالَ: نا صَدَقَةُ، عَنِ الْأَصْبَغِ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَإِنَّ صَنَائِعَ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السَّوْءِ، وَإِنَّ صِلَةَ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَتَقِي الْفَقْرَ. وَأَكْثِرُوا مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا وَقُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ، وَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً، أَدْنَاهَا الْهَمُّ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ بَهْزٍ إِلَّا الْأَصْبَغُ، وَلَا عَنِ الْأَصْبَغِ إِلَّا صَدَقَةُ، تَفَرَّدَ بِهِ: عَمْرٌو
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-943.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-963.
இந்தச் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சுருக்கமாகவும், விரிவாகவும் வந்துள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸதகா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்…
3 . இந்தக் கருத்தில் முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் அபூஸலமா —> ஸதகா …
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-943, 3450, அல்முஃஜமுல் கபீர்-1017, 1018, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . இந்தச் செய்தியின் 5 ஆவது பகுதியின் கருத்தில் வந்துள்ள செய்திகள்:
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-541.
இதனுடன் தொடர்புடைய பிற செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-664, புகாரி-4205,
சமீப விமர்சனங்கள்