அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ்”
(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது)
என்று ஒருவர் கூறினால் அது அவருக்கு தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கு மருந்தாகும். அவற்றில் மிகவும் சிறியது கவலை எனும் நோயாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(musnad-ishaq-ibn-rahawayh-541: 541)
أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، نا بِشْرُ بْنُ رَافِعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ كَانَتْ لَهُ دَوَاءً مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-541.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-473.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்
2 . அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம்
3 . பிஷ்ர் பின் ராஃபிஃ
4 . முஹம்மத் பின் அஜ்லான்
5 . அவரது தந்தை-அஜ்லான் (ஃபாத்திமா பின்த் உத்பா (ரலி) அவர்களின் அடிமை)
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9137-பிஷ்ர் பின் ராஃபிஃ-அபுல்அஸ்பாத், ஹாரிஸீ, நஜ்ரானீ, யமானீ, யமாமீ, கூஃபீ பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலமானவர்; (சில) முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் செய்திகளில் பிரச்சனை இல்லை. இவரிடம் நான் முன்கரான செய்திகளைக் காணவில்லை. இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். - யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார். - பஸ்ஸார் அவர்கள், இவரை சிறிது பலவீனமானவர்; இவரின் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒரு இடத்தில் கூறியுள்ளார். வேறு இடத்தில் இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். (முஸ்னத் பஸ்ஸார்- 2685, 8818)
- ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவர் விடப்பட்டவர் அல்ல என்று கூறியுள்ளார்.
மேற்கண்ட அறிஞர்கள் இவரைப் பற்றி இப்படிக் கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இப்னு அப்துல்பர் போன்றோர் இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இப்னு தாஹிர் கூறியுள்ளார். - அபூபிஷ்ர் தூலாபீ அவர்கள், இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
- திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
الكامل في ضعفاء الرجال (2/ 164):
حَدَّثَنَا ابْن أبي بكر، حَدَّثَنا عباس سمعت يَحْيى يَقُولُ حاتم بْن إسماعيل يروي، عَن أَبِي أسباط الحارثي شيخ كوفي، وَهو ثقة قلت لَهُ هُوَ ثقة قَالَ يَحْيى يحدث بمناكير.
الكامل في ضعفاء الرجال (2/ 166):
وَقَالََ الشَّيْخُ: بِشْرُ بْنُ رَافِعٍ هُوَ أَبُو الأَسْبَاطِ الْحَارِثِيُّ وَلِبِشْرِ بْنِ رَافِعٍ غَيْرُ هَذَا مِنَ الأَحَادِيثِ مِمَّا يَرْوِيهِ عَنْهُ صَفْوَانُ بْنُ عِيسَى، وَعَبد الرَّزَّاق وَغَيْرُهُمَا، وَهو مُقَارَبُ الْحَدِيثِ لا بَأْسَ بِأَخْبَارِهِ وَلَمْ أَجِدْ لَهُ حديثًا منكرا وَعِنْدَ البُخارِيّ أَنَّ بِشْرَ بْنَ رَافِعٍ هَذَا أَبُو الأَسْبَاطِ الْحَارِثِيُّ وَعِنْدَ يَحْيى بْنِ مَعِين أَنَّ أَبَا أَسْبَاطٍ شَيْخٌ كُوفِيٌّ وَلَكِنْ قَدْ ذَكَرَ يُوسُفُ بْنُ سَلْمَانَ عَنْ حَاتِمٍ، عَن أَبِي أَسْبَاطٍ الْحَارِثِيِّ الْيَمَانِيِّ وَعِنْدَ النَّسَائِيِّ أَنَّ بِشْرَ بْنَ رَافِعٍ غَيْرُ أَبِي الأسباط وما قاله البُخارِيّ فمحتمل وَمَا قَالَهُ يَحْيى وَالنَّسَائِيُّ فَمُحْتَمَلٌ أَيضًا وَاللَّهُ أَعْلَمُ أَنَّهُمَا وَاحِدٌ أَوِ اثْنَانِ وَبِشْرُ بْنُ رَافِعٍ، وأَبُو الأَسْبَاطِ إِنْ كَانَا اثْنَيْنِ فَلَهُمَا أَحَادِيثُ غَيْرَ مَا ذَكَرْتُهُ وَكَأَنَّ أَحَادِيثَ بِشْرِ بْنِ رَافِعٍ أَنْكَرُ مِنْ أَحَادِيثِ أَبِي الأَسْبَاطِ.
…
النكت الجياد المنتخبة من كلام شيخ النقاد (1/ 227):
[122] بشر بن رافع الحارثي أبو الأسباط النجراني:
في ترجمته من “الجرح والتعديل” (2/ 357) رقم (1359): “يمامي“.
فعلق الشيخ المعلمي بقوله: كذا، وفي تاريخ البخاري والتهذيب “يماني” ويأتي عن ابن معين “كوفي” والرجل يماني نسبًا ودارًا؛ لأنه حارثي نجراني، وفي تاريخ البخاري عن عبد الرزاق: “بشر إمام أهل نجران ومفتيهم”. ولكنه دخل اليمامة بدليل روايته عن يحيى بن أبي كثير، ودخل الكوفة أيضًا. اهـ.
…
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-541, அல்முஃஜமுல் அவ்ஸத்-5028, ஹாகிம்-1990,
2 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3541.
3 . முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-943.
4 . அபூதர் – மஹாமிலீ-287, தல்கீஸ்-பஃக்தாதீ-2/657,
ஹிஷாம் பின் ஸஃத்…
(ஸஹீஹா-1528..)
5 . இப்னு அப்பாஸ் — தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-341.
அம்ர் பின் ஷமிர்…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . லா ஹவ்ல வலா குவ்வத என்பதின் சிறப்புகள்:
பார்க்க: புகாரி-4205,
சமீப விமர்சனங்கள்