தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3061

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஸம்ஸம் தண்ணீரை பருகுதல்.

முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒரு மனிதர் வந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கவர், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு? என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.

(இப்னுமாஜா: 3061)

بَابُ الشُّرْبِ، مِنْ زَمْزَمَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ:

قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ جَالِسًا، فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: مِنْ زَمْزَمَ، قَالَ: فَشَرِبْتَ مِنْهَا، كَمَا يَنْبَغِي؟ قَالَ: وَكَيْفَ؟ قَالَ: إِذَا شَرِبْتَ مِنْهَا، فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَتَنَفَّسْ ثَلَاثًا، وَتَضَلَّعْ مِنْهَا، فَإِذَا فَرَغْتَ، فَاحْمَدِ اللَّهَ عَزَّ وَجَلَّ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ آيَةَ مَا بَيْنَنَا، وَبَيْنَ الْمُنَافِقِينَ، إِنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ، مِنْ زَمْزَمَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3061.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3060.




(இந்த செய்தியில் ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறை என்று சில விசயங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிடவில்லை.

இந்த செய்தியில் “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்பது மட்டுமே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39782-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர்-அபுஸ்ஸவ்ரைன் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/623, தக்ரீபுத் தஹ்தீப்-1/868)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • இந்த செய்தியை அறிவிக்கும் உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியர் யார் என்பது பற்றி மூன்று வகையான அறிவிப்பாளர்தொடர்களில் மூன்று பேரை கூறப்பட்டுள்ளது.

1 . அப்துல்லாஹ் பின் அபூமுலைகா (அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ்)

உஸ்மான் பின் அஸ்வத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் ஸகரிய்யா, அப்துர்ரஹ்மான் பின் உமர், ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஃபள்ல் பின் மூஸா ஆகிய நான்கு பேரும் உஸ்மான் பின் அஸ்வத் —>  அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் பதிவில் மட்டும் உஸ்மான் பின் அஸ்வத் அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. இது தவறாகும். உஸ்மான் பின் அஸ்வத், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை. பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இந்த செய்தியை ஹாகிமிடமிருந்து அறிவிக்கும் போது உஸ்மான் பின் அஸ்வத் அவர்களுக்கும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் என்பவரை கூறியுள்ளார்.

2 . முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர்.

உஸ்மான் பின் அஸ்வத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் மூஸா, மக்கீ பின் இப்ராஹீம், அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் உஸ்மான் பின் அஸ்வத் —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

3 . இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தோழர்.

உஸ்மான் பின் அஸ்வத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ என்பவர் உஸ்மான் பின் அஸ்வத் —> இப்னு அப்பாஸின் நண்பர் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை இவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பதால் இது ஷாத் என்ற வகையில் பலவீனமாகும்.

1 . இந்த மூன்று வகை அறிவிப்பாளர்தொடர்களில் இரண்டாம் வகை அறிவிப்பாளர்தொடரை அறிவிப்பவர்களே மிகப்பலமானவர்கள் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கருதுவதால் இதற்கே முன்னுரிமை தந்துள்ளார். மேலும் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தியே பலவீனமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இர்வா-1125)

2 . உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியர்களில் அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் அவர்களும் அடங்குவார் என்பதாலும், இவரை உஸ்மான் பின் அஸ்வதின் ஆசிரியராக கூறி அறிவிப்பவர்களும் பலமானவர்கள் என்பதாலும் இந்த செய்தியை உஸ்மான் பின் அஸ்வத், இருவரிடமிருந்தும் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியர்களில் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் என்பவர் பலவீனமானவர் என்றாலும் மற்றொரு ஆசிரியரான அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பலமானவர் என்பதால் இந்த செய்தி சரியானது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

  • நாம் பார்த்தவரை இந்த இரண்டு கருத்துக்களில் இரண்டாம் வகை அறிவிப்பாளர்தொடரை அறிவிப்பவர்களே மிகப்பலமானவர்களாக உள்ளனர். முதல் வகை அறிவிப்பாளர்தொடரை அறிவிப்பவர்கள் அந்தளவிற்கு பலமானவர்கள் அல்ல என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களின் கருத்தே சரியாக தெரிகிறது. எனவே இந்த செய்தி பலவீனமானதாகும்.
  • மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இந்த செய்தியை (கால அளவில் ஏழாவது படித்தரமான) அபூஃகிராரா என்ற முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர்-இப்னு அபூமுலைகா என்பவரைப் பற்றியக் குறிப்பில் இவரின் ஹதீஸாக பதிவு செய்துள்ளார். (இவர் பலவீனமானவர் ஆவார்). இந்த செய்தியில் உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியரை சிலர் இப்னு அபூமுலைகா என்றும்; சிலர் அப்துர்ரஹ்மான் பின் அபூமுலைகா என்றும்; சிலர் அப்துல்லாஹ் பின் அபூமுலைகா என்றும் மாறுபட்டு அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-468, 1/463)

(இவரைப் பற்றிய குறிப்பு: தக்ரீபுத் தஹ்தீப்-1/868)

(புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களின் குறிப்பின்படி பார்த்தால் இப்னு அபூமுலைகா என்பதும், முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் என்பதும் ஒருவரை தான் குறிக்கிறது என்று தெரிகிறது. சிலர் இப்னு அபூமுலைகா என்ற பட்டப் பெயருள்ள அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் என்று தவறாக புரிந்துவிட்டனர். எனவே முதல்வகை அறிவிப்பாளர்தொடர் குளறுபடியாக இருப்பதால் அதைச் சரியானது என்று கூறுவது தவறாகும்.)

  • தண்ணீரைக் குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும் என்பதற்கும்; மூன்று மிடராக குடிக்கவேண்டும் என்பதற்கும்; குடித்தப்பின் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பதற்கும் வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன…

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உஸ்மான் பின் அஸ்வத் —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: இப்னு அபீ ஷைபா-24175 , இப்னு மாஜா-3061 , குப்ரா பைஹகீ-9658 ,

  • உஸ்மான் பின் அஸ்வத் —> அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அப்துர் ரஸ்ஸாக்-9111 , அல்முஃஜமுல் கபீர்-11246 , தாரகுத்னீ-2736 , 2737 , குப்ரா பைஹகீ-9657 ,

  • உஸ்மான் பின் அஸ்வத் —> இப்னு அப்பாஸின் நண்பர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: குப்ரா பைஹகீ-9656 ,

  • உஸ்மான் பின் அஸ்வத் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஹாகிம்-1738 ,

  • அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9110 ,

  • அதாஉ பின் யஸார் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10763 ,

2 . …

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3062 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.