தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-9110

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸம்ஸம் நீரை குடிக்கும் முறை (என்னவெனில் ஸம்ஸம் நீருள்ள) வாளியை எடுத்து பிறகு கிப்லாவை முன்னோக்கி வயிறு நிரம்ப குடிப்பதாகும். ஏனெனில் நயவஞ்சகர்கள் வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-9110: 9110)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ: أَنَّ ابْنَ عَبَّاسٍ قَالَ:

«شُرْبُ زَمْزَمَ بِأَخْذِ الدَّلْوِ، ثُمَّ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ، فَيَشْرَبُ مِنْهَا حَتَّى يَتَضَلَّعَ، فَإِنَّهُ لَا يَتَضَلَّعُ مِنْهَا مُنَافِقٌ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-9110.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-8902.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16183-ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பற்றி சிலர் பாராட்டியிருந்தாலும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
     நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்ற பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரை அதிகம் தவறிழைப்பவர் என்றும்; முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/635, தக்ரீபுத் தஹ்தீப்-1/340)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3061 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.