பாடம்:
ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டியவை.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம அவூது பி(க்)க அன் அழில்ல அவ் உழல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறாமல் செல்லமாட்டார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், பிறரால் வழிக்கெடாமலும்; நான் சறுகி விடாமலும், வழி தவறிவிடாமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
(அபூதாவூத்: 5094)بَابُ مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:
مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ: «اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4430.
Abu-Dawood-Shamila-5094.
Abu-Dawood-Alamiah-4430.
Abu-Dawood-JawamiulKalim-4432.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20513-ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
- அலீ பின் மதீனீ அவர்கள், ஆமிர் அஷ்ஷபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்கவில்லை என்று தனது இலலில் கூறியுள்ளதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுவிட்டு இந்த அறிவிப்பாளர்தொடரை முன்கதிஃ என்று கூறியுள்ளார்.
(நூல்: நதாஇஜுல் அஃப்கார்-1/157)
(ஆனால் நாம் பார்த்தவரை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் இலலில் அவ்வாறு இல்லை).
- ஆமிர் அஷ்ஷபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் கூறியதாக அபூஉபைத் ஆஜுரீ கூறியுள்ளார்.
(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ-171)
மேற்கண்ட இருவகையான தகவல்களினால் தான் இந்த செய்தி சரியானதா? பலவீனமானதா? என்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் இலலில் இந்த தகவல் இல்லை என்பதால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இதை தவறுதலாக கூறியிருக்கலாம் என்று சிலர் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் கூற்றின்படி இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.
ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் பிறந்த வருடம்
நான் ஜலூலா போர் நடைபெற்ற வருடம் (ஹிஜ்ரீ 16 இல்) பிறந்தேன் என்று கூறியதாக இப்னு உயைனா அறிவித்துள்ளார். என்றாலும் இதில் மிகப் பலவீனமானவரான ஸரிய்யு பின் இஸ்மாயீல் இடம்பெற்றுள்ளார் என்பதால் இது சரியான கருத்தல்ல.
ஹிஜ்ரீ 19, 20 , 21 , 31 இல் பிறந்தார் என்று வரலாற்று நூல்களில் பலவாறு கூறப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள், உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகே இவர் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவர் ஹிஜ்ரீ 23 இல் பிறந்தார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
அதிகமானோர் ஹிஜ்ரீ 19 என்று கூறியிருப்பதால் சிலர் இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 19 தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் இறந்த வருடம்
இவர் ஹிஜ்ரீ 104 இல் இருந்து 110 க்குள் உள்ள வருடங்களை குறிப்பிட்டு இவற்றில் இறந்தார் என்று பலவாறு வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இவர் ஹிஜ்ரீ 103 அல்லது 104 இல், தனது 82 வது வயதில் இறந்தார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/70, அல்காஷிஃப்-3/59…)
…ஆமிர் அவர்கள் கூஃபாவாசி ஆவார். இவர் மதீனாவிற்கு சென்றது ஹிஜ்ரீ 66 ல் தான். கூஃபாவின் ஆட்சியாளர் முக்தாரிடம் ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஆமிர் அவர்கள் மதீனாவிற்கு சென்றார். இது நடந்தது ஹிஜ்ரீ 66 அல்லது 65 தான். உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மரணித்த வருடம் பற்றி ஹிஜ்ரீ 59 அல்லது ஹிஜ்ரீ 61 அல்லது ஹிஜ்ரீ 62, 63 என்றும் வரலாற்றுத் தகவல் உள்ளது. இதன்படி ஆமிர் அஷ்ஷபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்றும் முடிவு செய்யலாம்…
- இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் பலதரப்பட்ட வகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவைகளில் மன்ஸூர் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> உம்மு ஸலமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல்-முன்னுரிமை பெற்ற அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார். (காரணம் மிகப்பலமான அறிவிப்பாளர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஜரீர், இத்ரீஸ் போன்ற பலர் இவ்வாறே அறிவித்துள்ளனர்)
(நூல்: அல்இலலுல் வாரிதா-3964 (15/221).
- இந்தச் செய்தியை அபூபக்ர் அல்ஹுதலீ, மைமூனா (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்திருப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4021 (15/268).
- ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லையென்றால் இந்த செய்தி முர்ஸல் என்று ஆகிவிடும்.
ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் 48 நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். இவரின் முர்ஸலான செய்திகளும் சரியானவைகளே என்று இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: மஃரிஃபதுஸ் ஸிகாத்-751 (2321, 2/446)
- இதனடிப்படையில் இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றவர்கள் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது என்பதின்படி இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.
(நூல்: அஸ்ஸஹீஹா-3163)
…
ஆய்வுக்காக: ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> உம்மு ஸலமா (ரலி) .
1 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> உம்மு ஸலமா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-3884 , அபூதாவூத்-5094 , திர்மிதீ-3427 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-5486 , 5539 , அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-1907 , குப்ரா பைஹகீ-10309 ,
2 . மைமூனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> அப்துல்லாஹ் பின் ஷத்தாத் —> மைமூனா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1735 , அல்முஃஜமுல் கபீர்-11 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2383 , …
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ பற்றிய ஹதீஸ்கள்:
1 . அபூதாவூத்-5094 ,
2 . அபூதாவூத்-5095 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்