ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
அல்குர்ஆனுக்கு (அதன் ஞானமின்றி) சுயவிளக்கம் அளிப்பவனுக்குரிய தண்டனை குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
யார் குர்ஆனில் (அதன் வசனங்கள் குறித்த) ஞானமின்றி (அதற்கு) சுயவிளக்கமளிக்கிறாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(திர்மிதி: 2950)بَابُ مَا جَاءَ فِي الَّذِي يُفَسِّرُ القُرْآنَ بِرَأْيِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-2874.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2950.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2893.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் என்பவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆவார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஸுஃப்யான் பின் வகீஃ பின் அல்ஜர்ராஹ் என்று கூறியிருப்பது தவறாகும். காரணம் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
தான் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். ஸுஃப்யான் பின் வகீஃ அல்ல. - இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2951 .
சமீப விமர்சனங்கள்