தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-8556

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 “நீங்கள் ஆயுதமேந்திய மூன்று மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (அவர்களை நான் அடைந்தால்) நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்துக் கூறுங்கள்” என்று கூறினார்.

அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களால் ஷாமுடன் இணைய முடியாவிட்டால் (உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்கள் அஸல் பகுதியான) யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

(ஹாகிம்: 8556)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ الْخَوْلَانِيُّ، ثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ مَكْحُولٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

سَتُجَنَّدُونَ أَجْنَادًا: جُنْدًا بِالشَّامِ، وَجُنْدًا بِالْعِرَاقِ، وَجُنْدًا بِالْيَمَنِ ” قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ اخْتَرْ لِي، قَالَ: «عَلَيْكُمْ بِالشَّامِ، فَمَنْ أَبَى فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، وَلْيَسْقِ مِنْ غُدُرِهِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخْرِجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8556.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8653.




மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18609.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.