தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-183

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களிடமிருந்து காலித் பின் மஃதான் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தேவைகள் நிறைவேறுவதற்கு (அவற்றை பிறருக்கு) மறைப்பதின் மூலம் உதவி தேடுங்கள். ஏனெனில் ஏதேனும் ஒரு அருட்கொடை பெறப்பட்ட ஒவ்வொருவரும், (பிறரால்) பொறாமைக்கு ஆட்படுவார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 183)

خَالِدُ بْنُ مَعْدَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ

حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ الْكَشِّيُّ، ثنا سَعِيدُ بْنُ سَلَّامٍ الْعَطَّارُ، ثنا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اسْتَعِينُوا عَلَى إِنْجَاحِ الْحَوَائِجِ بِالْكِتْمَانِ، فَإِنَّ كُلَّ ذِي نِعْمَةٍ مَحْسُودٌ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-183.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16639.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அபூமுஸ்லிம்-இப்ராஹீம் பின் அப்துல்லாஹ்

3 . ஸயீத் பின் ஸல்லாம் அல்அத்தார்

4 . ஸவ்ர் பின் யஸீத்

5 . காலித் பின் மஃதான்

6 . முஆத் பின் ஜபல் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் சில அறிவிப்பாளர்தொடர்களில் பொய்யர்கள் இடம்பெறுவதாலும், வேறு சில அறிவிப்பாளர்தொடர்களில் பலவீனமானவர்கள் இடம்பெறுவதாலும் இது மிக பலவீனமான செய்தியாகும்.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17331-ஸயீத் பின் ஸல்லாம் அல்அத்தார் என்பவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    போன்ற ஹதீஸ்கலை அறிஞர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சித்துள்ளனர்.
  • வேறு சிலர், இவர் முன்கருல் ஹதீஸ் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-4/55)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ரூயானீ-, இஃதிலாலுல் குலூப்-, அல்முஃஜமுல் கபீர்-183, அல்முஃஜமுல் அவ்ஸத்-, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, .. ஷுஅபுல் ஈமான்-, …


அக்பாரு அஸ்பஹான்-2069, அம்ஸாலுல் ஹதீஸ்-,


2 . அலீ பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு பஃக்தாத்-,


4 . அப்துல்லாஹ் பின் அபூபுர்தா வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஆதாபுஸ் ஸுஹ்பா-,


5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகு ஜுர்ஜான்-292, ரவ்ளதுல் உகலா-91,


  • தாரீகு ஜுர்ஜான்-292.

تاريخ جرجان (ص223):
وَأَخْبَرَنَا أَبُو بَكْرٍ الإِسْمَاعِيلِيُّ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عُمَيْرٍ حَدَّثَنَا سَيَّارُبْنُ نَصْرِ بْنِ سَيَّارٍ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ بِحَلَبَ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ أَيُّوبَ الطَّالِقَانِيُّ حَدَّثَنَا سَهْلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُرْجَانِيُّ لَقِيتُهُ بِالْبَادِيَةِ بِسُوقِ فَيْدَ عَنْ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: “اسْتَعِينُوا عَلَى الْحَوَائِجِ بِكِتْمَانِهَا فإن لكل نعمة حاسد”.


  • ரவ்ளதுல் உகலா-91.

روضة العقلاء ونزهة الفضلاء (ص: 187)
أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ الدَّلالُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعِيدٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا الهيثم بن أيوب العطار السلمي حَدَّثَنَا سَهْلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ أَبِي غَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ عُرْوَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعِينُوا عَلَى الحوائج بكتمان السر فَإِنَّ لِكُلِّ نِعْمَةٍ حَاسِدًا
قال أَبُو حاتم رَضِيَ اللَّه عنه هذا إساند حسن وطريق غريب إن كان عروة هذا هو ابن الزبير بْن العوام وسعيد بْن سلام مَا أرى حفظ حديثه فلذلك تنكبت عَن ذكره


6 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இஃதிலாலுல் குலூப்-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.