தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஹதீஸ்துறையின் முக்கிய அம்சங்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹதீஸ்துறையும், ஃபிக்ஹ் எனும் சட்டதுறையும்.

அபூதர்-அம்மார் பின் முஹம்மத் பின் மக்லத் அத்தமீமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுல்முளஃப்பர்-முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹாமித் பின் ஃபுளைல் அல்புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியுற்றேன்:

அபுல்அப்பாஸ்-அல்வலீத் பின் இப்ராஹீம் பின் ஸைத் அல்ஹமதானீ அவர்கள் ‘ரய்’ நகரின் நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அபுல்ஃபள்ல்-பல்அம்மீ என்பவருடன் இருந்த பழைய நட்பை புதுப்பிப்பதற்காக புகாரா நகருக்கு வருகை தந்தார். அவர் எங்கள் அண்டை வீட்டில் தங்கினார்.

எனது ஆசிரியர் அபூஇப்ராஹீம்-இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்குத்தலீ (ரஹ்) அவர்கள் என்னை அவரிடம் அழைத்துச் சென்று, ‘தாங்கள் செவியுற்ற ஹதீஸ் அறிவிப்புகளை இந்தச் சிறுவனுக்கு அறிவிக்குமாறு உங்களிடம் நான் கேட்கிறேன்’ என்று கூறினார்.

அதற்கு அபுல்அப்பாஸ் அவர்கள், ‘எனக்கு செவியுற்ற அறிவிப்புகள் (அதாவது ஆசிரியர்களிடம் அறிவிப்பாளர்தொடருடன் கேட்ட ஹதீஸ்கள்) எதுவும் இல்லை’ என்று பதிலளித்தார்.

அதற்கு எனது ஆசிரியர் அபூஇப்ராஹீம், ‘தாங்கள் ஒரு ஃபகீஹ்-சட்ட வல்லுநர் ஆயிற்றே! இது எவ்வாறு சாத்தியம்? இதன் மர்மம் என்ன?’ என்று வினவினார்.

அதற்கு அபுல்அப்பாஸ் கூறினார்: ‘நான் பருவ வயதை அடைந்தபோது, எனக்கு ஹதீஸ்கள், அதன் அறிவிப்பாளர்கள், அவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனவே, நான் வரலாற்றின் ஆசிரியரும், ஹதீஸ் அறிவில் தலைசிறந்தவருமான புகாராவில் இருந்த முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களை நாடிச் சென்று எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்து, இதில் எனக்கு உதவுமாறு வேண்டினேன்.

அதற்கு அவர்கள் எனக்குக் கூறினார்கள்: ‘எனதருமை மகனே! எந்தவொரு விஷயத்திலும் அதன் வரம்புகளையும், அதன் மதிப்பையும் அறிந்து கொள்ளாமல் நுழையாதே!’

உடனே நான் அவரிடம், ‘அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! நான் நாடி வந்த விஷயத்தின் வரம்புகளையும், அதன் மதிப்புகளையும் எனக்குத் தெளிவுபடுத்துங்கள்’ என்று கேட்டேன்.

அவர்கள் கூறினார்கள்: ‘அறிந்து கொள்வாயாக! ஒரு மனிதர் முழுமையான ஹதீஸ்துறை அறிஞராக மாறவேண்டும் என்றால் அவர் (பின்வரும்) நான்கு, நான்கு அம்சங்களை எழுதிக் கொள்ள-தெரிந்துக் கொள்ள வேண்டும்.

(இதை சரியாக கடைபிடிக்க முடியாவிட்டால் ஃபிக்ஹ் எனும் மார்க்க சட்டதுறையில் ஈடுபடுமாறு புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறிவிட்டார்)


இந்த சம்பவம் சில ஹதீஸ்கலை நூல்களில் கூறப்பட்டுள்ளது.

الإلماع إلى معرفة أصول الرواية وتقييد السماع (ص30):

لَمَّا عُزِلَ أَبُو الْعَبَّاسِ الْوَلِيدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ زيد الهمدانى عَن قَضَاء الرى وَرَدَ بُخَارَي لِتَجْدِيدِ مَوَدَّةٍ كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَبِي الْفَضْلِ الْبَلْعَمِيِّ فَنَزَلَ فِي جِوَارِنَا فَحَمَلَنِي مُعَلِّمِي أَبُو إِبْرَاهِيم إِسْحَق ابْن إِبْرَاهِيم الختلى إِلَيْهِ وَقَالَ لَهُ أَسْأَلُكَ أَنْ تُحَدِّثَ هَذَا الصَّبِيَّ بِمَا سَمِعْتَ مِنْ مَشَايِخِكَ
قَالَ مَالِي سَمَاعٌ
قَالَ فَكَيْفَ وَأَنْتَ فَقِيهٌ فَمَا هَذَا
قَالَ لِأَنِّي لَمَّا بَلَغْتُ مَبْلَغَ الرِّجَالِ تَاقَتْ نَفْسِي إِلَى مَعْرِفَةِ الْحَدِيثِ وَمَعْرِفَةِ الرِّجَالِ وَدِرَايَةِ الْأَخْبَارِ وَسَمَاعِهَا فَقَصَدْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ الْبُخَارِيَّ بِبُخَارَى صَاحِبَ التَّارِيخِ وَالْمَنْظُورَ إِلَيْهِ فِي مَعْرِفَةِ الْحَدِيثِ وَأَعْلَمْتُهُ مُرَادِي وَسَأَلْتُهُ الْإِقْبَالَ عَلَيَّ فِي ذَلِكَ


1 . فَقَالَ لِي يَا بُنَيَّ لَا تَدْخُلْ فِي أَمْرٍ إِلَّا بَعْدَ مَعْرِفَةِ حُدُودِهِ وَالْوُقُوفِ عَلَى مَقَادِيرِهِ
فَقُلْتُ لَهُ عَرِّفْنِي رَحِمَكَ اللَّهُ حُدُودَ مَا قَصَدْتُكَ لَهُ وَمَقَادِيرَ مَا سَأَلْتُكَ عَنْهُ


فَقَالَ لِي اعْلَمْ أَنَّ الرَّجُلَ لَا يَصِيرُ مُحَدِّثًا كَامِلًا فِي حَدِيثِهِ إِلَّا بَعْدَ أَنْ يَكْتُبَ أَرْبَعًا مَعَ أَرْبَعٍ كَأَرْبَعٍ مِثْلِ أَرْبَعٍ فِي أَرْبَعٍ عِنْدَ أَرْبَعٍ بِأَرْبَعٍ عَلَى أَرْبَعٍ عَنْ أَرْبَعٍ لِأَرْبَعٍ

وَكُلُّ هَذِهِ الرُّبَاعِيَّاتُ لَا تَتِمُّ لَهُ إِلَّا بِأَرْبَعٍ مَعَ أَرْبَعٍ

فَإِذَا تَمَّتْ لَهُ كُلُّهَا هَانَ عَلَيْهِ أَرْبَعٌ وَابْتُلِيَ بِأَرْبَعٍ

فَإِذَا صَبَرَ عَلَى ذَلِكَ أَكْرَمَهُ اللَّهُ فِي الدُّنْيَا بِأَرْبَعٍ وَأَثَابَهُ فِي الْآخِرَةِ بِأَرْبَعٍ


فَقَالَ لِي اعْلَمْ أَنَّ الرَّجُلَ لَا يَصِيرُ مُحَدِّثًا كَامِلًا فِي حَدِيثِهِ إِلَّا بَعْدَ أَنْ يَكْتُبَ أَرْبَعًا مَعَ أَرْبَعٍ كَأَرْبَعٍ مِثْلِ أَرْبَعٍ فِي أَرْبَعٍ عِنْدَ أَرْبَعٍ بِأَرْبَعٍ عَلَى أَرْبَعٍ عَنْ أَرْبَعٍ لِأَرْبَعٍ

சிறந்த ஹதீஸ்கலை அறிஞராக ஆவதற்கு அவசியமான விசயங்கள்:

1 . நபி (ஸல்) அவர்களின் செய்திகள், சட்டங்கள்.
2 . நபித்தோழர்கள்
3 . தாபிஈன்கள்
4 . மற்ற அறிஞர்கள் – இந்த 4 வகையினர்களின் வரலாற்றையும், செய்திகளையும் எழுத-அறிய வேண்டும்.

இதை கீழ்கண்ட 4 அம்சங்களுடன் எழுத-அறிய வேண்டும்:

1 . அஸல் பெயர்
2 . புனைப்பெயர்
3 . வசிப்பிடம், பயணித்த இடம்
4 . காலகட்டங்கள்

இந்த நான்கையும் எதைப் போன்று எழுத-அறிய வேண்டும்?

1 . பயானுக்கு முன்னால் இன்னல் ஹம்த லில்லாஹ் இருப்பது போன்று.
2 . நபிமார்களின் பெயருடன் அலைஹிஸ்ஸலாம் இருப்பது போன்று.
3 . ஸூராவின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் இருப்பது போன்று.
4 . தொழுகைக்கு தக்பீர் கூறுவது போன்று.


உ.ம் இவர்களின் செய்திகளை வகைப்படுத்தி எழுதுவது-அறிவது:

1 . முஸ்னத்
2 . முர்ஸல்
3 . மவ்கூஃப்
4 . மக்தூஃ


(ஹதீஸ்துறையில் ஈடுபடுபவர் நிலை)

1 . சிறு வயதில்
2 . விவரமான வயதில்
3 . வாலிப வயதில்
4 . முதிய வயதில் என முழுவாழ்கையிலும் நேரத்தை செலவிட வேண்டும்.

(அதிகமான நேரத்தை செலவிடவேண்டும்)


(ஹதீஸ்துறையில் ஈடுபடுபவர் நிலை)

1 . ஓய்வான நேரம்
2 . மற்ற வேலையுள்ள நேரம்
3 . ஏழ்மை நிலை
4 . வசதியான நிலை என அனைத்து நேரத்தையும் செலவிட வேண்டும்.


(ஹதீஸ்துறையில் ஈடுபடுபவர் நிலை)

1 . மலை
2 . கடல்
3 . ஊர்
4 . காடு இவைகளை கடந்தும் ஹதீஸ்களையும், தகவலையும் சேர்க்கவேண்டும்.


(ஹதீஸ்துறையில் ஈடுபடுபவர் நிலை)

1 . கற்கள்
2 . கிளிஞ்சல்கள்
3 . தோல்கள்
4 . எலும்புகள்

போன்ற (அன்றைய காலத்து) எழுதுப் பொருட்களில் எழுதி வைக்க வேண்டும். தேவைப்படும் போது ஏடுகளில் நகல் எடுப்பதற்கு தகுதியாக இருக்க வேண்டும்.


(அறிவிப்பாளர்களின் நிலை அல்லது ஹதீஸ்துறையில் ஈடுபடுபவர் நிலை)

1 . தன்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும்,
2 . தன்னைப் போன்ற வயதுடையவராக இருந்தாலும்,
3 . தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும்,
4 . தந்தையின் கைப்பட எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் அதிலும் ஹதீஸ்களை, மற்ற தகவலை சேகரிக்க வேண்டும்.


இவற்றை 4 விசங்களுக்காக செய்ய வேண்டும்:

1 . அல்லாஹ்வின் திருப்தியை பெற
2 . குர்ஆனுக்கு தோதுபட்ட செய்திகளின் படி அமல் செய்ய
3 . பிறருக்கு கற்றுத் தர
4 . தனக்கு பிறகும், இதன் மூலம் மற்றவர்கள் பயன் பெற தொகுக்க வேண்டும்.


وَكُلُّ هَذِهِ الرُّبَاعِيَّاتُ لَا تَتِمُّ لَهُ إِلَّا بِأَرْبَعٍ مَعَ أَرْبَعٍ

மேற்கூறப்பட்டவற்றை அறிவதற்கு 4 அம்சங்களுடன் 4 அம்சங்கள் இருக்க வேண்டும்.

சுய முயற்சியில் கிடைத்தவை:

1 . எழுத்தறிவு
2 . மொழியறிவு
3 . ஸர்ஃப்-சொல் இலக்கணம்
4 . நஹ்வ்-மொழி இலக்கணம்

அல்லாஹ் வழங்கியவை:

1 . ஆற்றல்
2 . ஆரோக்கியம்
3 . ஆர்வம்
4 . நினைவாற்றல், மனனமிடல்.


فَإِذَا تَمَّتْ لَهُ كُلُّهَا هَانَ عَلَيْهِ أَرْبَعٌ وَابْتُلِيَ بِأَرْبَعٍ

பிறகு 4 விசயங்கள் எளிதாகும்.

1 . குடும்பம்.
2 . பிள்ளைகள்.
3 . செல்வம்
4 . வசிப்பிடம்


4 வகையான சோதனைகள்:

1 . எதிரிகளின் விமர்சனம்
2 . நண்பர்களின் பழித்தல்
3 . அறிவீனர்கள் குறைகூறுதல்
4 . அறிஞர்களின் பொறாமை


فَإِذَا صَبَرَ عَلَى ذَلِكَ أَكْرَمَهُ اللَّهُ فِي الدُّنْيَا بِأَرْبَعٍ وَأَثَابَهُ فِي الْآخِرَةِ بِأَرْبَعٍ

இதையெல்லாம் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் உலகில் கிடைக்கச் செய்யும் நான்கு வகையான சிறப்புகள்:

1 . பிறர் தரும் கண்ணியம்
2 . பிறருக்கு ஏற்படும் பயம் கலந்த மரியாதை
3 . கல்வியின் சுவை
4 . நீண்ட காலம் வாழ்ந்த மகிழ்ச்சி (இறந்த பிறகும் கல்வியால் வாழ்தல்)


அல்லாஹ் மறுமையில் தரும் நான்கு வகையான சிறப்புகள்:

1 . தான் நாடிய சகோதரர்களுக்கு பரிந்துரை செய்யும் சிறப்பு…
2 . அர்ஷின் நிழலில் இடம்.
3 . ஹவ்ளுல் கவ்ஸரில் நாடியோருக்கு நீர் அருந்தச் செய்தல்…
4 . சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளுடைய நபிமார்களுடன் இருப்பது.


قُلْتُ لَهُ فَسِّرْ لِي مَا ذَكَرْتَ مِنْ أَحْوَالِ هَذِهِ الرُّبَاعِيَّاتِ مِنْ قَلْبٍ صَافٍ بِشَرْحٍ كَافٍ وَبَيَانٍ شَافٍ طَلَبًا لِلْأَجْرِ الْوَافِي

1 . فَقَالَ نَعَمْ أَمَّا الْأَرْبَعَةُ الَّتِي تَحْتَاجُ إِلَى كِتْبَتِهَا هِيَ أَخْبَارُ رَسُولُ اللَّهِ صلى الله  عليه وسلم وَشَرَائِعُهُ وَالصَّحَابَةِ وَمَقَادِيرُهُمْ وَالتَّابِعِينَ وَأَحْوَالُهُمْ وَسَائِرِ الْعُلَمَاءِ وَتَوَارِيخُهُمْ
2 . مَعَ أَسْمَاءِ رِجَالِهِمْ وَكُنَاهُمْ وَأَمْكِنَتُهُمْ وَأَزْمِنَتُهُمْ
3 . كَالتَّحْمِيدِ مَعَ الْخُطَبِ وَالدُّعَاءِ مَعَ الرُّسُلِ وَالْبِسْمِ مَعَ السُّوَرِ وَالتَّكْبِيرِ مَعَ الصَّلَوَاتِ
4 . مِثْلِ الْمُسْنَدَاتِ وَالْمُرْسَلَاتِ وَالْمَوْقُوفَاتِ وَالْمَقْطُوعَاتِ
5 . فِي صِغَرِهِ وَفِي إِدْرَاكِهِ وَفِي كُهُولَتِهِ وَفِي شَبَابِهِ
6 . عِنْدَ فَرَاغِهِ وَعِنْدَ شُغْلِهِ وَعِنْدَ فَقْرِهِ وَعِنْدَ غِنَاهُ
7 . بِالْجِبَالِ وَالْبِحَارِ وَالْبُلْدَانِ وَالْبَرَارِي
8 . عَلَى الْأَحْجَارِ وَالْأَصْدَافِ وَالْجُلُودِ وَالْأَكْتَافِ إِلَى الْوَقْتِ الَّذِي يُمْكِنُهُ نَقْلُهَا إِلَى الْأَوْرَاقِ
9 . عَمَّنْ هُوَ فَوْقَهُ وَعَمَّنْ هُوَ مِثْلُهُ وَعَمَّنْ هُوَ دُونَهُ وَعَنْ كِتَابِ أَبِيهِ يَتَيَقَّنُ أَنَّهُ بِخَطِّ أَبِيهِ دُونَ غَيْرِهِ –
10 . لِوَجْهِ اللَّهِ تَعَالَى طَالِبًا لِمَرْضَاتِهِ وَالْعَمَلُ بِمَا وَافَقَ الْكِتَابَ مِنْهَا وَنَشَرُهَا بَيْنَ طَالِبِيهَا وَمُجْتَنِيهَا وَالتَّأْلِيفُ فِي إِحْيَاءِ ذِكْرِهِ بَعْدَهُ

11 . ثُمَّ لَا تَتِمُّ لَهُ هَذِهِ الْأَشْيَاءُ إِلَّا بِأَرْبَعٍ مِنْ كَسْبِ الْعَبْدِ أَعْنِي مَعْرِفَةَ الْكِتَابَةِ وَاللُّغَةِ وَالصَّرْفِ وَالنَّحْوِ
12 . مَعَ أَرْبَعٍ هِيَ مِنْ إِعْطَاءِ اللَّهِ تَعَالَى أَعْنِي الْقُدْرَةَ وَالصِّحَّةَ وَالْحِرْصَ وَالْحِفْظَ

13 . فَإِذَا تَمَّتْ لَهُ هَذِهِ الْأَشْيَاءُ هَانَ عَلَيْهِ أَرْبَعٌ الْأَهْلُ وَالْوَلَدُ وَالْمَالُ وَالْمَوْطِنُ

14 . وَابْتُلِيَ بِأَرْبَعٍ شَمَاتَةِ الْأَعْدَاءِ وَمَلَامَةِ الْأَصْدِقَاءِ وَطَعْنِ الْجُهَلَاءِ وَحَسَدِ الْعُلَمَاءِ
15 . فَإِذَا صَبَرَ عَلَى هَذِهِ الْمِحَنِ أَكْرَمَهُ اللَّهُ فِي الدُّنْيَا بِأَرْبَعٍ بِعِزِ الْقَنَاعَةِ وَبِهَيْبَةِ النَّفْسِ وَلَذَّةِ الْعِلْمِ وَحَيَاةِ الْأَبَدِ
16 . وَأَثَابَهُ فِي الْآخِرَةِ بِأَرْبَعٍ بِالشَّفَاعَةِ لِمَنْ أَرَادَ مِنْ إِخْوَانِهِ وَبِظِلِّ الْعَرْشِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ وَبِسَقْيِ مَنْ أَرَادَ مِنْ حَوْضِ نَبِيِّهِ صلى الله عليه وسلم وَبِجِوَارِ النَّبِيِّينَ فِي أَعْلَى عِلِّيِّينَ فِي الْجَنَّةِ


فَقَدْ أَعْلَمْتُكَ يَا بُنَيَّ مُجْمِلًا جَمِيعَ مَا كُنْتُ سَمِعْتُهُ مِنْ مَشَايِخِي مُتَفَرِّقًا فِي هَذَا الْبَابِ مُجْمَعًا فَأَقْبِلِ الْآنَ عَلَى مَا قَصَدْتَنِي لَهُ أَوْ دَعْ
قَالَ فَهَالَنِي قَوْلُهُ فَسَكَتُّ مُتَفَكِّرًا وَأَطْرَقْتُ نَادِمًا فَلَمَّا رَأَى ذَلِكَ مِنِّي قَالَ
وَإِلَّا تُطِقِ احْتِمَالَ هَذِهِ الْمَشَاقِ كُلِّهَا فَعَلَيْكَ بِالْفِقْهِ الَّذِي يُمَكِّنُكَ تَعَلُّمُهُ وَأَنْتَ فِي بَيْتِكَ قَارٌّ سَاكِنٌ لَا تَحْتَاجُ إِلَى بُعْدِ الْأَسْفَارِ وَوَطْءِ الدِّيَارِ وَرُكُوبِالْبِحَارِ وَهُوَ مَعَ ذَا ثَمَرَةُ الْحَدِيثِ وَلَيْسَ ثَوَابُ الْفَقِيهِ بِدُونَ ثَوَابِ الْمُحَدِّثِ فِي الْآخِرَةِ وَلَا عِزُّهُ بِأَقَلَّ مِنْ عِزِّ الْمُحَدِّثِ
قَالَ فَلَمَّا سَمِعْتُ ذَلِكَ نَقَضَ عَزْمِي فِي طَلَبِ الْحَدِيثِ وَأَقْبَلْتُ عَلَى دِرَاسَةِ الْفِقْهِ وَتَعَلُّمِهِ إِلَى أَنْ صِرْتُ مُتَفَقِّهًا فَلِذَلِكَ لَمْ يَكُنْ عِنْدِي مَا أُمْلِيهِ عَلَى هَذَا الصَّبِيِّ يَا أَبَا إِبْرَاهِيمَ
فَقَالَ لَهُ أَبُو إِبْرَاهِيمَ إِنَّ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ الَّذِي لَا يُوجَدُ عِنْدَ غَيْرِكَ خَيْرٌ لِلصَّبِيِّ مِنْ أَلْفِ حَدِيثٍ يَجِدُهُ عِنْدَ غَيْرِكَ

தொடர்ந்து புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறினார்:

‘மகனே! இந்தத் துறையில் நான் எனது ஆசிரியர்களிடம் செவியுற்ற அனைத்தையும் இப்போது நான் தொகுத்து உனக்கு அறிவித்துவிட்டேன். நீ இப்போது உன்னுடைய நோக்கத்தின் பக்கம் கவனம் செலுத்து. இல்லையேல் விட்டுவிடு!’

(அபுல்அப்பாஸ் கூறினார்:) ‘அவரது பேச்சு என்னைப் பிரமிக்கச் செய்தது. நான் சிந்தித்தவனாக மௌனமானேன். வருந்தியவனாக தலையைக் குனிந்தேன். என் நிலையை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கண்டபோது கூறினார்:

‘இந்தச் சிரமங்கள் அனைத்தையும் தாங்க உன்னால் இயலவில்லையென்றால், நீ உன் வீட்டில் அமர்ந்து கொண்டு கற்றுக்கொள்ளக்கூடிய ஃபிக்ஹ் கல்வியைக் கவனித்துக் கொள். அதற்கு நீண்ட பயணங்கள் செல்லவோ, நாடுகள் கடந்து செல்லவோ, கடலில் பயணிக்கவோ தேவைப்படாது. இத்துடன், அது ஹதீஸின் விளைச்சலாகும் (கனியாகும்). மறுமையில் ஒரு ஃபகீஹின் கூலி ஒரு முஹத்திஸின் கூலியை விடக் குறைவானதன்று. மேலும், அவரது கண்ணியம் ஒரு முஹத்திஸின் கண்ணியத்தை விடச் சற்றும் குறைந்ததன்று.’

(அபுல்அப்பாஸ் கூறினார்:) ‘நான் அதைக் கேட்டபோது, ஹதீஸ் தேடுவதில் இருந்த எனது உறுதியை நீக்கிக் கொண்டேன். நான் ஃபிக்ஹ் கல்வியைத் திரும்பத் திரும்ப ஓதுவதிலும், கற்பதிலும் ஈடுபட்டேன். நான் ஒரு ஃபகீஹ் ஆகும் வரை அதிலேயே நிலைத்திருந்தேன். அதனால்தான், அபூஇப்ராஹீமே! இந்தச் சிறுவனுக்கு நான் அறிவிக்க என்னிடம் எதுவும் இல்லை.’

அதற்கு அபூஇப்ராஹீம் அவர்கள் அபுல்அப்பாஸிடம் கூறினார்: ‘இந்த ஒரு கருத்து, உங்களைத் தவிர வேறு எவரிடமும் இல்லாத ஒரு கருத்தாகும். வேறு எவரிடமாவது இந்தச் சிறுவன் பெறும் ஆயிரம் கருத்துக்களை விடச் சிறந்தது.

(நூல்கள்: ஸிராஜுல் முரீதீன்-1/362, அல்இல்மாஃ-1/30-34, அல்ஃகனிய்யது ஃபீ ஷுயூகில் காழீ இயாள்-1/69-72, தஹ்தீபுல் கமால்-24/461-464, தத்ரீபுர் ராவீ-2/602-604…)


இதனுடன் தொடர்புடையவை:

பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.