தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1899

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

1899. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சில பகுதியைக் கடந்து சென்றபோது அங்கே பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர். (நபி ஸல் அவர்களைக் கண்ட அவர்கள் கீழ்கண்டவாறு) கவிதைகளைப் படித்தனர்:

“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “(எனது வருகையினால் சந்தோசமடையும்) உங்கள் மீது நான் நேசம் வைத்துள்ளேன் என்பதை அல்லாஹ் அறிவான்” என்று கூறினார்கள்.


حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ، فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ، وَيَتَغَنَّيْنَ، وَيَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ يَعْلَمُ إِنِّي لَأُحِبُّكُنَّ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1899.
Ibn-Majah-Alamiah-1889.
Ibn-Majah-JawamiulKalim-1889.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா

2 . ஹிஷாம் பின் அம்மார்

3 . ஈஸா பின் யூனுஸ்

4 . அவ்ஃப் பின் அபூஜமீலா

5 . ஸுமாமா பின் அப்துல்லாஹ்

6 . அனஸ் (ரலி)


  1. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும், ராவீ-32724-அவ்ஃப் பின் அபூஜமீலா அவர்களை சிலர் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளனர்…

எனவே இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும். வேறுசிலரும் இதை அறிவித்துள்ளனர் என்பதால் இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரம் ஆகும்.

மேலும் இந்த நிகழ்வு ஒரு திருமணத்தில் நடந்தது என்றும் சிலர் கூறியுள்ளனர்…


 

(அஸ்ஸஹீஹா-3154…)


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அவ்ஃப் பின் அபூஜமீலா —> ஸுமாமா பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-1899 , முஸ்னத் பஸ்ஸார்-7334 , அல்முஃஜமுஸ் ஸகீர்-78 ,


  • ருஷைத் —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,


  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-784 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3925 ,

இப்னு மாஜா

இப்னு மாஜா இமாம்.

தரம்: பலமானவர்.


இமாம் இப்னுமாஜா

முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது  அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)

புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: யஸீது

பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.

சுனன் இப்னுமாஜா

தஃப்ஸீருல் குர்ஆன் (குர்ஆன் விரிவுரை)

தாரீகுல் கஸ்வீன்

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் இப்னு  முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64. (தகவல்: பயான் சைட்)

ஹிஷாம் பின் அம்மார்

هشام بن عمار بن نصير

இறப்பு: ஹிஜ்ரி 245

தரம்: நம்பகமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் பின் மைஸரா பின் அபான்

தந்தை பெயர்: அம்மார் பின் நுஸைர்

வம்சம்: அஸ்ஸலமீ, அழ்ழஃப்ரீ

புனைப்பெயர்: அபூ அல்-வலீத்

ஊர் பெயர்: திமிஷ்க்

பயணித்த ஊர்கள்: திமிஷ்க்

பிறப்பு: ஹிஜ்ரி 153

இறப்பு: ஹிஜ்ரி 245

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஹிஷாம் பின் அம்மார் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 153 இல் பிறந்து ஹிஜ்ரி 245 இல் திமிஷ்க் நகரில் காலமானார். இவர் திமிஷ்க் பள்ளிவாசலின் சொற்பொழிவாளராக இருந்தார். மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து புகாரி இமாம், அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் நம்பகமானவர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா, இஸ்மாயீல் பின் அய்யாஷ், பகிய்யது பின் வலீத், ஹாதிம் பின் இஸ்மாயீல், ஹஃப்ஸ் பின் ஸுலைமான், ஸதகா பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஹாக், அல்வலீத் பின் முஸ்லிம், ஈஸா பின் யூனுஸ், யஹ்யா பின் ஹம்ஸா, அம்மார் பின் நுஸைர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்புகாரி, அபூ தாவூத், அந்நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் பின் ஹிஷாம் பின் அம்மார், அபூ ஸுர்ஆ அத்திமிஷ்கீ, அபூ ஹாதிம், தஹ்ஹீம், முஹம்மத் பின் அவ்ஃப், யஃகூப் அல்ஃபஸவீ, பகிய்யு பின் மக்லத், ஸாலிஹ் பின் முஹம்மத்

வேறு பெயர்கள்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர், அபூ அல்-வலீத்


ஆதாரம்: muslimscholars.info (30288) · Should verify

ஈஸா பின் யூனுஸ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அவ்ஃப் பின் அபூஜமீலா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுமாமா பின் அப்துல்லாஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.