தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6383

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலை நேசித்து அடிக்கடி வருபவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை தர்ராஜ் அவர்களிடமிருந்து இப்னு லஹீஆ அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அம்ர் பின் காலித் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-6383: 6383)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، ثَنَا أَبِي، ثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَلِفَ الْمَسْجِدَ أَلِفَهُ اللَّهُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ دَرَّاجٍ إِلَّا ابْنُ لَهِيعَةَ، تَفَرَّدَ بِهِ عَمْرُو بْنُ خَالِدٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6383.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6554.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் அம்ர் பின் காலித்

3 . அம்ர் பின் காலித்

4 . இப்னு லஹீஆ

5 . தர்ராஜ்

6 . அபுல்ஹைஸம்

7 . அபூஸயீத் (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற அடிப்படையில் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இவரிடமிருந்து சில அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் சரியானது எனக் கூறியுள்ளனர்.
  • அதனடிப்படையில் அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் யஸீத், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோர் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது.
  • அவ்வாறே குதைபா பின் ஸயீத், (இன்னும் சிலரும்) இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512).


2 . மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24059-தர்ராஜ் பின் ஸம்ஆன்-அபுஸ்ஸம்ஹ்-அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி,

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர், இவரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்றும்,
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர்; கைவிடப்பட்டவர் என்றும்,
  • ஃபள்லுர் ராஸீ அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்றும்,
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் ஹதீஸ்களில் சிறிது பலவீனம் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
  • ஸாஜீ, உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அபுல்அரப் போன்றோர் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)

  • இப்னுமயீன், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு கல்ஃபூன்,பிறப்பு ஹிஜ்ரி 555
    இறப்பு ஹிஜ்ரி 636
    வயது: 81
    இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    அபுல்காஸிம் போன்றோர் இவர் பலமானவர் என்றும்,
  • உஸ்மான் பின் ஸயீத், இப்னு யூனுஸ் போன்றோர் இவர் ஸதூக்-நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2008, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, அல்இக்மால்-1473, தாரீகுல் இஸ்லாம்-3/405)

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகளில் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தியைத் தவிர மற்றவை சரியானது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை குறிப்பிட்டு இவைகளை இவர் தனித்து அறிவிக்கிறார்; இவைகளில் சிலவை முன்கர் என்று கூறிவிட்டு இதல்லாத மற்ற செய்திகள் பரவாயில்லை என்று கூறியுள்ளார். (இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், கூறும் செய்திகளில் மேற்கண்ட செய்தி இடம்பெறவில்லை)

(நூல்கள்: அல்காஷிஃப்-2/380, தஹ்தீபுத் தஹ்தீப்-1/574, தக்ரீபுத் தஹ்தீப்-1833, அல்இக்மால்-1473, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-647)

  • இவரைப் பற்றி பலவிமர்சனங்கள் இருந்தாலும் இதை ஆய்வு செய்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர்; என்றாலும் இவர் அறிவிக்கும் அபுல்ஹைஸம் —> அபூஸயீத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1833)


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-660 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.