அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள், கஅபா எனும் இந்த ஆலயத்திற்கு (ஹஜ் செய்வதற்கு) அதிகம் பயணம் செய்துள்ளோம். (ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:
(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீ அல்லாஹ்வுக்கு பயந்து எந்த ஒன்றை விட்டாலும் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்.
(முஸ்னது அஹ்மத்: 20739)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي قَتَادَةَ، وَأَبِي الدَّهْمَاءِ، قَالَا:
كَانَا يُكْثِرَانِ السَّفَرَ نَحْوَ هَذَا الْبَيْتِ، قَالَا: أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ وَقَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20739.
Musnad-Ahmad-Alamiah-19813.
Musnad-Ahmad-JawamiulKalim-20241.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . இஸ்மாயீல் பின் உலைய்யா
3 . ஸுலைமான் பின் முஃகீரா
4 . ஹுமைத் பின் ஹிலால்
5 . அபூகதாதா அல்அதவீ-தமீம் பின் நுதைர், 6 . கிர்ஃபா பின் புஹைஸ்-அபுத்தஹ்மாஃ
7 . நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ள ஒரு கிராமவாசி.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9712-அபூகதாதா அல்அதவீ-தமீம் பின் நுதைர்-தமீம் பின் ஸுபைர் அவர்கள், சில செய்திகளை நபியிடமிருந்து அறிவித்துள்ளார் என்பதால் இப்னு மன்தா போன்ற சிலர் இவரை நபித்தோழர் என்று கூறியுள்ளனர்.
- என்றாலும் இந்தச் செய்திகளில் ஸமிஃது-நேரடியாக கேட்டேன் என்பது போன்ற வாசகம் இல்லை என்பதாலும், வேறு சான்றுகளும் இல்லை என்பதாலும், இவர் சில நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்பதாலும் இவர் பஸராவைச் சேர்ந்த தாபிஈ ஆவார் என்றே இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்ற முக்கிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/441, தஹ்தீபுல் கமால்-34/197, அல்காஷிஃப்-5/95, தஹ்தீபுத் தஹ்தீப்-4/574, தக்ரீபுத் தஹ்தீப்-1/1192, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/623, அர்ருவாதுல் முக்தலஃபு ஃபீ ஸுஹ்பதிஹிம்-177)
- மேலும் இதில் நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்ற கிராமவாசியின் பெயர் கூறப்படாவிட்டாலும் இது குறையல்ல.
- ஹுமைத் பின் ஹிலால் அவர்களின் மாணவர்களில் முன்னுரிமை பெற்றவர் ஸுலைமான் பின் முஃகீரா ஆவார். எனவே ஸுலைமான் பின் முஃகீரா அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
- ஸுலைமான் பின் முஃகீரா —> ஹுமைத் பின் ஹிலால் —> அபூகதாதா, அபுத்தஹ்மாஃ —> ஒரு கிராமவாசி
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-, அஸ்ஸுஹ்த்-வகீஃ பின் ஜர்ராஹ்-, அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-, முஸ்னத் இப்னு அபீஷைபா-, அஹ்மத்-20739, 20746, 23074, முஸ்னத் ஹாரிஸ்-, குப்ரா நஸாயீ-, குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-, …
- அபூஹிலால் —> ஹுமைத் பின் ஹிலால் —> ஒரு மனிதர் —> ஒரு கிராமவாசி
பார்க்க: குப்ரா பைஹகீ-10821,
சமீப விமர்சனங்கள்