அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள், கஅபா எனும் இந்த ஆலயத்திற்கு (ஹஜ் செய்வதற்கு) அதிகம் பயணம் செய்துள்ளோம். (ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:
(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீ அல்லாஹ்வுக்கு பயந்து எந்த ஒன்றை விட்டாலும் அதனைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்.
(முஸ்னது அஹ்மத்: 20739)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي قَتَادَةَ، وَأَبِي الدَّهْمَاءِ، قَالَا:
كَانَا يُكْثِرَانِ السَّفَرَ نَحْوَ هَذَا الْبَيْتِ، قَالَا: أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ وَقَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20739.
Musnad-Ahmad-Alamiah-19813.
Musnad-Ahmad-JawamiulKalim-20241.
1 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-, அஸ்ஸுஹ்த்-வகீஃ பின் ஜர்ராஹ்-, அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-, முஸ்னத் இப்னு அபீஷைபா-, அஹ்மத்-20739, 20746, 23074, முஸ்னத் ஹாரிஸ்-, குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-, …
சமீப விமர்சனங்கள்