தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3681

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்:

“அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்னு உமர் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 3681)

بَابٌ فِي مَنَاقِبِ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا خَارِجَةُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ»

قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3681.
Tirmidhi-Alamiah-3614.
Tirmidhi-JawamiulKalim-3643.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார், 3 . முஹம்மத் பின் ராஃபிஃ

4 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்

5 . காரிஜா பின் அப்துல்லாஹ்

6 . நாஃபிஃ

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14429-காரிஜா பின் அப்துல்லாஹ் பின் ஸுலைமான் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் லைஸ பிஹீ பஃஸ்-இவர் விசயத்தில் குறையில்லை என்று கூறியுள்ளார். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவருக்கும் இப்படி கூறுவார்)
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் ஷைக் என்றும்,
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், ஷைக் ஸாலிஹ் என்றும் கூறியுள்ளனர். இதற்கு நல்லவர், தகுதியானவர் என்ற கருத்திலும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்ற கருத்திலும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார்.

  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக முஃக்னீ என்ற நூலில் உள்ளது என்று குறிப்பிட்ட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இது இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்களின் வழியாக கூறப்பட்டுள்ளது என்றும்; நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஸதூக்-உண்மையாளர், சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • (இவர் யஸீத் பின் ரூமான் என்பவரிடமிருந்து சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்பதாலே இவரை சிலர் விமர்சித்துள்ளனர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களின் தகவலிலிருந்து தெரிகிறது. நாம் பார்த்தவரை இவரை பலவீனமானவர் என்று கூறியவர்கள் காரணத்தை கூறவில்லை)

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/374, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/491, தஹ்தீபுல் கமால்-8/15, அல்காஷிஃப்-2/338, தாரீகுல் இஸ்லாம்-4/347, தஹ்தீபுத் தஹ்தீப்-1/512, தக்ரீபுத் தஹ்தீப்-1/283)

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றிலிருந்து சிலர் இவரை பலமானவர் என்றும் வேறு சிலர் நடுத்தரமானவர்-ஹஸன் தரமுடையவர் என்றும் கூறியுள்ளனர்.


இந்தக் கருத்துப் போன்ற செய்தியும் உள்ளது.

பார்க்க: புகாரி-3684.


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: … அஹ்மத்-5696, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, திர்மிதீ-3681, முஸ்னத் பஸ்ஸார்-5862, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, …


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3683.


3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-4485.


4 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . உமர் (ரலி)

6 . அனஸ் (ரலி)

7 . உஸ்மான் பின் அர்கம் (ரலி)

8 . அபூபக்ர் (ரலி)

9 . ஸவ்பான் (ரலி)

10 . அலீ (ரலி)

11 . ஸுபைர் (ரலி)

12 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)

13 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்)

14 . ஹஸன் பஸரீ (ரஹ்)


(இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-279)


 

4 comments on Tirmidhi-3681

  1. அல்லாஹ்விற்கு பிடித்தமான வாலிபர்

    நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-
    ஆசைகளிலும் பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்

    நூல் -அல்-முஸ்னத் ஷுஐப் -17371

    இந்த ஹதீஸின் தரம்?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.