பாடம்:
அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்:
3681. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.
அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்னு உமர் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
بَابٌ فِي مَنَاقِبِ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا خَارِجَةُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ»
قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3681.
Tirmidhi-Alamiah-3614.
Tirmidhi-JawamiulKalim-3643.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார், 3 . முஹம்மத் பின் ராஃபிஃ
4 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்
5 . காரிஜா பின் அப்துல்லாஹ்
6 . நாஃபிஃ
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14429-காரிஜா பின் அப்துல்லாஹ் பின் ஸுலைமான் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் லைஸ பிஹீ பஃஸ்-இவர் விசயத்தில் குறையில்லை என்று கூறியுள்ளார். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலமானவருக்கும் இப்படி கூறுவார்) - அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் ஷைக் என்றும், - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், ஷைக் ஸாலிஹ் என்றும் கூறியுள்ளனர். இதற்கு நல்லவர், தகுதியானவர் என்ற கருத்திலும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்ற கருத்திலும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார்.
- இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக முஃக்னீ என்ற நூலில் உள்ளது என்று குறிப்பிட்ட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இது இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்களின் வழியாக கூறப்பட்டுள்ளது என்றும்; நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் ஸதூக்-உண்மையாளர், சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். - (இவர் யஸீத் பின் ரூமான் என்பவரிடமிருந்து சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்பதாலே இவரை சிலர் விமர்சித்துள்ளனர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களின் தகவலிலிருந்து தெரிகிறது. நாம் பார்த்தவரை இவரை பலவீனமானவர் என்று கூறியவர்கள் காரணத்தை கூறவில்லை)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/374, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/491, தஹ்தீபுல் கமால்-8/15, அல்காஷிஃப்-2/338, தாரீகுல் இஸ்லாம்-4/347, தஹ்தீபுத் தஹ்தீப்-1/512, தக்ரீபுத் தஹ்தீப்-1/283)
மேற்கண்ட அறிஞர்களின் கூற்றிலிருந்து சிலர் இவரை பலமானவர் என்றும் வேறு சிலர் நடுத்தரமானவர்-ஹஸன் தரமுடையவர் என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துப் போன்ற செய்தியும் உள்ளது.
பார்க்க: புகாரி-3684.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: … அஹ்மத்-5696, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, திர்மிதீ-3681, முஸ்னத் பஸ்ஸார்-5862, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, …
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3683.
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-4485.
4 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . உமர் (ரலி)
6 . அனஸ் (ரலி)
7 . உஸ்மான் பின் அர்கம் (ரலி)
8 . அபூபக்ர் (ரலி)
9 . ஸவ்பான் (ரலி)
10 . அலீ (ரலி)
11 . ஸுபைர் (ரலி)
12 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
13 . இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்)
14 . ஹஸன் பஸரீ (ரஹ்)
(இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-279)
அல்லாஹ்விற்கு பிடித்தமான வாலிபர்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-
ஆசைகளிலும் பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்
நூல் -அல்-முஸ்னத் ஷுஐப் -17371
இந்த ஹதீஸின் தரம்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹஸன் தரம். அஹ்மத்-17371
Jazhakallah Khair
வ அலைக்கும் ஸலாம்