தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-1843

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:

நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், ஹிஷாம் பின் அம்மார் அவர்கள், இப்னு லஹீஆ —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்துக் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.


அதற்கு எனது தந்தை, இது நபித்தோழரின் சொல்லாகவே வந்துள்ளது என்று கூறினார்.

(alilal-ibn-abi-hatim-1843: 1843)

وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ هِشامُ بنُ عَمّارٍ ، قالَ : كَتَبَ إِلَينا ابنُ لَهِيعَةَ ، قالَ : حَدَّثَنِي أَبُو عُشّانَةَ ، قالَ : سَمِعتُ عُقبَةَ بنَ عامِرٍ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قالَ :

إِنَّ اللَّهَ يَعجَبُ مِنَ الشّابِّ لَيسَت لَهُ صَبوَةٌ.
قالَ أَبِي : إنما هو موقوفًا.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-1843.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: அஹ்மத்-17371.


அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இந்தச் செய்தியை மவ்கூஃப்-நபித்தோழரின் சொல் என்று கூறியுள்ளார்.

இதற்கான காரணம் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள் தனது ஸுஹ்த் எனும் நூலில் இந்தச் செய்தியை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சொல்லாக பதிவு செய்துள்ளார்.

الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 118)
349 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ، وَأَبُو بَكْرٍ الْوَرَّاقُ قَالَا: أَخْبَرَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عُشَّانَةَ الْمَعَافِرِيِّ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: «يَعْجَبُ رَبُّكَ تَعَالَى لِلشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»

என்றாலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பலவீனமானவர் ஆவார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.