பாடம்:
(பிறைப் பார்த்தவரின்) சாட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறையை பார்த்துவிட்டேன் என்று கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம் என்று பதிலளித்தார். உடனே, பிலாலே! நாளை நோன்பு நோற்கவேண்டும் என மக்களிடம் அறிவிப்பு செய்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் கருத்துவேறுபாடு உள்ளது.
இந்தச் செய்தியை ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களும் மற்றவர்களும், ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரை விட்டுவிட்டு முர்ஸலாக அறிவித்துள்ளனர். ஸிமாக் பின் ஹர்ப் அவர்களின் அதிகமான மாணவர்கள் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் பிரகாரமே அதிகமான கல்வியாளர்கள் முடிவு செய்து, ரமலான் மாத பிறையை ஒருவர் பார்த்து சாட்சி கூறினாலும் நோன்பு வைப்பதற்கு அவரின் சாட்சி ஏற்கப்படும் என்று கூறுகின்றனர். இப்னுல் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்), கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்தும் இதுவே.
இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள், நோன்பு வைப்பதற்கும் பிறை பார்த்த இருவரின் சாட்சி அவசியம் என்று கூறுகிறார்.
ஷவ்வால் மாத பிறை விசயத்தில் பிறை பார்த்த இருவரின் சாட்சி அவசியம் என்பதில் கல்வியாளர்களிடம் கருத்துவேறுபாடு இல்லை.
(திர்மிதி: 691)بَابُ مَا جَاءَ فِي الصَّوْمِ بِالشَّهَادَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:
جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي رَأَيْتُ الهِلَالَ، قَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، قَالَ: نَعَمْ، قَالَ: «يَا بِلَالُ، أَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًا»
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكٍ، نَحْوَهُ بِهَذَا الإِسْنَادِ.
«حَدِيثُ ابْنِ عَبَّاسٍ فِيهِ اخْتِلَافٌ» وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُهُ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا، «وَأَكْثَرُ أَصْحَابِ سِمَاكٍ رَوَوْا، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا»، ” وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ قَالُوا: تُقْبَلُ شَهَادَةُ رَجُلٍ وَاحِدٍ فِي الصِّيَامِ، وَبِهِ يَقُولُ ابْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَأَهْلِ الْكُوفَةِ “، قَالَ إِسْحَاقُ: «لَا يُصَامُ إِلَّا بِشَهَادَةِ رَجُلَيْنِ»، «وَلَمْ يَخْتَلِفْ أَهْلُ العِلْمِ فِي الإِفْطَارِ أَنَّهُ لَا يُقْبَلُ فِيهِ إِلَّا شَهَادَةُ رَجُلَيْنِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-691.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-626.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, தாரிமீ-, இப்னு மாஜா-1652, அபூதாவூத்-2340, திர்மிதீ-691, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2112, 2113, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அபூதாவூத்-2341, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2114, 2115, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,
2 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2339.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20584,
சமீப விமர்சனங்கள்