தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tabaqatul-Kubra-Ibn-Sahd-13021

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் பின் ஸுராரா அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் தாயார் நவ்வார் (ரலி) அவர்களிடம் செவியேற்ற ஒருவர் அவர் கூறியதாக எனக்கு அறிவித்தார்:

மஸ்ஜிதுன் நபவீ பள்ளியை சுற்றியுள்ள வீடுகளிலேயே என் வீடுதான் உயரமானதாக இருந்தது. அதனால், பிலால் (ரலி) அவர்கள் முதல்முதலில் பாங்கு சொல்ல ஆரம்பித்த நாள் முதல், நபி (ஸல்) அவர்கள் தங்கள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியை கட்டும் வரை என் வீட்டின் மேலே நின்று பாங்கு சொன்னார்கள். பின்னர், பள்ளி கட்டப்பட்ட பிறகு, மஸ்ஜிதின் கூரை மீது, அதற்காக சற்று உயர்த்தப்பட்ட ஒன்றின் மீது நின்று பாங்கு சொன்னார்கள்.

(tabaqatul-kubra-ibn-sahd-13021: 13021)

أَخبَرنا مُحَمَّدُ بْنُ عُمَر، حَدثَني مُعاذُ بن مُحَمدٍ، عَن يَحيَى بن عَبد الله بن عَبد الرَّحمَن بن سَعد بن زُرارَةَ، قالَ: أَخبَرَني مَن سَمِعَ النَّوّارَ أُمَّ زَيد بن ثابِتٍ تَقولُ:

كانَ بَيتي أَطوَلَ بَيتٍ حَولَ المَسجِد فَكانَ بِلاَلٌ يُؤَذِّنُ فَوقَهُ مِن أَوَّل ما أَذَّنَ إِلَى أَن بَنَى رَسولُ الله صَلى الله عَليه وسَلم مَسجِدَهُ فَكانَ يُؤَذِّنُ بَعدُ عَلَى ظَهر المَسجِد وقَد رُفِعَ لَهُ شَيءٌ فَوقَ ظَهرِه.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-Tamil-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-TamilMisc-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Shamila-13021.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Alamiah-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-JawamiulKalim-10596.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஹம்மத் பின் ஸஃத்-இப்னு ஸஃத்

2 . முஹம்மத் பின் உமர்-அல்வாகிதீ

3 . முஆத் பின் முஹம்மத்

4 . யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் பின் ஸுராரா

5 . நவ்வார் அவர்களிடம் கேட்டவர்.

6 . நவ்வார் (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் தாயார்)


மேலும் பார்க்க: அபூதாவூத்-519.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.