தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7921

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “முஹம்மதே! நீங்கள் விரும்பும் காலம் வரை வாழலாம். ஆனால், நீங்கள் (ஒரு நாள்) மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பியவரை நேசித்துக் கொள்ளலாம். ஆனால், அவரை (ஒரு நாள்) நீங்கள் பிரிவீர்கள். நீங்கள் விரும்பும் செயல்களை செய்துக் கொள்ளலாம். ஆனால், அதற்குக் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் சிறப்பு அவரது இரவுத் தொழுகையில் உள்ளது. அவரது கண்ணியம், மக்களை விட்டு அவர் தேவையற்றவராக இருப்பதில் உள்ளது.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. எனினும் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதைப் பதிவு செய்யவில்லை.

இந்த ஹதீஸ், முஹம்மத் பின் ஹுமைத் —> ஸாஃபிர் —> பலமானவரான அபூஸுர்ஆ என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் (இதை அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களா? அல்லது ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்களா? என்று) சந்தேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் இந்த சந்தேகம் இல்லை…

(ஹாகிம்: 7921)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْمُذَكِّرُ الرَّازِيُّ، ثَنَا أَبُو زُرْعَةَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، ثَنَا عِيسَى بْنُ صُبَيْحٍ، حَدَّثَنَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ مَرَّةً: عَنِ ابْنِ عُمَرَ، وَقَالَ مَرَّةً: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ:

جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ» ثُمَّ قَالَ: «يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَإِنَّمَا يُعْرَفُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ حُمَيْدٍ، عَنْ زَافِرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ شَيْخٍ ثِقَةٍ الشَّكُّ
وَتِلْكَ الرِّوَايَةُ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ بِلَا شَكٍّ فِيهِ “


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7921.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7995.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸயீத்-முஹம்மத் பின் ஸயீத்

3 . அபூஸுர்ஆ அர்ராஸீ-உபைதுல்லாஹ் பின் அப்துல்கரீம்

4 . ஈஸா பின் ஸுபைஹ்

5 . ஸாஃபிர் பின் ஸுலைமான்

5 . முஹம்மத் பின் உயைனா

6 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அல்லது ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


 

ஸஹீஹா-831…


1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: … அல்முஃஜமுல் அவ்ஸத்-4278, ஹாகிம்-7921, …


2 . இப்னு உமர்

3 . அலீ

4 . ஜாபிர்


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.