அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் இருவகை அறிவிப்பாளர்தொடர்களும் பலமானது ஆகும். ஆனால், இந்த ஹதீஸை புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் தங்களின் நூல்களில் இடம்பெறச் செய்யவில்லை.
ஹதீஸ் எண்-151 இல் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் ஸுலைமான் பின் கமரீ என்பவர் எகிப்து நாட்டச் சேர்ந்தவர். இவர் நம்பிக்கைக்குரியவர், பலமானவர் ஆவார். ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஃளலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் சிலரை விட்டுவிட்டு அறிவித்துள்ளதால் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகிறது.
(ஹாகிம்: 152)حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، ثنا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْعَبْدِيُّ، وَحدثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ، ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ، قَالَا: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، ثنا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، ثنا الصَّنْعَانِيُّ مُحَمَّدُ بْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ، وَمَعَالِيَ الْأَخْلَاقِ، وَيُبْغِضُ سَفْسَافَهَا»
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادَيْنِ جَمِيعًا، وَلَمْ يُخَرِّجَاهُ وَحَجَّاجُ بْنُ قَمَرِيٍّ شَيْخٌ مِنْ أَهْلِ مِصْرَ ثِقَةٌ مَأْمُونٌ وَلَعَلَّهُمَا أَعْرَضَا عَنْ إِخْرَاجِهِ بِأَنَّ الثَّوْرِيَّ أَعْضَلَهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-152.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . யஹ்யா பின் முஹம்மத்-அபூஸகரிய்யா-அல்அன்பரீ
3 . முஹம்மத் பின் இப்ராஹீம்-அபூ அப்தில்லாஹ்-அல்அப்தீ
4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்
5 . ஃபுளைல் பின் இயாள்
6 . முஹம்மத் பின் ஸவ்ர்-அஸ்ஸன்ஆனீ
7 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா
8 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்
9 . ஸஹ்ல் பின் ஸஃத்-அஸ்ஸாஇதீ (ரலி)
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் மஸ்லமா
3 . உஸ்மான் பின் ஸயீத்-அத்தாரிமீ
4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்
5 . ஃபுளைல் பின் இயாள்
6 . முஹம்மத் பின் ஸவ்ர்-அஸ்ஸன்ஆனீ
7 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா
8 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்
9 . ஸஹ்ல் பின் ஸஃத்-அஸ்ஸாஇதீ (ரலி)
1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஹாஸிம் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
பார்க்க: … அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-152, 151, குப்ரா பைஹகீ-,
2 . ஜாபிர் (ரலி)
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2799,
சமீப விமர்சனங்கள்