தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-13926-ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல் – حماد بن زيد بن درهم الأزدي – أبو إسماعيل

இறப்பு: ஹி-179.

தரம்: மிகப் பலமானவர்; பிரபலமான முக்கிய மார்க்க அறிஞர்; ஹதீஸை அறிவிப்பதில் பேணுதல் உள்ளவர்.


இயற்பெயர்: ஹம்மாத்

தந்தை பெயர்: ஸைத்

வமிசம்: அல்அஸ்தீ, …

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஇஸ்மாயீ, அல்அஸ்ரக், அள்ளரீர், …

ஊர் பெயர்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-98.

இறப்பு: ஹிஜ்ரி-177 அல்லது 179

கால கட்டம்: 8.


 

 


ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத் இருவரும் ஹதீஸ்துறையின் முக்கிய அறிஞர்கள் ஆவார்கள்.

சில ஹதீஸ்களில் அறிவிப்பாளர்கள் வெறும் ஹம்மாத் என்று மட்டுமே கூறுவார்கள். இதனால் இவர் ஹம்மாத் பின் ஸலமாவா? அல்லது ஹம்மாத் பின் ஸைதா? என்ற குழப்பம் ஏற்படாலாம். இதை தெரிந்துக் கொள்ளும் முறைகள்:

1 . அஃப்பான் பின் முஸ்லிம் அவர்கள் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும்போது, ஹம்மாத் பின் ஸைத் என்று முழுமையாக கூறுவார். ஹம்மாத் பின் ஸலமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஹம்மாத் என்று மட்டுமே கூறுவார். இதை மிஸ்ஸீ அவர்கள் தனது “தஹ்தீபுல் கமால்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்தா, அபுர்ரபீஃ, குதைபா பின் ஸயீத், முஸத்தத்
ஆகியோர் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் ஹம்மாத் என்று தனது ஆசிரியரைக் கூறினால் அவர் ஹம்மாத் பின் ஸைத் ஆவார்.

3 . பஹ்ஸ் பின் அஸத், மூஸா பின் இஸ்மாயீல் ஆகியோர் ஹம்மாத் பின் ஸலமா அவர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் ஹம்மாத் என்று தனது ஆசிரியரைக் கூறினால் அவர் ஹம்மாத் பின் ஸலமா ஆவார்.

4 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது ஸஹீஹ் புகாரியில் “ஹம்மாத்” என்று மட்டும் குறிப்பிட்டால், அது ஹம்மாத் பின் ஸைத் அவர்களையே குறிக்கும். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஹம்மாத் பின் ஸலமா என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

5 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களின் ஸுனன் நஸாயி எனும் நூலில் அறிவிப்பாளர்களில் ஒருவர் “ஹம்மாத்” என்று அறிவித்தால், அது பொதுவாக ஹம்மாத் பின் ஸைத் அவர்களையே குறிக்கும்.

6 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து 2 ஹதீஸ்களை மட்டுமே அறிவித்துள்ளார். அதல்லாத செய்திகளில் ஹம்மாத் என்று கூறினால் அது ஹம்மாத் பின் ஸலமா ஆவார்.

7 . மேற்கண்ட முறைகள் மூலம் வேறுபடுத்த இயலாவிட்டால் அறிவிப்பாளர்தொடரில் வேறு குறைகள் இல்லையென்றால், அந்த ஹதீஸை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் நிபந்தனைப்படி உள்ளதாகக் கருதலாம். ஏனெனில், இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள்  ஹம்மாத் பின் ஸைத், ஹம்மாத் பின் ஸலமா ஆகியோரை ஆதாரமாக ஏற்றுள்ளார். இந்த தகவலை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் தனது “ஸியரு அஃலாமின் நுபலா” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


تهذيب التهذيب (1/ 481):
قلت: وقال يعقوب بن شيبة: ‌حماد ‌بن ‌زيد ‌أثبت ‌من ‌ابن ‌سلمة، ‌وكل ‌ثقة، غير أن ابن زيد معروف بأنه يقصر في الأسانيد، ويوقف المرفوع، كثير الشك بتوقيه، وكان جليلا لم يكن له كتاب يرجع إليه، فكان أحيانا يذكر فيرفع الحديث وأحيانا يهاب الحديث ولا يرفعه، وكان يعد من المتثبتين في أيوب خاصة


إكمال تهذيب الكمال – ط العلمية (2/ 436):
وقال يعقوب بن شيبة في “مسنده”: ‌حَمَّاد ‌بن ‌زيد ‌أثبت ‌من ‌ابن ‌سلمة، ‌وكل ‌ثقة، غير أن ابن زيد معروف بأنه يقصر في الأسانيد، ويوقف المرفوع كثير الشك بتوقيه، وكان جليلا، ولم يكن له كتاب يرجع إليه، فكان أحيانًا يذكر فيرفع الحديث، وأحيانًا يهاب الحديث ولا يرفعه.


العلل لابن أبي حاتم (1/ 77 ت الحميد):
وقال يعقوب بن شَيْبة : «‌حمَّادُ ‌بنُ ‌زَيْد ‌أثبَتُ ‌من ‌ابن ‌سلمة، ‌وكُلٌّ ‌ثقةٌ، غيرَ أنَّ ابنَ زيد معروفٌ بأنه يقصِّر في الأسانيد، ويُوقِفُ المرفوعَ، وكثيرُ الشكِّ بتوقِّيه، وكان جليلاً لم يكنْ له كتابٌ يَرْجعُ إليه، فكان أحيانًا يذكُرُ فيرفَعُ الحديثَ، وأحيانًا يهابُ الحديثَ ولا يَرْفعه»

யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள் கூறுகிறார்:

ஹம்மாத் பின் ஸைத் அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா அவர்களை விட மிகப் பலமானவர். இருவரும் பலமானவர்களே.

ஆனால், ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் ஹதீஸை அறிவிப்பதில் கடைபிடித்த சில நடைமுறைகள்:

1 . சில நேரம் அறிவிப்பாளர்தொடரை சுருக்கி அறிவிப்பார். நபி (ஸல்) அவர்களின் சொல்லாக கருதப்படும் ஒரு செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவிப்பார்.

இதற்கு காரணம்:

1 . அவர் ஹதீஸை அறிவிப்பதில் அதிகக் கவனத்துடன் நடந்துள்ள வேண்டும் என்பதால் அதிகம் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவராக இருந்தார்.

2 . அவர் ஹதீஸ்களை மனனத்தில் தான் பாதுகாத்து வைத்திருந்தார். மீண்டும் ஹதீஸை எடுத்துப் பார்க்க அவரிடம் எந்த நூலும் இருக்கவில்லை. அதாவது அவர் ஹதீஸ்களை எழுதி வைக்கவில்லை. (யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களின் ஒரு சிறு நூல் மட்டும் அவர்களிடம் இருந்தது)

எனவே, சில சமயங்களில் அவர் (நினைவிலிருந்து) குறிப்பிடும்போது, ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிப்பார்.

வேறு சில சமயங்களில், அந்தச் செய்தியைக் குறிப்பிடுவதில் தயக்கம் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்க மாட்டார். மாறாக நபித்தோழரின் சொல்லாக அறிவிப்பார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-1/481, அல்இக்மால்-2/436, அல்இலல்-இப்னு அபூஹாதிம்-ஆய்வாளரின் முன்னுரை-1/77)

பிற்காலத்தில் ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு பார்வை குறைப்பாடு ஏற்பட்டது. எனவே இவர் ஒரு செய்தியை நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் கருத்து வேறுபாட்டுடன் அறிவித்தால் இவரிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் எப்படி அறிவித்தார்கள் என்று பார்க்க வேண்டும்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.