அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) இந்த ஏழு (ஒன்பது) வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹத்மி, வ அஊது பிக மினத் தரத்தீ, வ அஊது பிக மினல் ஃகம்மி, வல்ஃகரகி, வல்ஹரகி, வல்ஹரம். வ அஊது பிக அய் யதகப்பத்தனிஷ் ஷைத்தானு இன்தல் மவ்த். வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரா. வ அஊது பிக அன் அமூத லதீஃகா”
(பொருள்: அல்லாஹ்வே! இடிபாடுகளுக்குள் சிக்கி மரணிப்பதை விட்டும், உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும், துக்கத்தில் மரணிப்பதை விட்டும், நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும், நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும், தள்ளாத வயதில் மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும், (நச்சு உயிரினங்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)
(முஸ்னது அஹ்மத்: 15523)حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي هِنْدٍ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى أَفْلَحَ مَوْلَى أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي الْيَسَرِ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ السَّبْعِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ، وَالْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-14975.
Musnad-Ahmad-Shamila-15523.
Musnad-Ahmad-Alamiah-14975.
Musnad-Ahmad-JawamiulKalim-15219.
குறிப்பு: மேற்கண்ட செய்தியில் பிரார்த்தனையின் எண்ணிக்கை 7 என்று கூறப்பட்டுள்ளது. அல்மஃரிஃபது வத்தாரீக்-1/319 எனும் நூலில் 9 வார்த்தைகள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர் இதைச் சரியாக கணக்கிடாமல் தவறாக கூறியிருக்கலாம். அல்லது எழுத்துப் பிரதியில் தவறாக கூறப்பட்டிருக்கலாம்.
இந்த வகை அறிவிப்பாளர்தொடர்களில் மேற்கண்ட மக்கீ பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இந்த எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் இந்த எண்ணிக்கை கூறப்படவில்லை.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . மக்கீ பின் இப்ராஹீம்-அல்ஹன்ளலீ
3 . அப்துல்லாஹ் பின் ஸயீத்-அல்ஃபஸாரீ
4 . ஸைஃபீ பின் ஸியாத்-அபூஅய்யூப் (ரலி) அவர்களின் அடிமை…
5 . அபுல்யஸர் (ரலி)-கஅப் பின் அம்ர்
இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து மக்கீ பின் இப்ராஹீம், வகீஃ, ஈஸா பின் யூனுஸ், ஃபள்ல் பின் மூஸா, முஹம்மத் பின் ஜஅஃபர், அனஸ் பின் இயாள் ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் அறிவிப்பாளர்தொடரில் முரண்பட்டு அறிவித்துள்ளனர்.
1 . மக்கீ பின் இப்ராஹீம்
1 . இந்தச் செய்தியை மக்கீ பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், உபைதுல்லாஹ் பின் உமர், யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அப்பாஸ் அத்தூரீ, அலீ பின் பஹ்ர் போன்ற முக்கியமான, பலமான, அதிகமான அறிஞர்கள் மக்கீ பின் இப்ராஹீம் —> அப்துல்லாஹ் பின் ஸயீத் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
பார்க்க: அஹ்மத்-15523, அபூதாவூத்-1552, அல்மஃரிஃபது வத்தாரீக்-1/319, முஸ்னதுஷ் ஷாஷீ-1521, அல்முஃஜமுல் கபீர்-15735,
2 . மக்கீ பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் அவர்கள் மக்கீ பின் இப்ராஹீம் —> அப்துல்லாஹ் பின் ஸயீத் —> அபூஹிந்த் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இவர் அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களுக்கும், ஸைஃபீ பின் ஸியாத் அவர்களுக்கும் இடையில் (அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களின் பாட்டனாரான) அபூஹிந்த் என்ற அறிவிப்பாளரை கூடுதலாக அறிவித்துள்ளார்.
பார்க்க: ஹாகிம்-1948,
இது ஷாத் என்றும் கூறலாம். அல்லது “அல்மஸீத் ஃபீ இத்திஸாலிஸ் ஸனத்” என்றும் கூறலாம். (காரணம் முதல் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்கள் நேரடியாக ஸைஃபீ பின் ஸியாத் அவர்களிடம் கேட்டதாக வார்த்தை அமைப்பு உள்ளது.)
பார்க்க: அபூதாவூத்-1553, நஸாயீ-5533, குப்ரா நஸாயீ-7919,
2 . வகீஃ
பார்க்க: இலலுல் ஹதீஸ்-2085,
3 . ஈஸா பின் யூனுஸ்
பார்க்க: அபூதாவூத்-1553, அத்துஆ-தப்ரானீ-1363,
4 . ஃபள்ல் பின் மூஸா
பார்க்க: நஸாயீ-5531, குப்ரா நஸாயீ-7917,
5 . முஹம்மத் பின் ஜஅஃபர்
பார்க்க: நஸாயீ-5533, குப்ரா நஸாயீ-7919,
வகீஃ, ஈஸா பின் யூனுஸ், ஃபள்ல் பின் மூஸா, முஹம்மத் பின் ஜஅஃபர் ஆகியோர் முதல் வகை அறிவிப்பாளர்தொடரில் தான் அறிவித்துள்ளனர்.
6 . அனஸ் பின் இயாள் பின் ளம்ரா-இப்னு ளம்ரா-அபூளம்ரா
1 . அனஸ் பின் இயாள்-அபூளம்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அலீ பின் பஹ்ர், யஃகூப் பின் ஹுமைத், ஹாரூன் பின் மூஸா ஆகியோர் அபூளம்ரா —> அப்துல்லாஹ் பின் ஸயீத் —> அபூஹிந்த் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
பார்க்க: அஹ்மத்-15524, அல்ஆஹாத் வல்மஸானீ-1919, அத்துஆ-தப்ரானீ-1362,
2 . அனஸ் பின் இயாள்-அபூளம்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஃகூப் பின் ஹுமைத், யூனுஸ் பின் அப்துல்அஃலா, இப்ராஹீம் பின் ஹம்ஸா ஆகியோர் அபூளம்ரா —> அப்துல்லாஹ் பின் ஸயீத் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
பார்க்க: அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-269, நஸாயீ-5532, குப்ரா நஸாயீ-7918, அல்குனா வல்அஸ்மாஃ-, அல்முஃஜமுல் கபீர்-,
இந்த வகை அறிவிப்பாளர்தொடரே மற்ற அதிகமானவர்களின் அறிவிப்பாளர்தொடரைப் போன்று உள்ளதால் இதுவே முன்னுரிமை பெற்ற அறிவிப்பாளர்தொடராகும்.
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களிடம் வகீஃ அவர்களின் செய்தி பற்றி இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கேட்கும் போது அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் அனஸ் பின் இயாள் பின் ளம்ரா-அபூளம்ரா எனும் அனஸ் பின் ளம்ரா-இப்னு ளம்ரா அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை தந்தார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2085)
என்றாலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இதில் அனைத்து வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிடவில்லை. இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம்.
மேலும் அபூளம்ரா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் இரு வகையாக அறிவித்துள்ளதையும் மேலே நாம் குறிப்பிட்டுள்ளோம். எனவே நாம் அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அதிகமானோர் அறிவிக்கும் முதல் வகை அறிவிப்பாளர்தொடருக்கே முன்னுரிமை அளிக்கிறோம்.
1 . இந்தக் கருத்தில் அபுல்யஸர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் ஸயீத் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-15523, அபூதாவூத்-1552, அல்மஃரிஃபது வத்தாரீக்-1/319, அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-269, குப்ரா நஸாயீ-7917, 7918, 7919, நஸாயீ-5531, 5532, 5533, அல்குனா வல்அஸ்மாஃ-1/186, முஸ்னதுஷ் ஷாஷீ-1521, 1522, அத்துஆ-தப்ரானீ-1363, அல்முஃஜமுல் கபீர்-15735, அத்தஃவாதுல் கபீர்-339,
- அல்மஃரிஃபது வத்தாரீக்-1/319.
المعرفة والتاريخ – ت العمري – ط العراق (1/ 319):
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ صَيْفِيٍّ مَوْلَى أَفْلَحَ مَوْلَى أَبِي أَيُّوبَ عَنْ أَبِي الْيُسْرِ: أَنّ رَسُولَ الله صلى الله عليه وسلم كان يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ مِنَ التِّسْعِ يَقُولُ: اللَّهمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ وَالْغَرَقِ وَالْحَرْقِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ في سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
…
- அல்ஜிஹாத்-இப்னு அபூஆஸிம்-269.
الجهاد لابن أبي عاصم (2/ 637)
269 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَالتَّرَدِّي، وَالْهَرَمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، أَوْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، أَوْ أَمُوتَ لَدِيغًا»
…
- அல்குனா வல்அஸ்மாஃ-1/186.
الكنى والأسماء للدولابي (1/ 186)
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ صَيْفِيٍّ وَهُوَ مَوْلَى أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي الْيَسَرِ السُّلَمِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَهْرَمِ وَالْهَرَمِ وَالْغَمِّ وَالتَّرَدِّي وَالْغَرَقِ وَالْحَرَقِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ أَوْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا أَوْ أَنْ أَمُوتَ لَدِيغًا» قَالَ: وَسَمِعْتُ الْعَبَّاسَ بْنَ مُحَمَّدٍ الدُّورِيَّ يَقُولُ: سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ: أَبُو الْيَسَرِ لَيْسَ فِيهِ كَعْبُ بْنُ عَمْرٍو. قَالَ: وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ يَقُولُ: أَبُو الْيَسَرِ كَعْبُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ عَمْرِو بْنِ سَوَّادٍ تُوُفِّيَ سَنَةَ خَمْسٍ وَخَمْسِينَ بِالْمَدِينَةِ وَهُوَ آخِرُ أَهْلِ بَدْرٍ وَفَاةً وَاللَّهُ أَعْلَمُ. أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ شُعَيْبٍ قَالَ: «أَبُو الْيَسَرِ الْأَنْصَارِيُّ لَهُ صُحْبَةٌ» . أَنْبَأَ أَحْمَدُ بْنُ يُوسُفَ قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَلَمَةَ قَالَ: ” أَبُو الْيَسَرِ اسْمُهُ: كَعْبُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ سَوَّادِ بْنِ غَنْمِ بْنِ كَعْبِ بْنِ سَلَمَةَ، مِنْ أَهْلِ بَدْرٍ، وَشَهِدَ الْعَقَبَةَ “
…
- முஸ்னதுஷ் ஷாஷீ-1521, 1522.
المسند للشاشي (3/ 402)
1521 – حَدَّثَنَا الْعَبَّاسُ الدُّورِيُّ، سَنَةَ إِحْدَى وَسَبْعِينَ وَمِائَتَيْنِ، نا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَبُو السَّكَنِ، نا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي هِنْدَ عَنْ صَيْفِيِّ، مَوْلَى أَفْلَحَ مَوْلَى أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيُّ، عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ وَالْغَرَقِ وََالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ قَبْلَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
…
المسند للشاشي (3/ 403)
1522 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ، نا عُبَيْدُ اللَّهِ بْنِ عُمَرَ، نا مَكِّيُّ، نا عَبْدُ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ وَالْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَمِّ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
…
- அத்துஆ-தப்ரானீ-1363.
الدعاء للطبراني (ص: 406)
1363 – حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عَلِيُّ بْنُ بَحْرٍ، ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، حَدَّثَنِي مَوْلًى لِأَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا الْيَسَرِ كَعْبَ بْنَ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَالتَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ وَالْغَرَقِ وَالْحَرِيقِ وَالْهَدْمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ، وَأَعُوذُ بِكَ أَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
…
- அத்தஃவாதுல் கபீர்-339.
الدعوات الكبير (1/ 450)
339 – أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ الْقَطَّانُ بِبَغْدَادَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ دُرُسْتَوَيْهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى أَفْلَحَ مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي الْيَسَرِ، قَالَ يَعْقُوبُ: وَهُوَ كَعْبُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادٍ يُكْنَى أَبَا الْيَسَرِ، عَقَبِيٌّ بَدْرِيٌّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ السَّبْعِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
…
- அப்துல்லாஹ் பின் ஸயீத் —> அபூஹிந்த் —> ஸைஃபீ பின் ஸியாத் —> அபுல்யஸர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-15524, அல்ஆஹாத் வல்மஸானீ-1919, அத்துஆ-தப்ரானீ-1362, இலலுல் ஹதீஸ்-2085, ஹாகிம்-1948,
- அல்ஆஹாத் வல்மஸானீ-1919.
الآحاد والمثاني لابن أبي عاصم (3/ 460)
1919 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، ثنا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ جَدِّهِ أَبِي هِنْدَ، عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي الْيُسْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَالتَّرَدِّي وَالْهَرَمِ وَالْغَرَقِ وَالْحَرَقِ وَأَعُوذُ بِكَ إِنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا أَوْ أَمُوتَ لَدِيغًا»
…
- அத்துஆ-தப்ரானீ-1362.
الدعاء للطبراني (ص: 405)
1362 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ خَلَفٍ الْقَطِيعِيُّ، ثنا هَارُونُ بْنُ مُوسَى الْفَرْوِيُّ، ثنا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ جَدِّهِ أَبِي هِنْدٍ، عَنْ صَيْفِيٍّ مَوْلَى أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي الْيَسَرِ السُّلَمِيِّ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْغَمِّ، وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ، أَوْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا أَوْ أَنْ أَمُوتَ لَدِيغًا»
…
அஸ்ஸலாமு அலைக்கும்.
வ அலைக்கும் ஸலாம்.
ஸலாம் டைப் பண்ணியதுமே அடுத்த வரி டைப் பண்ண ஆரம்பிக்கும்போது தவறுதலாக Post Comment என்பதில் கை பட்டு போஸ்ட்டாகிவிட்டது. இப்படி தவறுதலாக கை பட்டு வரும் கமெண்ட்களை டெலிட் செய்ய இந்த தளத்தில் வசதி இல்லயே ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இந்த ஏழு வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்” என்று இந்த ஹதீஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பிலும் ஏழு விதமான விஷயங்களைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அரபியில்,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدَمِ
وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي
وَأَعُوذُ بِكَ مِنَ الْغَمِّ
وَالْغَرَقِ
وَالْحَرَقِ
وَالْهَرَمِ
وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
ஆகிய 9 ஏழு விதமான விஷயங்கள் அந்த துஆவில் இடம்பெற்றுள்ளதே? இதை எவ்வாறு விளங்குவது? الْغَمِّ ,الْغَرَقِ, الْحَرَقِ ,الْهَرَمِ – இவற்றின் பொருள் என்ன?
அறிவிப்பாளர் எண்ணிக்கையை தவறாக கூறியிருக்கலாம்.
9 என்பதற்கு பதிலாக 7 என்று கூறியது தவறாக இருக்கலாம் என்கிறீர்களா? அப்படியானால் மொழிபெயர்ப்பிலும் ஏழு விதமான விஷயங்கள் மட்டும் உள்ளதே? ஹதீஸிலுள்ள மற்ற சில வார்த்தைகளுக்கு பொருள் இல்லையே? الْغَمِّ ,الْغَرَقِ, الْحَرَقِ ,الْهَرَمِ – இவற்றின் பொருள் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும். முதலில் நஸாயில் உள்ள தமிழாக்கத்தையே இதில் சேர்த்தோம். தற்போது இதில் உள்ள கூடுதல் வார்த்தைகளுக்கு தமிழாக்கம் செய்துள்ளோம். விரிவான தகவலைக் காண்க.
அல்ஹம்துலில்லாஹ். ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்