பாடம்:
உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக் கண்டார்கள். அதை எடுத்து துடைத்து உண்டார்கள். பிறகு, “ஆயிஷாவே! கண்ணியமானதை (அதாவது உணவை) கண்ணியப்படுத்து. ஏனெனில் (உணவு எனும்) நற்பாக்கியம் ஒரு சமுதாயத்தை விட்டு நீங்கிவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வருவதில்லை” என்று கூறினார்கள்.
(இப்னுமாஜா: 3353)بَابُ النَّهْيِ عَنْ إِلْقَاءِ الطَّعَامِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا وَسَّاجُ بْنُ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُحَمَّدٍ الْمُوَقَّرِيُّ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَأَخَذَهَا فَمَسَحَهَا، ثُمَّ أَكَلَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3344.
Ibn-Majah-Shamila-3353.
Ibn-Majah-Alamiah-3344.
Ibn-Majah-JawamiulKalim-3352.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா
2 . இப்ராஹீம் பின் முஹம்மத்-அல்ஃபிர்யாபீ, அல்மக்திஸீ
3 . வஸ்ஸாஜ் பின் உக்பா
4 . வலீத் பின் முஹம்மத்-அல்முவக்கிரீ
5 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
6 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் அபூபக்ர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47819-வலீத் பின் முஹம்மத்-அல்முவக்கிரீ ஹதீஸ்கலை அறிஞர்களால் விடப்பட்டவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-7503)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-3353, அல்முஃஜமுல் அவ்ஸத்-6451, 7889, …
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3405.
3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இலலுல் ஹதீஸ்-2480,
சமீப விமர்சனங்கள்