தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7631

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, கடும் காற்று அவர்களைத் தாக்கியது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ஹஜ் செய்துக் கொண்டிருந்தார்கள். காற்று மிகக் கடுமையாக வீசியதால், தம்மைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “காற்றைப் பற்றி நமக்கு யார் அறிவிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் காற்றைப் பற்றிக் கேட்ட தகவல் எனக்கு எட்டியது. நான் எனது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்திக்கொண்டு, அவர்களை அடைந்து கூறினேன்: இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் காற்றைப் பற்றிக் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காற்று என்பது அல்லாஹ்வின் கருணைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அது நன்மையைக் கொண்டும் வரும்; (அல்லது) வேதனையைக் கொண்டும் வரும். நீங்கள் அதனைக் கண்டால், திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நன்மையைக் கேளுங்கள். அதன் தீங்கைவிட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்.

(முஸ்னது அஹ்மத்: 7631)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي ثَابِتُ بْنُ قَيْسٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ:

أَخَذَتِ النَّاسَ رِيحٌ بِطَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ حَاجٌّ، فَاشْتَدَّتْ عَلَيْهِمْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: مَنْ يُحَدِّثُنَا عَنِ الرِّيحِ؟ فَلَمْ يُرْجِعُوا إِلَيْهِ شَيْئًا، فَبَلَغَنِي الَّذِي سَأَلَ عَنْهُ عُمَرُ مِنْ ذَلِكَ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي حَتَّى أَدْرَكْتُهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُخْبِرْتُ أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِهِ مِنْ شَرِّهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7631.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7446.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

3 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா

4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

5 . ஸாபித் பின் கைஸ்-அல்அன்ஸாரீ

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

நிகழ்வுடன் விரிவாக வரும் செய்திகள்:

  • மஃமர், அவ்ஸாஈ, யூனுஸ் —> ஸுஹ்ரீ —> ஸாபித் பின் கைஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: … அஹ்மத்- 7631, 9299, 10714, அல்அதபுல் முஃப்ரத்-906, …


நிகழ்வைக் கூறாமல் சுருக்கமாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்- 7413, 9629, அல்அதபுல் முஃப்ரத்-720, இப்னு மாஜா-3727, அபூதாவூத்-5097, …


 

 


2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1640.


3 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2252.



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4908,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.