இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிய வைக்கப்பட்டதாகும். மேலும், (சாபத்திற்கு) தகுதியில்லாத ஒன்றை யாராவது சபித்தால், அந்த சாபம் அவரிடமே திரும்பிவிடும்” என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி, முஸ்லிம் பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதருடைய மேலாடையைக் காற்று பறித்துச் சென்றது. அதனால் அவர் அதைச் சபித்தார்” என்று கூடுதலான வாக்கியத்துடன் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவரின் அறிவிப்பு அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.
(அபூதாவூத்: 4908)
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، ح حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ – قَالَ زَيْدٌ -: عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ – وَقَالَ مُسْلِمٌ إِنَّ رَجُلًا نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَعَنَهَا -، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4262.
Abu-Dawood-Shamila-4908.
Abu-Dawood-Alamiah-4262.
Abu-Dawood-JawamiulKalim-4264.
இதை மிகப் பலமானவர்கள் முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்பதால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
முதல் அறிவிப்பாளர்தொடர்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம்-அல்ஃபராஹீதி
3 . அபான் பின் யஸீத்-அல்அத்தார்
4 . கதாதா பின் திஆமா-அஸ்ஸதூஸீ
5 . ருஃபைஃ பின் மிஹ்ரான்-அபுல்ஆலியா (ரஹ்)
6 . நபி (ஸல்)
இரண்டாவது அறிவிப்பாளர்தொடர்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . ஸைத் பின் அக்ஸம்
3 . பிஷ்ர் பின் உமர்-அஸ்ஸஹ்ரானீ
4 . அபான் பின் யஸீத்-அல்அத்தார்
5 . கதாதா பின் திஆமா-அஸ்ஸதூஸீ
6 . ருஃபைஃ பின் மிஹ்ரான்-அபுல்ஆலியா
7 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
8 . நபி (ஸல்)
ஆய்வின் சுருக்கம்:
1 . இந்தச் செய்தியை அபான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பிஷ்ர் பின் உமர் அவர்கள் அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
முஹம்மத் பின் அப்பாஸ் அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளார். (அல்அள்மா-அபுஷ்ஷைக்-713). என்றாலும் அபான் அவர்கள் ஹிஜ்ரி 160 இல் இறந்து விட்டார். முஹம்மத் பின் அப்பாஸ் அவர்கள் ஹிஜ்ரி 301 இல் இறந்தார். இதனால் இவருக்கும் அபான் அவர்களுக்கும் இடையில் 140 வருடம் இடைவெளி இருக்கிறது. எனவே இதில் ஹத்தஸனா-எங்களுக்கு அறிவித்தார் என்ற வார்த்தை அமைப்பு இருந்தாலும் இது முன்கதிஃ ஆகும்.
2 . அபான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் அவர்கள் அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார். இவர் பிஷ்ர் பின் உமர் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதால் இவரின் செய்தியே முன்னுரிமை பெற்றதாகும்.
3 . மேலும் அபான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிகப் பலமானவரான அஃப்பான் பின் முஸ்லிம் அவர்களும் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளார்.
பார்க்க: அஹாதீஸு அஃப்பான்-243.
4 . மேலும் இந்தச் செய்தியை கதாதா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் முக்கிய மாணவர்களான ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாஈ ஆகியோரும் இவ்வாறே முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5331, 5332.
எனவே முர்ஸல் என்பதே முன்னுரிமை பெற்ற செய்தி என்பதாலும், மவ்ஸூலாக-முழு அறிவிப்பாளர்தொடரில் வரும் இந்தச் செய்தி ஷாத் என்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . காற்றைத் திட்டக்கூடாது.
பார்க்க: அஹ்மத்-7631, திர்மிதீ-2252,
2 . திட்டியவருக்கே அந்த சொல் திரும்பிவிடும்.
பார்க்க: புகாரி-6045, அபூதாவூத்-4905,
3 . கடுமையான காற்றின் போது அதைவிட்டு பாதுகாப்புத் தேடவேண்டும்.
பார்க்க: முஸ்லிம்-1640,
கதாதா அவர்கள் அபுல்ஆலியா அவர்களிடமிருந்து இந்த செய்தியை செவியுற்றுள்ளாரா? இல்லையா? என்பது வேறு விசயம்.
இதைப் பற்றி பார்க்க: ராவிபெயர்-கதாதா பின் திஆமா.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் அப்பாஸ் —> அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: அபூதாவூத்-4908, திர்மிதீ-1978, முஸ்னத் பஸ்ஸார்-5330, இப்னு ஹிப்பான்-5745, அல்முஃஜமுல் கபீர்-12757, அல்முஃஜமுஸ் ஸகீர்-957, அல்அள்மா-அபுஷ்ஷைக்-713, மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-1080, ஷுஅபுல் ஈமான்-4864, அல்ஆதாப் பைஹகீ-337,
- அல்அள்மா-அபுஷ்ஷைக்-713.
العظمة لأبي الشيخ الأصبهاني (4/ 1315)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنُوهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، فَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ إِلَيْهِ»
…
- மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-1080.
معرفة الصحابة لأبي نعيم (1/ 349)
1080 – حَدَّثَنَاهُ أَبُو طَلْحَةَ تَمَّامُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، ثنا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا زَيْدُ بْنُ أَخْزَمَ، ثنا بِشْرُ بْنُ عُمَرَ، ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، ثنا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»
…
- முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் —> அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அபூதாவூத்-4908, ஷுஅபுல் ஈமான்-4865,
- அஃப்பான் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
—> அபான் பின் யஸீத் —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அஹாதீஸு அஃப்பான்-243.
أحاديث عفان بن مسلم – ضمن أحاديث الشيوخ الكبار (ص183 بترقيم الشاملة آليا):
243 – حَدَّثَنَا أَبَانٌ الْعَطَّارُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الرِّيَاحِيِّ قَالَ: اشْتَدَّتِ الرِّيحُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَشَفَتْ عَنْ رَجُلٍ ثِيَابَهُ فَلَعَنَهَا فَقَالَ: لا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ.
…
- ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாஈ —> கதாதா —> அபுல்ஆலியா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5331, 5332, தஃப்ஸீருத் தபரீ-,
- தஃப்ஸீருத் தபரீ-20752.
تفسير الطبري (16/ 587 ط التربية والتراث):
20752 – حدثنا بشر قال، حدثنا يزيد قال، حدثنا سعيد، عن قتادة، عن أبي العالية: أن رجلا خالجت الريحُ رداءَه فلعنها، فقال رسول الله صلى الله عليه وسلم: لا تَلْعنها، فإنها مأمورة، وإنه من لَعن شيئًا ليس له بأهلٍ رَجعت اللَّعنةُ على صاحبها.
…
2 . உஸைர் பின் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிஃ-1/56.
معجم الصحابة لابن قانع (1/ 56):
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ، نا مُهَلَّبُ بْنُ الْعَلَاءِ، نا شُعَيْبُ بْنُ بَيَانٍ، نا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ فَقَالَ رَسُولُ اللَّهِ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ مِنْ أَهْلِهِ رَجَعَتْ عَلَيْهِ»
…
சமீப விமர்சனங்கள்