தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7631

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

7631. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் மக்காவிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, கடும் காற்று அவர்களைத் தாக்கியது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ஹஜ் செய்துக் கொண்டிருந்தார்கள். காற்று மிகக் கடுமையாக வீசியதால், தம்மைச் சுற்றியிருந்தவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “காற்றைப் பற்றி நமக்கு யார் அறிவிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் காற்றைப் பற்றிக் கேட்ட தகவல் எனக்கு எட்டியது. நான் எனது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்திக்கொண்டு, அவர்களை அடைந்து கூறினேன்: இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் காற்றைப் பற்றிக் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காற்று என்பது அல்லாஹ்வின் கருணைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அது நன்மையைக் கொண்டும் வரும்; (அல்லது) வேதனையைக் கொண்டும் வரும். நீங்கள் அதனைக் கண்டால், திட்டாதீர்கள். அல்லாஹ்விடம் அதன் நன்மையைக் கேளுங்கள். அதன் தீங்கைவிட்டு அவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்.


حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي ثَابِتُ بْنُ قَيْسٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ:

أَخَذَتِ النَّاسَ رِيحٌ بِطَرِيقِ مَكَّةَ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ حَاجٌّ، فَاشْتَدَّتْ عَلَيْهِمْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: مَنْ يُحَدِّثُنَا عَنِ الرِّيحِ؟ فَلَمْ يُرْجِعُوا إِلَيْهِ شَيْئًا، فَبَلَغَنِي الَّذِي سَأَلَ عَنْهُ عُمَرُ مِنْ ذَلِكَ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي حَتَّى أَدْرَكْتُهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أُخْبِرْتُ أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ فَإِذَا رَأَيْتُمُوهَا، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِهِ مِنْ شَرِّهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7631.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7446.



இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

3 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா

4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

5 . ஸாபித் பின் கைஸ்-அல்அன்ஸாரீ

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

நிகழ்வுடன் விரிவாக வரும் செய்திகள்:

  • மஃமர், அவ்ஸாஈ, யூனுஸ் —> ஸுஹ்ரீ —> ஸாபித் பின் கைஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: … அஹ்மத்- 7631, 9299, 10714, அல்அதபுல் முஃப்ரத்-906, …


நிகழ்வைக் கூறாமல் சுருக்கமாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்- 7413, 9629, அல்அதபுல் முஃப்ரத்-720, இப்னு மாஜா-3727, அபூதாவூத்-5097, …


 

 


2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1640.


3 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2252.


…


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4908,

அஹ்மத் இமாம்-அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

عبد الرزاق بن همام بن نافع

இறப்பு: ஹிஜ்ரி 211, யமன்

தரம்: பலமானவர், மனனசக்தி மிக்கவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம் பின் நாஃபிஃ

தந்தை பெயர்: ஹம்மாம் பின் நாஃபிஃ அல்ஹிம்யாரீ

வம்சம்: ஹிம்யாரீ

புனைப்பெயர்: அபூபக்ர்

ஊர் பெயர்: ஸன்ஆ

பயணித்த ஊர்கள்: யமன், ஹிஜாஸ், ஷாம், ஈராக்

பிறப்பு: ஹிஜ்ரி 126, ஸன்ஆ, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 211, யமன்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துர்ரஸ்ஸாக் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 126 இல் யமன் நாட்டின் ஸன்ஆவில் பிறந்தார். இவர் ஹதீஸ் துறையில் மிகப் பெரிய அறிஞராகவும், மனனசக்தி மிக்கவராகவும் திகழ்ந்தார். அல்-முஸன்னஃப், தஃப்ஸீர் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

ஹதீஸ் அறிஞர்கள் பலர் இவரிடம் வந்து ஹதீஸ்களைக் கற்றனர். இவர் ஹிஜ்ரி 211 இல் யமனில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஹம்மாம் பின் நாஃபிஃ அல்ஹிம்யாரீ, வஹ்ப் பின் நாஃபிஃ அஸ்ஸன்ஆனீ, அய்மன் பின் நாபில், இக்ரிமா பின் அம்மார், இப்னு ஜுரைஜ், உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபஃஈ, யூனுஸ் பின் ஸுலைம் அஸ்ஸன்ஆனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ, ஸுஃப்யான் பின் உயைனா, வக்கீஃ பின் அல்ஜர்ராஹ், ஹம்மாத் பின் உஸாமா, ஸலமா பின் ஷபீப், அம்ர் பின் முஹம்மத் அன்னாக்கித், முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, மஹ்மூத் பின் ஃகைலான், அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மிஸ்ரீ

வேறு பெயர்கள்: அபூபக்ர், அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்


ஆதாரம்: muslimscholars.info (20121) · Should verify

மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா

معمر بن راشد

இறப்பு: ஹி-154

தரம்: மிகப் பலமானவர், என்றாலும் இவர் சிலரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை சரியாக மனனமிடவில்லை.


இயற்பெயர்: மஃமர்

தந்தை பெயர்: ராஷித்

புனைப்பெயர்: அபூஉர்வா

ஊர் பெயர்: யமன், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-96.

இறப்பு: ஹிஜ்ரி-154.

கால கட்டம்: 7.


இவர் ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் ஒருவர். ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களான மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் மஃமர் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களை முதல் தரத்திலிருந்து கடைசி தரம் வரை வகைப்படுத்துவதில் சில அறிஞர்களிடம் மாற்றுக் கருத்தும் உள்ளது.

ஈராக்வாசிகளிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. ஆனால் ஈராக்வாசிகளான ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானது என்று இப்னு மயீன் கூறியுள்ளார். புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பதிவு செய்துள்ளனர்.

ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ், ஹம்மாம் பின் முனப்பிஹ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானவை.


முஸ்லிமில் இடம்பெறும் இரு செய்திகளைத் தவிர மஃமர் அவர்கள் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்...


ஸாபித், ஹிஷாம் பின் உர்வா, ஆஸிம் பின் அபுன்னுஜூத் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை...


ஆய்வுக்காக: மஃமர் - ஸாபித் குறித்து அல்பானி அவர்களின் தகவல்.


இஸ்ஹாக் அத்தபரீ என்பவரின் நூல்: ஹதீஸு இஸ்ஹாக் தபரீ.

ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

ஸாபித் பின் கைஸ்-அல்அன்ஸாரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.