அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காற்றை நீங்கள் திட்ட வேண்டாம். நீங்கள் விரும்பாத (மோசமான காற்றைக் கண்டால்) இவ்வாறு கூறுங்கள்:
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் கைரி ஹாதிஹிர் ரீஹி, வ கைரி மா ஃபீஹா, வ கைரி மா உமிரத் பிஹி. வ நஊது பிக மின் ஷர்ரி ஹாதிஹிர் ரீஹி, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உமிரத் பிஹி.
(பொருள்: ‘அல்லாஹ்வே! இந்தக் காற்றின் நன்மையையும், இதில் உள்ள நன்மையையும், இது ஏவி வரப்பெற்ற நன்மையையும் நாங்கள் உன்னிடம் கேட்கிறோம். மேலும், இந்தக் காற்றின் தீமையிலிருந்தும், இதில் உள்ள தீமையிலிருந்தும், இது ஏவி வரப்பெற்ற தீமையிலிருந்தும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம்.)
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி), அனஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(திர்மிதி: 2252)بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ سَبِّ الرِّيَاحِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
” لَا تَسُبُّوا الرِّيحَ، فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ “
وَفِي البَاب عَنْ عَائِشَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَعُثْمَانَ بْنِ أَبِي العَاصِ، وَأَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ، وَجَابِرٍ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2252.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
…
மேலும் பார்க்க: அஹ்மத்-7631.
சமீப விமர்சனங்கள்