தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1978

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிய வைக்கப்பட்டதாகும். மேலும், (சாபத்திற்கு) தகுதியில்லாத ஒன்றை யாராவது சபித்தால், அந்த சாபம் அவரிடமே திரும்பிவிடும்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை பிஷ்ர் பின் உமர் என்பவர் தான் முழுமையான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம். (இதை முஸ்லிம் பின் இப்ராஹீம் என்பவர் அபான் அவர்களிடமிருந்து முர்ஸலாக-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார்).

(திர்மிதி: 1978)

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنْ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَلْعَنِ الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ بِشْرِ بْنِ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1901.
Tirmidhi-Shamila-1978.
Tirmidhi-Alamiah-1901.
Tirmidhi-JawamiulKalim-1897.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-4908.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.