அபூஉமாமா-அஸ்அத் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சிலர் குர்பானி கொடுப்பதற்காக பிராணியை வாங்குவார்கள். பின்னர் அதை கொழுக்க வைத்து, ஹஜ்பெருநாள் தினத்திற்கு பிறகு துல்ஹஜ் மாதத்தின் கடைசியில் அதை அறுத்துப் பலியிடுவார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
ஹதீஸ் எண்-19256 இல் வரும் அபூஸலமா, ஸுலைமான் ஆகியோரின் அறிவிப்புகள் முர்ஸல் ஆகும். மேற்கண்ட அபூஉமாமாவின் ஹதீஸ், பெயர் குறிப்பிடப்படப்படாத சிலரைப் பற்றிய தகவலாகும்.
அபூஇஸ்ஹாக் அல்மர்வஸீ (ரஹ்) அவர்கள் தனது ஷரஹில் கூறியுள்ளார்:
“சில அறிவிப்புகளில், ‘குர்பானி கொடுப்பது முஹர்ரம் மாதத்தின் ஆரம்பம் வரை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது சரியானது என்றால், முஹர்ரம் மாதம், முதல் பிறை வரை குர்பானி கொடுக்கும் நாட்கள் நீடிக்கும். அது சரியானதாக இல்லாவிட்டால், ‘மினா உடைய நாட்களே அறுக்கும் நாட்கள்’ என்பதே சரியான அறிவிப்பாகும். இதன் பிரகாரமே ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் சட்டம் அமைத்துள்ளார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இவ்விரண்டு கருத்திலும் விமர்சனம் உள்ளது. மேற்கண்ட செய்தி முர்ஸல் என்ற விமர்சனம் உள்ளது. இதற்கு முன் வந்துள்ள அபூஸலமா, ஸுலைமான் பின் மூஸா ஆகியோரின் செய்திகளில் ஸுலைமான் பின் மூஸாவின் அறிவிப்பே சிறந்தது என்றாலும் அவரின் செய்தியில் அறிவிப்பாளர்களிடையே முரண்பாடு உள்ளது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
(பைஹகீ-குப்ரா: 19257)أَخْبَرَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ , أنبأ زَاهِرُ بْنُ أَحْمَدَ، ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُسْلِمٍ، ثنا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ يَقُولُ:
إِنْ كَانَ الْمُسْلِمُونَ لَيَشْتَرِي أَحَدُهُمُ الْأُضْحِيَّةَ فَيُسَمِّنُهَا فَيَذْبَحُهَا بَعْدَ الْأَضْحَى آخِرَ ذِي الْحِجَّةِ.
حَدِيثُ أَبِي سَلَمَةَ وَسُلَيْمَانَ مُرْسَلٌ وَحَدِيثُ أَبِي أُمَامَةَ حِكَايَةٌ عَمَّنْ لَمْ يُسَمَّ. وَقَدْ قَالَ أَبُو إِسْحَاقَ الْمَرْوَزِيُّ رَحِمَهُ اللهُ فِي الشَّرْحِ: رُوِيَ فِي بَعْضِ الْأَخْبَارِ: الْأُضْحِيَّةُ إِلَى رَأْسِ الْمُحَرَّمِ , فَإِنْ صَحَّ ذَلِكَ فَالْأَمْرُ يَتَّسِعُ فِيهِ إِلَى غُرَّةِ الْمُحَرَّمِ , وَإِنْ لَمْ يَصِحَّ فَالَّخَبَرُ الصَّحِيحُ أَيَّامُ مِنًى أَيَّامُ نَحْرٍ , وَعَلَى هَذَا بَنَى الشَّافِعِيُّ رَحِمَهُ اللهُ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: فِي كِلَيْهِمَا نَظَرٌ , هَذَا لِإِرْسَالِهِ وَمَا مَضَى لِاخْتِلَافِ الرُّوَاةِ فِيهِ عَلَى سُلَيْمَانَ بْنِ مُوسَى , وَحَدِيثُ سُلَيْمَانَ بْنِ مُوسَى أَوْلَاهُمَا أَنْ يُقَالَ بِهِ وَاللهُ أَعْلَمُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19257.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . அபூஹாமித்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ
3 . ஸாஹிர் பின் அஹ்மத்
4 . அபூபக்ர்-நைஸாபூரீ
5 . முஹம்மது பின் இப்ராஹீம் பின் முஸ்லிம்
6 . முஅல்லா பின் மன்ஸூர்
7 . அப்பாத் பின் அவ்வாம்
8 . யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ
9 . அபூஉமாமா-அஸ்அத் பின் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-5553.
சமீப விமர்சனங்கள்