தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2541

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நட்ட ஈடு-இழப்பீடு வழங்குதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால்நடைகளால் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு கிடையாது;

(பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் தவறி விழுந்தால்) கிணறு (மற்றும்) சுரங்கங்களுக்கு இழப்பீடு கிடையாது;

புதையல்களில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) உண்டு.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மாலிக் இமாம் கூறுகிறார்:

‘ஜுபார்’ (جبار) என்பதன் விளக்கம் என்னவென்றால், அதில் நட்டஈடு (தியத்) ஏதுமில்லை என்பதாகும்.

(முஅத்தா மாலிக்: 2541)

18- جَامِعُ الْعَقْلِ.

حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ:

جَرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ.
قَالَ مَالِكٌ: وَتَفْسِيرُ الْجُبَارِ، أَنَّهُ لاَ دِيَةَ فِيهِ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2541.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.