இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக அல்லாஹ், மற்றவர்கள் நுழைவதற்கு முன்பே ஆதம் (அலை) அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான்.
அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) என்று வானவர்கள் கூறினர்.
(இது ஏனெனில்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்தினர்.
அல்லாஹ், “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” எனக் கூறியபோது, அந்த ஜின் இனத்தையே (உதாரணமாகக் கொண்டு) வானவர்கள் அப்படிக் கேட்டனர்.
ஜின்கள் பூமியில் குழப்பம் விளைவித்தபோது, அவர்களுக்கு எதிராக வானவர்களின் ஒரு படையை அல்லாஹ் அனுப்பினான். அவர்கள் ஜின்களை அடித்துத் துரத்தி, கடல்களின் தீவுகளுக்குள் விரட்டினர்.
எனவே தான் வானவர்கள், “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) அதாவது, அந்த ஜின் இனத்தவர்கள் செய்தது போன்றா? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” (அல்குர்ஆன்: 2:30) என்று கூறினான்.
(ஹாகிம்: 3035)أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُوسَى الصَّيْدَلَانِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ قُتَيْبَةَ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
” لَقَدْ أَخْرَجَ اللَّهُ آدَمَ مِنَ الْجَنَّةِ قَبْلَ أَنْ يَدْخُلَهَا أَحَدٌ، قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا: أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] وَقَدْ كَانَ فِيهَا قَبْلَ أَنْ يُخْلَقَ بِأَلْفَيْ عَامٍ الْجِنُّ بَنُو الْجَانِّ، فَأَفْسَدُوا فِي الْأَرْضِ، وَسَفَكُوا الدِّمَاءِ، فَلَمَّا قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] يَعْنُونَ الْجِنَّ بَنِي الْجَانِّ، فَلَمَّا أَفْسَدُوا فِي الْأَرْضِ بَعَثَ عَلَيْهِمْ جُنُودًا مِنَ الْمَلَائِكَةِ، فَضَرَبُوهُمْ حَتَّى أَلْحَقُوهُمْ بِجَزَائِرِ الْبُحُورِ. قَالَ: فَقَالَتِ الْمَلَائِكَةُ: {أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا} [البقرة: 30] كَمَا فَعَلَ أُولَئِكَ الْجِنُّ بَنُو الْجَانِّ؟ قَالَ: فَقَالَ اللَّهُ: {إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ} [البقرة: 30]
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3035.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2961.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-முஹம்மத் பின் அப்துல்லாஹ்
2 . அப்துல்லாஹ் பின் முஹம்மத்-அல்கஅபீ
3 . இஸ்மாயீல் பின் குதைபா
4 . இப்னு அபூஷைபா இமாம்-அபூபக்ர்-அப்துல்லாஹ் பின் முஹம்மத்
5 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்
6 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்
7 . புகைர் பின் அக்னஸ்
8 . முஜாஹித் பின் ஜப்ர்-அல்குரைஷீ
9 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-321, ஹாகிம்-3035, …
- தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-321.
تفسير ابن أبي حاتم (1/ 77):
321 – حَدَّثَنَا أَبِي ثنا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ ثنا أَبُو مُعَاوِيَةَ ثنا الأَعْمَشُ عَنْ بُكَيْرِ ابن الأَخْنَسِ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: كَانَ الْجِنُّ بَنُو الْجَانِّ فِي الأَرْضِ قَبْلَ أَنْ يُخْلَقَ آدَمُ بِأَلْفَيْ سَنَةٍ، فَأَفْسَدُوا فِي الأَرْضِ، سَفَكُوا الدِّمَاءَ، فَبَعَثَ اللَّهُ جُنْدًا مِنَ الْمَلائِكَةِ فَضَرَبُوهُمْ حَتَّى أَلْحَقُوهُمْ بِجَزَائِرِ الْبُحُورِ، فَقَالَ اللَّهُ لِلْمَلائِكَةِ: إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ قَالَ: إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஹாதிம்-அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத்
2 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இமாம்-முஹம்மத் பின் இத்ரீஸ்
3 . அலீ பின் முஹம்மத்-அத்தனாஃபிஸீ
4 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்
5 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்
6 . புகைர் பின் அக்னஸ்
7 . முஜாஹித் பின் ஜப்ர்-அல்குரைஷீ
8 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
சமீப விமர்சனங்கள்