தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2337

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்பாத் பின் கஸீர் என்பவர் மதீனாவுக்கு வந்தார். அவர் (அங்குள்ள) அலாஉ (பின் அப்துர்ரஹ்மான்) அவர்களின் சபைக்குச் சென்று, அவரது கரத்தைப் பிடித்து அவரை எழுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்:

அல்லாஹ்வே! நிச்சயமாக இவர், தம் தந்தையிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஃபான் மாதம் பாதி வந்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறியதாக அறிவிக்கிறார்.

அப்போது அலாஉ அவர்களும், “அல்லாஹ்வே! நிச்சயமாக எனது தந்தை, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக எனக்கு அறிவித்தார்” என்று (உறுதியாகக்) கூறினார்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷிப்ல் பின் அலாஉ, அபூஉமைஸ், ஸுஹைர் பின் முஹம்மத் ஆகியோரும் அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் இந்த ஹதீஸை (மக்களுக்கு) அறிவிக்காதவராக இருந்தார். எனவே நான் அஹ்மத் இமாம் அவர்களிடம், ‘ஏன் அவர் அவ்வாறு செய்தார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை ரமளானுடன் இணைத்து (தொடர்ந்து) நோன்பு நோற்பார்கள் என்பது அவரிடம் (ஆதாரப்பூர்வமான செய்தியாக) இருந்தது. எனவே, இதற்கு மாற்றமான கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அவர் இதை அறிவிக்கவில்லை’ என்று விடையளித்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்தச் செய்தி (அதாவது ஷஃபான் பாதிக்கு பிறகு நோன்பை நிறுத்துவது, ரமளானுடன் இணைத்து நோன்பு நோற்பது குறித்து வந்துள்ள செய்திக்கு) முரணானது கிடையாது. மேலும், அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களைத் தவிர வேறு யாரும் (அவருடைய) தந்தையிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கவில்லை தான்.

(அபூதாவூத்: 2337)

بَابٌ فِي كَرَاهِيَةِ ذَلِكَ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ:

قَدِمَ عَبَّادُ بْنُ كَثِيرٍ الْمَدِينَةَ، فَمَالَ إِلَى مَجْلِسِ الْعَلَاءِ، فَأَخَذَ بِيَدِهِ، فَأَقَامَهُ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنَّ هَذَا يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا انْتَصَفَ شَعْبَانُ، فَلَا تَصُومُوا»،

فَقَالَ الْعَلَاءُ: اللَّهُمَّ إِنَّ أَبِي، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ.

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الثَّوْرِيُّ، وَشِبْلُ بْنُ الْعَلَاءِ، وَأَبُو عُمَيْسٍ، وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، قَالَ أَبُو دَاوُدَ: ” وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ، لَا يُحَدِّثُ بِهِ، قُلْتُ لِأَحْمَدَ: لِمَ قَالَ؟ لِأَنَّهُ كَانَ عِنْدَهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ، وَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَهُ “، قَالَ أَبُو دَاوُدَ: «وَلَيْسَ هَذَا عِنْدِي خِلَافُهُ، وَلَمْ يَجِئْ بِهِ غَيْرُ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2337.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


இந்தச் செய்தியை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற சிலர் முன்கர் என்று கூறியதாக சிலர் அறிவித்துள்ளனர்…

காரணம் நபி (ஸல்) அவர்கள் சில நேரம் ஷஃபான் மாத நோன்பை ரமலான் வரை தொடர்வார்கள் என்றும், ரமலானுக்கு ஒரு நாள், அல்லது இருநாள்களுக்கு முன்பு நோன்பு வைக்காதீர்கள் என்று மற்றவர்களை தடுத்ததாகவும் ஹதீஸ்கள் உள்ளன. இதை அலாஃ அவர்கள் தனது தந்தையிடமிருந்து தனித்து அறிவித்துள்ளார் என்று கூறி மறுக்கின்றனர்.

மற்ற அறிஞர்கள் இதை சரியானது என்றே முடிவு செய்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், அலாஃ அவர்கள் தனது தந்தையிடமிருந்து தனித்து அறிவிப்பதால் பலவீனமாகிவிடாது, பலமானவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஏற்கப்படும் என்றும், இந்தத் தடை ஒருவர் அறவே நோன்பு வைக்காமல் இருந்து ஷஃபான் மாதம் வந்தவுடன் அதில் மட்டும் எந்த காரணமும் இல்லாமல் நோன்பு வைப்பதே என்று கூறியுள்ளனர்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.