தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-8646

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஹாகிம்: 8646)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ، ثَنَا أَبُو حَفْصٍ الْقَاضِي عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنَ الْمَوَالِي مِنْ دِمَشْقَ، هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهُمُ الدِّينَ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الْبُخَارِيِّ، وَلَمْ يُخْرِجَاهُ “


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8646.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8750.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-முஹம்மத் பின் அப்துல்லாஹ்

2 . முஹம்மத் பின் யஃகூப்-அல்உமவீ

3 . முஹம்மத் பின் இஸ்ஹாக்-அஸ்ஸஃகானீ

4 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ

5 . உஸ்மான் பின் ஸுலைமான்-அல்அஸ்தீ

6 . ஸுலைமான் பின் ஹபீப்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


மேலும் பார்க்க: இப்னு மாஜா-4090.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.