முஸ்லிம் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இப்னு முதீஃ அவர்களிடம் சென்றேன். அப்போது (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்) “அஸ்ஸலாமு அலைக” (உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்று கூறினார்கள். அதற்கு அவர், “வஅலைகஸ்ஸலாமு வ ரஹ்மதுல்லாஹி” (உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு, “அபூஅப்திர்ரஹ்மானே! வருக, உங்கள் வரவு நல்வரவாகட்டும்! இவருக்கு ஒரு தலையணையைப் போடுங்கள்” என்று கூறினார்.
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘மூன்று பொருட்கள் திருப்பி அனுப்பப்படக் கூடாதவை: (அவை) பால், தலையணை, வாசனைத் திரவியம்’ என்று கூறுவதை நான் கேட்டிருக்காவிட்டால், நான் இதன் மீது அமர்ந்திருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13279)حَدَّثَنَا مُصْعَبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَمْزَةَ الزُّبَيْرِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْخُزَامِيُّ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا أَبِي، قَالَا: ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُسْلِمِ بْنِ جُنْدُبٍ، عَنْ أَبِيهِ
أَنَّهُ: دَخَلَ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَلَى ابْنِ مُطِيعٍ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ، فَقَالَ: وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ، وَمَرْحَبًا وَأَهْلًا بِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ضَعُوا لَهُ وِسَادَةً، فَقَالَ ابْنُ عُمَرَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ: اللَّبَنُ، وَلَا الْوِسَادَةُ وَلَا الدُّهْنُ ” مَا جَلَسْتُ عَلَيْهَا
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13279.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13107.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தச் செய்தி முஸ்லிம்-3771 இல் உள்ள செய்திக்கு மாற்றமாக தெரிகிறது. இதற்கு கூறப்படும் விளக்கம்:
இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் முதலில் “நான் உட்கார வரவில்லை” என்று கூறித் தடுத்தாலும், இப்னு முதீஃ அவர்கள் வற்புறுத்தி தலையணையைத் தந்தபோது, நபிகளாரின் “மூன்று பொருட்களைத் திருப்பி அனுப்பாதீர்” என்ற கட்டளைக்கு மதிப்பளிக்கும் விதமாக, அந்தத் தலையணையை ஏற்றுக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகு தனது செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், “நான் உட்கார வரவில்லை” என்பது அவருடைய தொடக்க நிலை. ஆனால் நபிகளாரின் ஹதீஸை நினைவு கூர்ந்த பின், அந்த உபசரிப்பை ஏற்றுக்கொண்டது அவரது செயல். இதில் முரண்பாடு இல்லை, மாறாக நபிகளாரின் சொல்லுக்கு இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது.
மேலும் பார்க்க: திர்மிதீ-2790.
சமீப விமர்சனங்கள்