ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ -
قَالَ لِي أَحْمَد بْن عَبد اللهِ: حدَّثنا هاشم بْن القاسم، حَدَّثَنَا أَبو جَعفَر، عَنْ قَتادة، عَنْ جُرى بْن كُلَيب، وكَانَ يُثني عليه خيرا. حديثُه فِي أهل المدينة.
கதாதா அவர்கள் இவரை பாராட்டியுள்ளார்...
(நூல்கள்: தாரீகுல் கபீர்-2336, தஹ்தீபுல் கமால்-4/553, தஹ்தீபுத் தஹ்தீப்-1/298, 2/78)
216 - جرى بن كُلَيْب بصرى تَابِعِيّ ثِقَة
இஜ்லீ அவர்கள் இவர் பஸராவைச் சேர்ந்த தாபிஈ; பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-216, தஹ்தீபுத் தஹ்தீப்-2/78)
جرى بْن كُلَيْب النَّهْدِيّ يروي عَن على وَبشير بْن الخصاصية روى عَنهُ قَتَادَة
966 - جري بن كليب السدوسي، البصري
حديثه في أهل المدينة. روى عن: علي، وبشير ابن الخصَاصية، تفرد عنه قتادة.
967 - جري بن كليب النهدي، الكوفي
عن رجل من سُلَيم. روى عنه: أبو إسحاق السبيعي، كذا ذكره المزي،
وزعم أن أبا داود فرق بينهما. انتهى. وهو كلام يُفهم منه الحَصْر في هذين الرَّجُلَيْن،
وليس كذلك؛ لأن جماعة في هذه الطبقة سموا بذلك، وإن كان في بعضهم تداخل في بعض، فنذكره كما هو.
968 - جري بن كليب النهدي روى عن علي، وبشير ابن الخصاصية، روى عنه قتادة.
969 - وجُري السدوسي روى عن علي، روى عنه أبو إسحاق السبيعي.
970 - جُري بن كليب النهدي روى عنه قتادة، وكان يمني عليه خيْرًا. وقال العجلي: جري بن كليب بصري، تابعى، ثقة.
971 - جُري بن كليب العامري عن ميمونة بنت الحارث، روى عنه أبو إسحاق السبيعي.
4 - وفي مسند الدارمي: ثنا سعيد بن عامر، ثنا شعبة، عن أبي إسحاق، عن جري النهدي، عن رجل من بني سُليم؛ فذكر حديثًا.
5 - وفي مسند أحمد من حديث عاصم ابن أبي النجود: عن جري، قال: لقي رجلا من بني سليم.
975 - جُري بن كليب السدوسي روى عن عثمان، وعلي، وبشير. وقال البزار: لا أعلم قتادة روى عن جري إلا هذين الحديثيْن، يعني: حديث (التضحية بالعَضْباء)، وحديث (المتعة).
976 - جري بن كليب النهدي عن علي ورجل من بني سُليم، روى عنه أبو إسحاق، وعاصم بن بهدلة. وذكر الترمذي من حديثه حديثًا وقال فيه: صحيح. وزعم بعضهم أنهما واحد، والأشبه أنهما اثنان وكلاهما يروي عن علي بن أبي طالب، واللَّه تعالى أعلم.
8 - وعند ابن ماكولا: جُري العذري، وجُري عن ابن المنكدر.
920- جُرَيّ تصغير جرو ابن كليب السدوسي البصري عن علي ابن أبي طالب مقبول من الثالثة
* [920] جري تصغير جرو بن كليب السدوسي البصري عن علي بن أبي طالب مقبول من الثالثة 4
قلت: حسن الحديث: ذكره البخاري في التاريخ الكبير (2/ 244 رقم 2336) وابن حبان في الثقات وقال العجلي "ثقة" وروى عنه قتادة بن دعامة السدوسي وكان يثني عليه خيراً (تهذيب التهذيب 2/ 78). وأخرج له الترمذي في جامعه (4/ 90 رقم 1504) وقال "هذا حديث حسن صحيح" والحاكم في مستدركه (4/ 248 رقم 7530) وقال "هذا حديث صحيح الإسناد ولم يخرجاه" ووافقه الذهبي. وأما قول ابن المديني "مجهول" وأبي حاتم "شيخ لا يحتج بحديثه" فقد عرفه قتادة وأثنى عليه ووثقه العجلي وذكره ابن حبان في الثقات.
1 . ஒருவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ ஆவார்.
இவர் பஷீர் பின் மஃபத் (ரலி), அலீ (ரலி), (உஸ்மான் பின் அஃப்பான்-ரலி, மைமூனா பின்த் ஹாரிஸ்-ரலி) போன்றோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து கதாதா அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியில் இவரை இப்னு ஹிப்பான் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ என்று கூறிவிட்டார். ஆனால் வேறு ஒரு ஜுரய்யு தான் நஹ்தீ ஆவார்.)
2 . மற்றொருவர் கூஃபாவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ-கூஃபீ ஆவார்.
இவர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3519)
இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், ஆஸிம் பின் பஹ்தலா போன்றோர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/298)
மேற்கண்ட இருவரில் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/536)
ஆனால் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னுல் மதீனீ அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியதால் அவ்வாறு கூறியிருக்கலாம்.
இப்னுல் ஜவ்ஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப்-நஹ்தியை பற்றி கூறும் போது இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாகவும், அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அள்ளுஅஃபா வல்மத்ரூகூன்-646)
(சிலர் ஜுரய்யு பின் குலைப்-பஸரீ-நஹ்தீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரிடமிருந்து கதாதாவும், யூனுஸ் பின் அபூஇஸ்ஹாகும் அறிவித்துள்ளனர்; ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபியிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஜுரய்யு பின் குலைப் அல்ஆமிரீ என்பவரையும் சிலர் கூறியுள்ளனர். சிலர் ஜுரய்யு என்ற பெயரை சுருக்கியும், சிலர் விரிவாகவும் கூறியுள்ளனர். இதனால் இந்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது)
1 . புகாரீ, அபூஹாதிம், இப்னு ஹிப்பான் போன்றோர் இருவரும் ஒருவரே என்று கருதுவதாக தெரிகிறது.
وَمِنَ الْمُشْكِلِ جُزَيُّ بْنُ بُكَيْرٍ بِالزَّايِ مُعْجَمَةٍ، وَهُوَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، رَوَى عَنْ حُذَيْفَةَ،
وَجُرَيُّ بْنُ كُلَيْبٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنْ بَنِي سَدُوسٍ بِالرَّاءِ غَيْرِ مُعْجَمَةٍ، وَهُوَ أَيْضًا مِنْ أَهْلِ الْكُوفَةِ رَوَى عَنْ عَلِيٍّ هَذَا قَوْلُ الْبَرْدِيجِيِّ
وجُرَي النَّهْدي كُوفي، روى عن علي
2 . ஜுஸைய்யு பின் புகைருக்கும், ஜுரய்யு பின் குலைபுக்கும் உள்ள வார்த்தைக் குழப்பத்தை பற்றி விளக்கும் போது இப்னு கல்லாத் ராமஹுர்முஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப் பஸராவாசி என்றும் கூஃபாவாசி என்றும் குறிப்பிட்டு இது அறிஞர் பர்தீஜீ அவர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்முஹத்திஸுல் ஃபாஸிலு பைனர் ராவீ வல்வாயீ பக்கம்-276)
3 . அபூதாவூத், மிஸ்ஸீ, தஹபீ, இப்னு ஹஜர் போன்றோர் இருவரும் வெவ்வேறானவர்கள் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
1 . இருவரும் வெவ்வேறானவர்கள் என்று முடிவு செய்தால் அவர்களின் மாணவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.
(இந்த இருவரின் மாணவரும் கதாதா என்றால் ஜுரய்யு பஸரீ அவர்களை இஜ்லீ இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார். மாணவர் அபூஇஸ்ஹாக் போன்றவர்கள் என்றால் ஜுரய்யு கூஃபீ என்பதின்படி இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதின்படி குறைந்த பட்சம் மக்பூல்-பிறர் சார்புடையவர் என்ற தரத்தில்-அதாவது இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அப்போது ஏற்கலாம்-என்ற தரத்தில் ஆகிவிடுவார்)
2 . இருவரும் ஒருவரே என்று முடிவு செய்தால் இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ இமாம் போன்றோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். பலமானவர் அல்லது நடுத்தரமானவர் என்ற தரத்தில் ஆகிவிடுவார்.
1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.
2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.
3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.
4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.
5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.
சமீப விமர்சனங்கள்