இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு ஒட்டகத்தில் பத்து பேரும், ஒரு மாட்டில் ஏழு பேரும் பங்கு சேர்ந்து கொண்டோம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இதைவிட மிகவும் சரியானது. ஜாபிர் (ரலி) ஹுதைபியாவிலும், ஹஜ் மற்றும் உம்ராவிலும் கலந்துகொண்டவர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் பங்கு கொள்ளுமாறு கட்டளையிட்டதாக அவர் நமக்கு அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.
ஸுஃப்யான் ஸவ்ரீ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ‘நாங்கள் ஹுதைபியாவின் போது எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம்; ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியதாக இருந்தது’ என்று வேறொரு செய்தி வந்துள்ளது. இது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்ஃபிர்யாபீ அவர்கள், ‘ஒரு ஒட்டகம் ஏழு பேருக்கு’ என்று அறிவித்துள்ளார். இதே கருத்தை தான் மாலிக் பின் அனஸ், இப்னு ஜுரைஜ், ஸுஹைர் பின் முஆவியா, மற்றும் வேறுசிலரும் அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ‘ஒரு ஒட்டகம் ஏழு பேருக்கு உரியது’ என்றே கூறியுள்ளனர்.
மேலும் இதே கருத்தை அதாஉ பின் அபூரபாஹ் அவர்களும் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் ஆகிய முஸ்லிம் இமாம் அவர்கள், மற்றவர்களின் அறிவிப்புகளை விட இவர்களின் அறிவிப்பையே ஆதாரமாக ஏற்று தம்முடைய நூலில் பதிவு செய்துள்ளார்.
ஸுஹ்ரீ —> உர்வா என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹதீஸைப் பொறுத்தவரை, முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார் அவர்கள் மட்டுமே, ‘ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியது’ என்ற குறிப்பைத் தனித்து அறிவித்துள்ளார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸைப் பொறுத்தவரை ஹுஸைன் பின் வாகித் அவர்கள், இல்பா பின் அஹ்மர் என்பவரிடமிருந்து இதை தனித்து அறிவித்துள்ளார். எனவே ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸ் இவை அனைத்தை விடவும் மிகச் சரியானது. (நாம் ஏற்கனவே கூறியுள்ளதுபோல்) ஹஜ், உம்ரா, ஹுதைபியாவின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையின் பிரகாரம் அவர்கள் குர்பானியில் கூட்டுச் சேர்ந்த செய்தியை அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.
(பைஹகீ-குப்ரா: 10203)أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ , وَأَبُو بَكْرٍ الْحِيرِيُّ قَالَا: أنا حَاجِبُ بْنُ أَحْمَدَ بْنِ سُفْيَانَ , ثنا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُنِيبٍ , ثنا الْفَضْلُ بْنُ مُوسَى , ثنا حُسَيْنُ بْنُ وَاقِدٍ , عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ:
” كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِنَا فَحَضَرْنَا النَّحْرَ فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَشَرَةٌ وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ “
كَذَا رُوِيَ بِهَذَا الْإِسْنَادِ وَحَدِيثُ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ أَصَحُّ مِنْ ذَلِكَ وَقَدْ شَهِدَ الْحُدَيْبِيَةَ وَشَهِدَ الْحَجَّ وَالْعُمْرَةَ , وَأَخْبَرَنَا بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ بِاشْتَرَاكِ سَبْعَةٍ فِي بَدَنَةٍ فَهُوَ أَوْلَى بِالْقَبُولِ وَبِاللهِ التَّوْفِيقُ , وَقَدْ رُوِيَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ , قَالَ: ” نَحَرْنَا يَوْمَ الْحُدَيْبِيَةِ سَبْعِينَ بَدَنَةً الْبَدَنَةُ عَنْ عَشَرَةٍ ” وَلَا أَحْسَبُهُ إِلَّا وَهْمًا فَقَدْ رَوَاهُ الْفِرْيَابِيُّ , عَنِ الثَّوْرِيِّ وَقَالَ: الْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ , وَكَذَلِكَ قَالَهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَابْنُ جُرَيْجٍ وَزُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ وَغَيْرُهُمْ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ , قَالُوا: الْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ وَكَذَلِكَ قَالَهُ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ , عَنْ جَابِرٍ , وَرَجَّحَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ رِوَايَتَهُمْ لَمَّا خَرَّجَهَا دُونَ رِوَايَةِ غَيْرِهِمْ وَأَمَّا حَدِيثُ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ فَإِنَّ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ بْنِ يَسَارٍ تَفَرَّدَ بِذِكْرِ الْبَدَنَةِ عَنْ عَشَرَةٍ فِيهِ , وَحَدِيثُ عِكْرِمَةَ يَتَفَرَّدُ بِهِ الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ , عَنْ عِلْبَاءَ بْنِ أَحْمَرَ , وَحَدِيثُ جَابِرٍ أَصَحُّ مِنْ جَمِيعِ ذَلِكَ وَأَخْبَرَ بِاشْتِرَاكِهِمْ فِيهَا فِي الْحَجِّ وَالْعُمْرَةِ وَبِالْحُدَيْبِيَةِ بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ أَوْلَى بِالْقَبُولِ وَبِاللهِ التَّوْفِيقُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-10203.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்