தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2664

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுக்கு என்னிடமிருந்து ஒரு ஹதீஸ் சென்றடையும் போது, அவன், ‘எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறதே! அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை நாம் ஹலாலாக ஏற்போம்; அதில் எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை நாம் ஹராமாய்க் கருதுவோம் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறக்கூடிய நிலை (விரைவில்) ஏற்பட்டுவிடக் கூடும்! அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் எதை ஹராம் (விலக்கப்பட்டதாக) ஆக்கினாரோ, அது அல்லாஹ் ஹராம் ஆக்கியதைப் போன்றதேயாகும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

(திர்மிதி: 2664)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ الحَسَنِ بْنِ جَابِرٍ اللَّخْمِيِّ، عَنْ المِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” أَلَا هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ، فَيَقُولُ: بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ، فَمَا وَجَدْنَا فِيهِ حَلَالًا اسْتَحْلَلْنَاهُ. وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ، وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ كَمَا حَرَّمَ اللَّهُ “

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2664.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-4604.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.