தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4604

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்:

(ஸுன்னா எனும்) நபிவழியைப் பின்பற்றுதல்.

4604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! எனக்கு வேதமும் (குர்ஆனும்), அதனுடன் அதைப் போன்ற இன்னொன்றும் (ஹிக்மத் எனும் ஸுன்னாவும்) வழங்கப்பட்டுள்ளன. அறிந்து கொள்ளுங்கள்! சொகுசு இருக்கையில் அமர்ந்திருக்கும் வயிறு நிரம்பிய ஒரு மனிதன், ‘நீங்கள் இந்த குர்ஆனை மட்டுமே பற்றிக்கொள்ளுங்கள்; அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹலாலாகக் கருதுங்கள், எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹராமாய்க் கருதுங்கள் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறும் காலம் விரைவில் வரும்.

அறிந்து கொள்ளுங்கள்! நாட்டுக்கழுதையின் இறைச்சியும், வேட்டையாடும் வனவிலங்குகளில் கோரைப் பற்கள் உடையவைகளும், (இஸ்லாமிய ஆட்சியில் ஒப்பந்தத்தோடு வாழும்) பிறமதக் குடிமகனின், விழுந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பொருளும் உங்களுக்கு ஆகுமானதல்ல; அதன் உரிமையாளர் அது தேவை இல்லை என்று விட்டுவிட்டாலே தவிர!”

மேலும், எவரேனும் ஒரு கூட்டத்தாரிடம் விருந்தினராகச் சென்றால், அவரை உபசரிப்பது அக்கூட்டத்தின் மீது கடமையாகும். அவர்கள் அவரை உபசரிக்காவிட்டால், தன் விருந்துபசாரத்திற்கு நிகரான அளவை அவர்களிடம் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு.

அறிவிப்பவர்: (ரலி)

மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

المقدام بن معدي كرب

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மிக்தாம் பின் மஃதீகரிப்

தந்தை பெயர்: மஃதீகரிப்

வம்சம்: அல்கிந்தீ

புனைப்பெயர்: அபூ கரீமா, அபூ யஹ்யா

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஷாம், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 4

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மிக்தாம் பின் மஃதீகரிப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் அபூ கரீமா மற்றும் அபூ யஹ்யா என்ற குன்யாக்களால் அறியப்பட்டவர். இவர் ஷாம் பகுதியில், குறிப்பாக ஹிம்ஸ் நகரில் வசித்தார்.

ஹிஜ்ரிக்கு முன் 4 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஹிஜ்ரி 87 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் ஷாம், ஹிம்ஸ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), காலித் பின் அல்வலீத், முஆத் பின் ஜபல், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் மிக்தாம் பின் மஃதீகரிப், ஸாலிஹ் பின் யஹ்யா பின் மிக்தாம், காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைது அர்ருஹ்பீ, யஹ்யா பின் ஜாபிர் அத்தாயீ, ஆமிர் அஷ்ஷஅபீ, ஷுரைஹ் பின் உபைது, அப்துர்ரஹ்மான் பின் அபூ அவ்ஃப் அல்ஜுரஷீ, அப்துர்ரஹ்மான் பின் மைஸரா அல்ஹழ்ரமீ, ராஷித் பின் ஸஃத், அபூ ஆமிர் அல்ஹவ்ஸனீ, முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ

வேறு பெயர்கள்: மிக்தாம்


ஆதாரம்: muslimscholars.info (5304) · Should verify


بَابٌ فِي لُزُومِ السُّنَّةِ

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ، حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ كَثِيرِ بْنِ دِينَارٍ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ أَلَا يُوشِكُ رَجُلٌ شَبْعَانُ عَلَى أَرِيكَتِهِ يَقُولُ عَلَيْكُمْ بِهَذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ، وَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ، أَلَا لَا يَحِلُّ لَكُمْ لَحْمُ الْحِمَارِ الْأَهْلِيِّ، وَلَا كُلُّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ، وَلَا لُقَطَةُ مُعَاهِدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا صَاحِبُهَا، وَمَنْ نَزَلَ بِقَوْمٍ فَعَلَيْهِمْ أَنْ يَقْرُوهُ فَإِنْ لَمْ يَقْرُوهُ فَلَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4604.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3990.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
(3. பலமானவர்)
.

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா (3. பலமானவர்).

3 . உஸ்மான் பின் கஸீர்-அபூஅம்ர் (3. பலமானவர்).

4 . ஹரீஸ் பின் உஸ்மான்-அர்ரஹ்பீ (3. பலமானவர்).

5 . அப்துர்ரஹ்மான் பின் அபூஅவ்ஃப் (3. பலமானவர்).

6 . மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) (1. நபித்தோழர்).


 

 


1 . இந்தக் கருத்தில் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹரீஸ் பின் உஸ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அபூஅவ்ஃப் —> மிக்தாம் (ரலி)

பார்க்க: அஹ்மத்-17174, அபூதாவூத்-4604, …


  • மர்வான் பின் ருஃ-பா —> அப்துர்ரஹ்மான் பின் அபூஅவ்ஃப் —> மிக்தாம் (ரலி)

பார்க்க: … அபூதாவூத்-3804, ஷரஹ் மஆனில் ஆஸார்-6410, 6639, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-6639, இப்னு ஹிப்பான்-12, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-4768, குப்ரா பைஹகீ-,


  • முஆவியா பின் ஸாலிஹ் —> ஹஸன் பின் ஜாபிர் —> மிக்தாம் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-24330, அஹ்மத்-17193, 17194, தாரிமீ-606, இப்னு மாஜா-12, 3193, திர்மிதீ-2664, …


  • முஆவியா பின் ஸாலிஹ் —> அபூஅப்துர்ரஹ்மான் —> மிக்தாம் (ரலி)

பார்க்க: அஹ்மத்-,


 


2 . அபூராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4605.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3050, அல்முஃஜமுல் கபீர்-14513, அஹ்மத்-6981, 6606,

அபூதாவூத் இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

உஸ்மான் பின் கஸீர்-அபூஅம்ர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹரீஸ் பின் உஸ்மான்-அர்ரஹ்பீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துர்ரஹ்மான் பின் அபூஅவ்ஃப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மிக்தாம் பின் மஃதீகரிப் (1. நபித்தோழர்) (ரலி)

المقدام بن معدي كرب

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மிக்தாம் பின் மஃதீகரிப்

தந்தை பெயர்: மஃதீகரிப்

வம்சம்: அல்கிந்தீ

புனைப்பெயர்: அபூ கரீமா, அபூ யஹ்யா

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஷாம், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 4

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மிக்தாம் பின் மஃதீகரிப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் அபூ கரீமா மற்றும் அபூ யஹ்யா என்ற குன்யாக்களால் அறியப்பட்டவர். இவர் ஷாம் பகுதியில், குறிப்பாக ஹிம்ஸ் நகரில் வசித்தார்.

ஹிஜ்ரிக்கு முன் 4 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஹிஜ்ரி 87 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் ஷாம், ஹிம்ஸ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), காலித் பின் அல்வலீத், முஆத் பின் ஜபல், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் மிக்தாம் பின் மஃதீகரிப், ஸாலிஹ் பின் யஹ்யா பின் மிக்தாம், காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைது அர்ருஹ்பீ, யஹ்யா பின் ஜாபிர் அத்தாயீ, ஆமிர் அஷ்ஷஅபீ, ஷுரைஹ் பின் உபைது, அப்துர்ரஹ்மான் பின் அபூ அவ்ஃப் அல்ஜுரஷீ, அப்துர்ரஹ்மான் பின் மைஸரா அல்ஹழ்ரமீ, ராஷித் பின் ஸஃத், அபூ ஆமிர் அல்ஹவ்ஸனீ, முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ

வேறு பெயர்கள்: மிக்தாம்


ஆதாரம்: muslimscholars.info (5304) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.