27240. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் (இரவில் ஜமாஅத்) தொழுகைக்காகப் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஒரு மனிதர் அவரை வழிமறித்து, தனது ஆடையால் அவரை வலுக்கட்டாயமாக மூடி, அவரிடம் தனது இச்சையை நிறைவேற்றிக் கொண்டார். பின்னர் அந்த மனிதர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன் பின், அவ்வழியே மற்றொரு மனிதர் கடந்து சென்றபோது, அப்பெண் அவரிடம், “ஒரு மனிதர் என்னிடம் இப்படி இப்படியெல்லாம் அநீதி இழைத்துவிட்டார்” என்று கூறினார். உடனே அந்த மனிதர் குற்றவாளியைத் தேடி விரைந்தார்.
அதற்குள், அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு குழுவினர் அப்பெண் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்பெண் அவர்களிடமும், “ஒரு மனிதர் என்னிடம் இப்படி இப்படியெல்லாம் செய்துவிட்டார்” என்று கூறினார். அவர்களும் குற்றவாளியைத் தேடிப் புறப்பட்டனர்.
(தேடிச் சென்ற அன்சாரிகள்) உண்மைக் குற்றவாளியைத் தேடிச் சென்ற அந்த இரண்டாவது மனிதரையே குற்றவாளி எனத் தவறாகக் கருதிப் பிடித்து வந்தனர். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தபோது, அப்பெண்ணும் (பதற்றத்தில்) “இவர் தான் அவர்!” என்று அடையாளங்காட்டினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தவறாகப் பிடிக்கப்பட்ட) அந்த மனிதருக்குக் கல்லெறிந்து மரண தண்டனை (ரஜ்ம்) நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது, அப்பெண்ணுக்கு உண்மையிலேயே அநீதி இழைத்த அந்த முதலாவது மனிதர் (தானாக முன்வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, குற்றவாளி அவரில்லை, நான்தான்!” என்று கூறினார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்த்து, “நீ போகலாம், நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான் (உன் மீது குற்றமில்லை)” என்று கூறினார்கள். தவறாகப் பிடிக்கப்பட்ட அந்த மனிதரிடமும் கனிவான வார்த்தைகளைக் கூறி (அவரை விடுவித்தார்கள்).
பின்னர் அங்கிருந்தவர்கள், “அல்லாஹ்வின் நபியே! (குற்றத்தை ஒப்புக்கொண்ட) இவருக்குக் கல்லெறிந்து தண்டனை வழங்க மாட்டீர்களா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவருடைய பாவமன்னிப்பை மதீனாவாசிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாலும், அது அவர்கள் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்படப் போதுமானதாகும்! அந்தளவுக்கு அவர், (அல்லாஹ்விடம் சிறந்த முறையில்) பாவமன்னிப்பு கோரியுள்ளார் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:
خَرَجَتْ امْرَأَةٌ إِلَى الصَّلَاةِ فَلَقِيَهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا بِثِيَابِهِ فَقَضَى حَاجَتَهُ مِنْهَا، وَذَهَبَ وَانْتَهَى إِلَيْهَا رَجُلٌ فَقَالَتْ لَهُ: إِنَّ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا، فَذَهَبَ الرَّجُلُ فِي طَلَبِهِ فَانْتَهَى إِلَيْهَا قَوْمٌ مِنَ الْأَنْصَارِ، فَوَقَفُوا عَلَيْهَا، فَقَالَتْ لَهُمْ: إِنَّ رَجُلًا فَعَلَ بِي كَذَا وَكَذَا، فَذَهَبُوا فِي طَلَبِهِ، فَجَاءُوا بِالرَّجُلِ الَّذِي ذَهَبَ فِي طَلَبِ الرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا، فَذَهَبُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: هُوَ هَذَا، فَلَمَّا أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجْمِهِ قَالَ الَّذِي وَقَعَ عَلَيْهَا: يَا رَسُولَ اللَّهِ، أَنَا وَاللَّهِ هُوَ، فَقَالَ لِلْمَرْأَةِ: «اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ» ، وَقَالَ لِلرَّجُلِ قَوْلًا حَسَنًا، فَقِيلَ: يَا نَبِيَّ اللَّهِ، أَلَا تَرْجُمُهُ، فَقَالَ: «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27240.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
1 . இந்தச் செய்தியை இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அப்துல்லாஹ், அஸ்பாத் பின் நஸ்ர் ஆகியோர் இந்த நிகழ்வில் ரஜ்ம் எனும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை நடைபெறவில்லை என்ற கருத்தை அறிவித்துள்ளனர்.
2 . இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் யூஸுஃப் அவர்கள் இந்த நிகழ்வில் ரஜ்ம் எனும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை நடைபெற்றது என்று அறிவித்துள்ளார்.
இரு வகைச் செய்திகளில் முதல் வகைச் செய்திக்கே அறிஞர்கள் முன்னுரிமை தருகின்றனர்.
1 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் அப்துல்லாஹ், அஸ்பாத் பின் நஸ்ர் —> இஸ்ராயீல் —> ஸிமாக் —> அல்கமா —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-27240, குப்ரா நஸாயீ-7270, அல்முன்தகா-இப்னுல் ஜாரூத்-823, அல்முஃஜமுல் கபீர்-17517, 17518, குப்ரா பைஹகீ-17323, …
- அல்முன்தகா-இப்னுல் ஜாரூத்-823.
المنتقى لابن الجارود (ص: 209)
823 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا عَمْرُو بْنُ حَمَّادِ بْنِ طَلْحَةَ، قَالَ: ثنا أَسْبَاطٌ يَعْنِي ابْنَ نَصْرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً، وَقَعَ عَلَيْهَا رَجُلٌ فِي سَوَادِ الصُّبْحِ، وَهِيَ تَعْمِدَ إِلَى الْمَسْجِدِ عَنْ كُرْهٍ قَالَ ابْنُ يَحْيَى: مُكَابَدَةً عَلَى نَفْسِهَا فَاسْتَعَانَتْ بِرَجُلٍ مَرَّ عَلَيْهَا وَفَرَّ صَاحِبُهَا ثُمَّ مَرَّ عَلَيْهَا قَوْمٌ ذَوُو عَدَدٍ فَاسْتَعَانَتْ بِهِمْ فَأَدْرَكُوا الَّذِي اسْتَعَانَتْ بِهِ وَسَبِقَهُمُ الْآخَرُ فَذَهَبَ فَجَاؤُوا بِهِ يَقُودُونَهُ إِلَيْهَا فَقَالَ: إِنَّمَا أَنَا الَّذِي أَعَنْتُكِ وَقَدْ ذَهَبَ الْآخَرُ فَأَتَوْا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْهُ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا وَأَخْبَرَهُ الْقَوْمُ أَنَّهُمْ أَدْرَكُوهُ يَشْتَدُّ فَقَالَ: إِنَّمَا كُنْتُ أُعْيِنُهَا عَلَى صَاحِبِهَا فَأَدْرَكَنِي هَؤُلَاءِ فَأَخَذُونِي فَقَالَتْ: كَذَبَ هُوَ الَّذِي وَقَعَ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ» ، قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ النَّاسِ فَقَالَ: لَا تَرْجُمُوهُ وَارْجُمُونِي أَنَا الَّذِي فَعَلْتُ بِهَا الْفِعْلَ فَاعْتَرَفَ فَاجْتَمَعَ ثَلَاثَةٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي وَقَعَ عَلَيْهَا وَالَّذِي أَعَانَهَا وَالْمَرْأَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنْتَ فَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ» ، وَقَالَ لِلَّذِي أَعَانَهَا قَوْلًا حَسَنًا، قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَرْجُمُ الَّذِي اعْتَرَفَ بِالزِّنَى؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا إِنَّهُ قَدْ تَابَ إِلَى اللَّهِ» ،
فَقَالَ ابْنُ عُمَيْرٍ: زَادَ فِيهَا لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ أَوْ أَهْلُ يَثْرِبَ لَقُبِلَ مِنْهُمْ، فَأَرْسَلَهُمْ، قَالَ ابْنُ يَحْيَى: يُرِيدُ بِهِ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ
- முஹம்மத் பின் யூஸுஃப் அல்ஃபிர்யாபீ —> இஸ்ராயீல் —> ஸிமாக் —> அல்கமா —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-4379, திர்மிதீ-1454,
மார்க்கத்தில் தண்டனைக்குரிய (ஹத்) குற்றம் ஒன்றைச் செய்த ஒருவர், அது தொடர்பான வழக்கு ஆட்சியாளரிடம் அல்லது நீதிமன்றத்தில் சென்று சேர்வதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ உண்மையோடும் உளப்பூர்வமாகவும் பாவமன்னிப்பு செய்துவிட்டால், அவர் மீதான அந்த உலகியல் தண்டனை நீங்கிவிடுமா? என்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே விரிவான கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இந்த விவகாரத்தில் அறிஞர்களிடம் மூன்று கருத்து உள்ளது:
முதல் கருத்து: பாவமன்னிப்பு செய்வதால் தண்டனை முற்றிலும் நீங்கிவிடும்.
ஒருவர் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் உண்மையாக தவ்பா-பாவமன்னிப்பு செய்துவிட்டால், அவர் மீது ஹத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது.
இந்தக் கருத்துள்ள அறிஞர்கள்: இமாம் ஷாஃபியீ (ஒரு அறிவிப்பில்), ஹன்பலி மத்ஹபின் பிரதான கருத்து, இப்னு தைமியா மற்றும் இப்னுல் கையிம் (ரஹ்).
நிபந்தனை: இந்தத் தவ்பா என்பது ஆட்சியாளரிடம் பிடிபடுவதற்கு முன்னரோ அல்லது தண்டனை உறுதியாவதற்கு முன்னரோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
இவர்கள் கூறும் ஆதாரங்கள்:
1 . குர்ஆன் வசனம்:
வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றிக் கூறும்போது அல்லாஹ் பின்வருமாறு விதிவிலக்கு அளிக்கிறான்:
“அவர்களில், நீங்கள் சிறைபிடிப்பதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:34)
ஆய்வு: மிகக் கடுமையான குற்றமான வழிப்பறி மற்றும் தேசத்துரோகத்திற்கே பிடிபடுவதற்கு முன் தவ்பா செய்தால் தண்டனை நீங்கும் எனில், அதைவிடக் குறைந்த குற்றங்களான திருட்டு, விபச்சாரம் போன்றவற்றுக்கு பிடிபடுவதற்கு முன் தவ்பா செய்தால் நிச்சயமாகத் தண்டனை நீங்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
2 . சில ஹதீஸ்கள்:
மாஇஸ் (ரலி) அவர்களின் விவகாரம்: மாஇஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டு, நபியவர்களிடம் வந்து அவராகவே குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு கல்லெறி தண்டைனை நிறைவேற்றப்படும்போது வலி தாங்காமல் அவர் ஓடினார். அப்போது தோழர்கள் அவரைப் பிடித்துத் தண்டித்தனர். இதைக் கேள்விப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: “அவரை நீங்கள் விட்டுவிட்டிருக்கக் கூடாதா? அவர் தவ்பா செய்திருக்கலாம், அல்லாஹ் அவரது தவ்பாவை ஏற்றிருக்கலாம் அல்லவா?” என்று கூறினார்கள். (அபூதாவூத்-4420, திர்மிதி)…
“பாவத்திலிருந்து மீண்டவர், பாவமே செய்யாதவரைப் போன்றவராவார்” என்ற பொதுவான நபியவர்களின் வழிகாட்டுதலும் இதைக் குறிக்கிறது.
இரண்டாம் கருத்து: தவ்பா செய்தாலும் தண்டனை நீங்காது.
ஒருவர் தவ்பா செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால் அவர் மீது ஹத் தண்டனை நிறைவேற்றப்பட்டே தீர வேண்டும். தவ்பா என்பது அவருக்கும் இறைவனுக்கும் இடைப்பட்டது. அது மறுமைப் பாவத்தை மட்டுமே போக்கும், உலகத்தண்டனையை அல்ல.
இந்தக் கருத்துள்ள அறிஞர்கள்: இமாம் அபூஹனீஃபா,பிறப்பு ஹிஜ்ரி 80
இறப்பு ஹிஜ்ரி 150
வயது: 70
இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.மற்றும் இமாம் ஷாஃபியீயின் பிரபலமான கருத்து.
இவர்கள் கூறும் ஆதாரங்கள்:
1 . குர்ஆன் வசனம்:
திருட்டைக் குறிப்பிடும் வசனத்தில் அல்லாஹ் பொதுவான கட்டளையிடுகிறான்:
“திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 5:38)
ஆய்வு: இந்த வசனத்தின் அடுத்த வசனத்திலேயே அல்லாஹ், “இதற்குப் பின்னர் எவர் தவ்பா செய்து சீர்திருத்திக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரை மன்னிக்கிறான்” (5:39) என்றும் கூறுகிறான். எனவே, தவ்பா என்பது மறுமைப் பாவத்தை மட்டுமே போக்கும், கரம் துண்டிக்கும் உலகச் சட்டத்தை மாற்றாது என்பது இவர்களின் வாதம்.
2 . சில ஹதீஸ்கள்:
ஃகாமிதிய்யா குலத்துப் பெண்மணி விபச்சாரம் செய்துவிட்டு, நபியவர்களிடம் வந்து தண்டனை பெற்றுத் தருமாறு வேண்டினார். அவர் கர்ப்பமாக இருந்ததால் பிரசவிக்கும் வரையும், பின்னர் குழந்தைக்குப் பாலூட்டி முடிக்கும் வரையும் நபியவர்கள் அவகாசம் அளித்து, இறுதியில் தண்டனையை நிறைவேற்றினார்கள். தண்டனைக்கு பின் நபியவர்கள் கூறினார்கள்:
“அவர் எத்தகைய (உண்மையான) தவ்பாவைச் செய்துள்ளார் என்றால், அதனை மதீனாவின் எழுபது நபர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.” (முஸ்லிம்)
ஆய்வு: அந்தப் பெண்மணி மிக உயரிய தவ்பாவைச் செய்திருந்தார் என்பதை நபியவர்களே நற்சான்று பகர்ந்தும், அவருக்குரிய உலகத் தண்டனையை நபியவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. எனவே தவ்பா உலகத் தண்டனையை நீக்காது என்பது இவர்களின் பலமான வாதம்.
மூன்றாம் கருத்து: ‘முஹாரிபீன்’ (வழிப்பறி/கொள்ளையர்களுக்கு) மட்டுமே தவ்பா விலக்கு அளிக்கும்.
குர்ஆனில் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள வழிப்பறி மற்றும் கொள்ளையடித்தல் (முஹாரபா) குற்றவாளிகளைத் தவிர, இதர குற்றங்களான விபச்சாரம், திருட்டு, அவதூறு போன்றவற்றுக்கு தவ்பா செய்வதன் மூலம் உலகத்தண்டனை நீங்காது.
காரணம்: மற்ற குற்றங்களுக்கான பொதுவான வசனங்களில் தவ்பா செய்தால் தண்டனை நீங்கும் என்ற விலக்கு நேரடியாகக் கூறப்படவில்லை.
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيۡنَ يُحَارِبُوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ وَيَسۡعَوۡنَ فِى الۡاَرۡضِ فَسَادًا اَنۡ يُّقَتَّلُوۡۤا اَوۡ يُصَلَّبُوۡۤا اَوۡ تُقَطَّعَ اَيۡدِيۡهِمۡ وَاَرۡجُلُهُمۡ مِّنۡ خِلَافٍ اَوۡ يُنۡفَوۡا مِنَ الۡاَرۡضِؕ ذٰ لِكَ لَهُمۡ خِزۡىٌ فِى الدُّنۡيَا وَ لَهُمۡ فِى الۡاٰخِرَةِ عَذَابٌ عَظِيۡمٌ ۙ
اِلَّا الَّذِيۡنَ تَابُوۡا مِنۡ قَبۡلِ اَنۡ تَقۡدِرُوۡا عَلَيۡهِمۡۚ فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِيۡمٌ
(அல்குர்ஆன்: 5:34)
இந்தச் செய்தி போன்று இடம்பெற்றுள்ள (முஸ்லிம்-5338) செய்தி விசயத்தில் இப்னுல் கய்யிம் என்ற அறிஞர் கூறிய விளக்கம்:
[الجامع الصحيح للسنن والمسانيد 37/ 254 بترقيم الشاملة آليا:]
قال ابن القيم في إعلام الموقعين ج2ص60: فَهَذَا لَمَّا جَاءَ تَائِبًا بِنَفْسِهِ مِنْ غَيْرِ أَنْ يَطْلُبَ غَفَرَ اللهُ لَهُ ، وَلَمْ يُقِمْ عَلَيْهِ الْحَدَّ الَّذِي اعْتَرَفَ بِهِ ، وَهُوَ أَحَدُ الْقَوْلَيْنِ فِي الْمَسْأَلَةِ ، وَهُوَ إحْدَى الرِّوَايَتَيْنِ عَنْ أَحْمَدَ ، وَهُوَ الصَّوَابُ. فَإِنْ قِيلَ: فَمَاعِزٌ جَاءَ تَائِبًا ، وَالْغَامِدِيَّةُ جَاءَتْ تَائِبَةً ، وَأَقَامَ عَلَيْهِمَا الْحَدَّ. قِيلَ: لَا رَيْبَ أَنَّهُمَا جَاآ تَائِبَيْنِ ، وَلَا رَيْبَ أَنَّ الْحَدَّ أُقِيمَ عَلَيْهِمَا ، وَبِهِمَا احْتَجَّ أَصْحَابُ الْقَوْلِ الْآخَرِ ، وَسَأَلْتُ شَيْخَنَا عَنْ ذَلِكَ ، فَأَجَابَ بِمَا مَضْمُونُهُ: بِأَنَّ الْحَدَّ مُطَهِّرٌ ، وَأَنَّ التَّوْبَةَ مُطَهِّرَةٌ ، وَهُمَا اخْتَارَا التَّطْهِيرَ بِالْحَدِّ عَلَى التَّطْهِيرِ بِمُجَرَّدِ التَّوْبَةِ ، وَأَبَيَا إلَّا أَنْ يُطَهَّرَا بِالْحَدِّ ، فَأَجَابَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم إلَى ذَلِكَ ، وَأَرْشَدَ إلَى اخْتِيَارِ التَّطْهِيرِ بِالتَّوْبَةِ عَلَى التَّطْهِيرِ بِالْحَدِّ ، فَقَالَ فِي حَقِّ مَاعِزٍ: ” هَلَّا تَرَكْتُمُوهُ يَتُوبُ ، فَيَتُوبَ اللهُ عَلَيْهِ ” ، وَلَوْ تَعَيَّنَ الْحَدُّ بَعْدَ التَّوْبَةِ لَمَا جَازَ تَرْكُهُ ، بَلْ الْإِمَامُ مُخَيَّرٌ بَيْنَ أَنْ يَتْرُكَهُ كَمَا قَالَ لِصَاحِبِ الْحَدِّ الَّذِي اعْتَرَفَ بِهِ: ” اذْهَبْ فَقَدْ غَفَرَ اللهُ لَكَ ” ، وَبَيْنَ أَنْ يُقِيمَ ، كَمَا أَقَامَهُ عَلَى مَاعِزٍ وَالْغَامِدِيَّةِ لَمَّا اخْتَارَا إقَامَتَهُ وَأَبَيَا إلَّا التَّطْهِيرَ بِهِ ، وَلِذَلِكَ رَدَّهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم مِرَارًا ، وَهُمَا يَأبَيَانِ إلَّا إقَامَتَهُ عَلَيْهِمَا ، وَهَذَا الْمَسْلَكُ مَسْلَكٌ وَسَطٌ بَيْنَ مَنْ يَقُولُ: لَا تَجُوزُ إقَامَتُهُ بَعْدَ التَّوْبَةِ أَلْبَتَّةَ ، وَبَيْنَ مَسْلَكِ مَنْ يَقُولُ: لَا أَثَرَ لِلتَّوْبَةِ فِي إسْقَاطِهِ أَلْبَتَّةَ ، وَإِذَا تَأَمَّلْتَ السُّنَّةَ ، رَأَيْتَهَا لَا تَدُلُّ إلَّا عَلَى هَذَا الْقَوْلِ الْوَسَطِ ، وَاللهُ أَعْلَمُ. أ. هـ
அவர் யாராலும் பிடிபடாத நிலையில், அவராகவே முன்வந்து தவ்பா செய்து நின்றபோது அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அதற்குரிய தண்டனையை நபி (ஸல்) அவர்கள் அவர் மீது நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் அறிஞர்களிடையே நிலவும் இரண்டு கருத்துகளில் இதுவும் ஒன்றாகும். மேலும், இது இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
(ரஹ்) அவர்களின் இரு அறிவிப்புகளில் ஒரு கருத்தாகும்; இதுவே சரியானதும் கூட.
யாராவது, ‘மாஇஸ் என்பவரும் மனம் வருந்தித் தானே வந்தார்; ஃகாமிதிய்யா குலத்துப் பெண்ணும் மனம் வருந்தித் தானே வந்தார்; அப்படியிருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவர் மீதும் தண்டனையை நிறைவேற்றினார்களே?’ என்று கேட்டால்,
அதற்கான பதில்: அவர்கள் இருவரும் நிச்சயமாக மனம் வருந்தித்தான் வந்தார்கள், அவர்கள் மீது தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்துடைய அறிஞர்கள் இந்த இரு நிகழ்வுகளையே தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இது குறித்து நான் என்னுடைய ஆசிரியரிடம் (இப்னு தைமிய்யா அவர்களிடம்) கேட்டபோது, அவர் அளித்த விளக்கத்தின் சுருக்கம் இதுதான்: ‘குற்றத்திற்கான தண்டனையும் மனிதனைத் தூய்மைப்படுத்தக்கூடியது; உண்மையான பாவமன்னிப்பும் (தவ்பாவும்) மனிதனைத் தூய்மைப்படுத்தக்கூடியது. ஆனால், அவ்விருவரும் வெறும் தவ்பாவின் மூலம் தூய்மையடைவதை விட, தண்டனையின் மூலமாகவே தூய்மையடைய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். தண்டனை மூலமே தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
அதே நேரத்தில், தண்டனையை விட பாவமன்னிப்பின் மூலம் தூய்மையடைவதையே நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். அதனால்தான் மாஇஸ் என்பவரைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் மனம் வருந்தி, அல்லாஹ் அவருடைய மனவருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்காக நீங்கள் அவரை விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ஒரு மனிதன் பாவமன்னிப்பு கேட்டப் பிறகும் தண்டனை நிறைவேற்றப்படுவது கட்டாயக் கடமையாக இருந்திருந்தால், அதைத் தவிர்ப்பது நபி அவர்களுக்கு அனுமதியாக இருந்திருக்காது.
எனவே, இதில் ஆட்சியாளருக்கு (இமாமிற்கு) இரு அதிகாரங்கள் உள்ளன. குற்றத்தை ஒப்புக்கொண்டவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ போ, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னித்துவிட்டான்’ என்று கூறித் தண்டிப்பதைத் தவிர்த்தது போலத் தவிர்க்கலாம். அல்லது மாஇஸ் மற்றும் ஃகாமிதிய்யா பெண்ணின் விஷயத்தில் செய்தது போலத் தண்டனையை நிறைவேற்றலாம். ஏனெனில், அவ்விருவரும் தண்டனை மூலமே தூய்மையடைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்கள் பலமுறை அவர்களைத் திருப்பி அனுப்பியும், அவர்கள் தண்டனையைப் பெறுவதிலேயே உறுதியாக நின்றார்கள்.
இந்த வழிமுறையானது, ‘மனம் வருந்திய பிறகு தண்டனை நிறைவேற்றவே கூடாது’ என்று கூறும் ஒரு சாராரோடும், ‘தண்டனையைத் தவிர்ப்பதில் பாவமன்னிப்பிற்கு எந்தத் தாக்கமும் இல்லை’ என்று கூறும் மறுசாராரோடும் இணையாமல், இரு தரப்பிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழிமுறையாகும். நீங்கள் நபிகளாரின் வழிமுறையை (ஸுன்னாவை) உற்றுக்கவனித்தால், அது இந்த நடுநிலையான போக்கையே குறிப்பிடுவதை காண்பீர்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-3501, 5338,
சமீப விமர்சனங்கள்