தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3366

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

பாதுகாப்புத் தேடப் பயன்படும் அல்ஃபலக், அந்நாஸ் (113, 114 ஆவது) அத்தியாயங்களின் விளக்கவுரை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சந்திரனை பார்த்துவிட்டு, “ஆயிஷாவே! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுதான் மூடிக்கொள்ளும் இருள் (அதாவது அதிவேகமாக இருள் பரவும்போது ஏற்படும் தீங்கு) ஆகும்” என்று (என்னிடம்) கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

 

(திர்மிதி: 3366)

بَاب وَمِنْ سُورَةِ المُعَوِّذَتَيْنِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو العَقَدِيُّ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى القَمَرِ، فَقَالَ: «يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا، فَإِنَّ هَذَا هُوَ الغَاسِقُ إِذَا وَقَبَ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3366.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: அஹ்மத்-26000.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.