தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26000

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, பின்னர் சந்திரைனை நோக்கிச் சைகை செய்து, “ஆயிஷா! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுவே ‘அல்ஃகாஸிக் இதா வகப்’ (இருள் சூழும் போது ஏற்படும் இரவு) ஆகும்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 26000)

حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، ثُمَّ أَشَارَ إِلَى الْقَمَرِ، فَقَالَ: يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا؟ فَإِنَّ هَذَا هُوَ الْغَاسِقُ إِذَا وَقَبَ “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-24807.
Musnad-Ahmad-Shamila-26000.
Musnad-Ahmad-Alamiah-24807.
Musnad-Ahmad-JawamiulKalim-25417.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
(2. மிகப் பலமானவர்)
.

2 . யஸீத் பின் ஹாரூன்-அல்வாஸிதீ (2. மிகப் பலமானவர்).

3 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்-இப்னு அபூதிஃ-ப் (3. பலமானவர்).

4 . ஹாரிஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்குரஷீ (4. நடுத்தரமானவர்).

5 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா (3. பலமானவர்).

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர் (ரலி)
(1. நபித்தோழர்)
.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10930-ஹாரிஸ் பின் அப்துர் ரஹ்மான் என்பவர் நடுத்தரமானவர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/333, தக்ரீபுத் தஹ்தீப்-1/146)

எனவே இது ஹஸன் தர செய்தியாகும்.


[فتاوى النووي ص256:]
الحديث على الغاسق إذا وقب
16 – مسألة: جاء في الحديث عن عائشة رضي الله عنها قالت: “أُخَذَ رسولُ اللهِ صلى الله عليه وسلم بيدي، فأراني القمرَ فقال: استعيذي باللهِ مِنْ شَرِّ هَذَا، فإنَّهُ الْغَاسِقُ إِذَا وَقَبَ”.
هل هو حديث صحيح أم لا؟ وما معناه؟ وما سبب الاستعاذة منه؟.
الجواب: هو: حديث ضعيف.
والغَسَقُ: الظلمة، وسماه غاسقًا، لأنه ينكسف، فيسود وُيظلم.
والوقوب: الدخول، والمراد دخوله في ظلمة ونحوِها مما يستره من كسوف وغيره.
قال الِإمام الحافظ أبو بكر الخطيبُ البغداديُّ رحمه الله تعالى: يشبه أن يكون سبب الاستعاذة منه في حال وقوبه، لأن أهل الفساد ينتشرون في الظلمة، ويتمكنون فيها مما لا يتمكنون منه في حال الضياء، فيُقْدِمُونَ على العظائم، وانتهاك المحارم، فأضافَ فعلَهم في ذلك الحال إِلى القمر، لأنهم يتمكنون منه بسببه، وهو من باب تسمية الشيء باسم ما هو سببه، أو ملازم له “والله أعلم”.

நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் அவர்களிடம் கீழ்க்கண்ட செய்திக் குறித்து, இந்த ஹதீஸ் சரியானதா? இல்லையா? இதன் பொருள் என்ன? இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து, எனக்கு நிலவைக் காட்டி, ‘இதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக. ஏனெனில், இதுவே இருள் பரவும் போது தோன்றும் நிலவாகும்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர் கூறிய பதில்:

இது ஒரு பலவீனமான செய்தியாகும்.

‘ஃகஸக்’ என்பது இருளைக் குறிக்கும். நிலவு கிரகணம் அடைந்து, கருமையாய் இருள் சூழ்ந்து போவதால் அதற்கு ‘காஸிக்’ என்று பெயரிடப்பட்டது.

‘வகப்-வுகூப்’ என்பது நுழைவதைக் குறிக்கும். இதன் பொருள், கிரகணம் அல்லது அது போன்ற பிற காரணங்களால் நிலவு தன்னை மறைத்துக் கொள்ளும் இருளுக்குள் நுழைவதாகும்.

அறிஞர்-ஹாஃபிள் அபூபக்ர் அல்கதீப் அல்பஃக்தாதீ பின்வருமாறு கூறுகிறார்: நிலவு மறையும் அல்லது இருள் சூழும் நிலையில் அதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான காரணம், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் இருளைப் பயன்படுத்தித் தங்களைப் பரப்பிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தில் அவர்களால் செய்ய முடியாத பல காரியங்களை இருளில் அவர்களால் செய்ய முடிகிறது. இதனால் அவர்கள் பெரும் பாவங்களிலும், தடுக்கப்பட்ட செயல்களை மீறுவதிலும் துணிந்து இறங்குகிறார்கள். எனவே, அந்தச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் செயல்கள் நிலவோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், நிலவின் காரணமாகவே (அதாவது அது மறைந்து இருள் சூழ்வதால்) அவர்களால் அத்தகைய செயல்களைச் செய்ய முடிகிறது. இது ஒரு பொருளுக்கு, அதற்குக் காரணமான ஒன்றின் பெயரையோ அல்லது அதனோடு இணைந்திருக்கும் ஒன்றின் பெயரையோ சூட்டும் வழக்கத்தின் அடிப்படையிலானது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்: ஃபதாவா-நவவீ-1/256)

நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள் இப்படி கூறியிருந்தாலும் இது சரியான கருத்தல்ல என்று ஸகாவீ அவர்கள் தனது மகாஸிதில் கூறியுள்ளார்.

[المقاصد الحسنة 1/ 358:]
102 – حديث: “استَعِيذِي بالله مِنْ شرِّ هذا -يعني القمر- فإنه الغاسقُ إذا وَقَبَ”.
قاله لعائشةَ.
الترمذيُّ وصحَّحه مِنْ حديثِها.
وبه يُنتَقَدُ تَضعيفُ النوويِّ له.

திர்மிதீ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களின் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்து, இது சரியான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக, இமாம் நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள் இந்தச் செய்தியைப் பலவீனமானது எனக் குறிப்பிட்டிருப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது.

(நூல்: அல்மகாஸிதுல் ஹஸனா-1/358)


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) 

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ- 1589, ஃகரீபுல் ஹதீஸ்-, முஸ்னத் இஸ்ஹாக்- 1072, அஹ்மத்-26000,  24323, 25711, 25802, 26146, திர்மிதீ-3366, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, ஹாகிம்- 3989, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.