மிஹ்ஜன் பின் அல்அத்ரஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தமது தொழுகையை முடிக்கும் நிலையில் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து, “அல்லாஹ்ஹும்ம இன்னீ அஸ்அலுக, யா அல்லாஹுல் அஹதுஸ் ஸமத், அல்லதீ லம் யலித், வலம் யூலத், வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத், அன் தஃக்ஃபிர லீ துனூபீ, இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம்.
(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ், தேவைகளற்றவன், தனித்தவன், யாரையும் பெறாதவன், எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவருமில்லாதவன். நான் உன்னிடமே கேட்கிறேன்; எனது பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவாய்!)
என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார், அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்” என்று மூன்று முறை கூறினார்கள்.
(அபூதாவூத்: 985)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ، أَنَّ مِحْجَنَ بْنَ الْأَدْرَعِ، حَدَّثَهُ قَالَ:
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، فَإِذَا هُوَ بِرَجُلٍ قَدْ قَضَى صَلَاتَهُ، وَهُوَ يَتَشَهَّدُ وَهُوَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ، قَالَ: فَقَالَ: «قَدْ غُفِرَ لَهُ، قَدْ غُفِرَ لَهُ» ثَلَاثًا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-985.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்