தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3194

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3194. அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 22


حَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ

سَأَلْتُ جَابِرًا، عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ؟ قَالَ: «زَجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»


Muslim-Tamil-3194.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1569.
Muslim-Alamiah-2933.
Muslim-JawamiulKalim-2941.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . ஸலமா பின் ஷபீப்

3 . ஹஸன் பின் அஃயன்-(ஹஸன் பின் முஹம்மத் பின் அஃயன்)

4 . மஃகில் பின் உபைதுல்லாஹ்

5 . அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


இந்தச் செய்தியின் கருத்தில் அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.

அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து, மஃகில் பின் உபைதுல்லாஹ் அறிவிக்கும் செய்தியைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இது இப்னு லஹீஆ வின் செய்தியாகும் என்று கூறியுள்ளார். (அதாவது இப்னு லஹீஆ அவர்கள், அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து அறிவிப்பதைத் தான் (இப்னு லஹீஆவை விட்டுவிட்டு) மஃகில் அறிவித்துள்ளார் என்ற கருத்தில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். இதனால் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் விமர்சனத்தின்படி சில அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

வேறுசில அறிஞர்கள் இந்த விமர்சனத்தை ஏற்பதில்லை.

மஃகில் அவர்களின் அறிவிப்பைப் பற்றி, இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் குறிப்பிடும்போது மஃகில் அவர்களிடமிருந்து ஹஸன் பின் முஹம்மத் பின் அஃயன் அறிவிக்கும் மஃகில் அபுஸ்ஸுபைர் ஜாபிர் என்ற அறிவிப்பாளர்தொடர் உறுதியானது சரியானது. மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும்போது தான் மறுக்கப்படும் என்று கூறியுள்ளார்…

முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், இவர் அறிவிக்கும் 17 செய்திகளை பதிவு செய்துள்ளார். இவற்றில் சிலவற்றில் இவரின் செய்தியை தனி ஆதாரமாகவும், சிலவற்றில் துணை ஆதாரமாகவும் கூறியுள்ளார்.

இப்னு லஹீஆ வைப் போன்று 7 செய்திகளை அறிவித்துள்ளார். இப்னு லஹீஆவும் மற்றவர்களும் அறிவித்துள்ளதைப் போன்று 7 செய்திகளை அறிவித்துள்ளார்.

மேலும் இவர் அறிவிக்கும் செய்திகள், அஃமஷ் அபூஸுஃப்யான் ஜாபிர் என்ற தொடரில் வரும் செய்திகளும் உள்ளன.

மேலும் இவரின் செய்திகளில் சிலவை இப்னு ஜுரைஜ், ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஹிஷாம் அத்தஸ்துவாஈ, ஹம்மாத் பின் ஸலமா, மூஸா பின் உக்பா போன்ற பலமானவர்களின் செய்திகளுக்கு நிகராகவும் உள்ளது.

இவ்வாறே அபூஸுஃப்யான், …

 


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உமர் பின் ஸைத் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, இப்னு மாஜா-3250 , அபூதாவூத்-3480 , 3807 , திர்மிதீ-1280 , தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


  • ஹஸன் பின் அபூஜஃபர் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் அபீ யஃலா-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,


  • அதாஉ பின் அபூரபாஹ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, / அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-,

  • இப்னு லஹீஆ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, இப்னு மாஜா-2161 , ஷரஹ் மஆனில் ஆஸார்-,

  • மஃகில் பின் உபைதுல்லாஹ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: முஸ்லிம்-3194 , இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,


  • ஹம்மாத் பின் ஸலமா —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-, நஸாயீ-4295 , 4668 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,


அஃமஷ் அவர்களின் அறிவிப்புகள்:

  • அஃமஷ் —> அபூஸுஃப்யான் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-3479 , திர்மிதீ-1279 ,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2237 ,

முஸ்லிம் இமாம்

مسلم بن الحجاج بن مسلم

இறப்பு: ஹி-262.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஸ்லிம்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் முஸ்லிம்

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்ஹுஸைன்

இறப்பு: ஹிஜ்ரி-262.

கால கட்டம்: 11.


இமாம் முஸ்லிம்

முழுப்பெயர்: முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிமுல் குஷைரியி (ஸஹீஹுல் முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம்)

புனைப்பெயர்:  அபூஹுஸைனின் நைஸாபூரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஸ்லிம்

தந்தைபெயர்: ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர்: ஈரானில் உள்ள குராஸான் பகுதியில் உள்ள நைஸாபூரி என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 204 அல்லது 206

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத்  தனது 14 வயதிலிருந்தே ஈரானில் உள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும்  ஷாம், ரயீ, எகிப்து, ஹிஜாஸ்,  நைஸாபூரியை சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

ஸஹீஹ் முஸ்லிம்,

அல்குனா வல்அஸ்மா (அறிவிப்பாளார்கள் தொடர்பான நூல்),

அல்முன்ஃபரிதாது வல்வுஹ்தான்,

அத்தபகாத் இன்னும் பல நூல்களை தொகுத்துள்ளார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்லமதல் கஃனபி, அஹ்மத் இப்னு ஹன்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், யஹ்யா இப்னு மயீன், அபூபக்கர் இப்னு அபீஷைபா, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ, அப்து இப்னு  ஹுமைத், ஹம்மாது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப், அபூஈஸா அத்திர்மிதி, ஸாலிஹ் இப்னு முஹம்மது ஸஜ்ரத், அபூஹாதம் அர்ராஸியி, முகம்மது இப்னு அப்து இப்னு ஹுமைத், அபுஅவானதல் அல் இஸ்ஃபிராயினிய்யி இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 261ல் ரஜப் மாதம் ஞாயிற்றுக்கிழமை நைஸாபூர் என்ற தனது ஊரில் இறந்தார். அப்போது அவருக்கு 57 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

ஸலமா பின் ஷபீப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹஸன் பின் அஃயன்-(ஹஸன் பின் முஹம்மத் பின் அஃயன்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மஃகில் பின் உபைதுல்லாஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம்

محمد بن مسلم بن تدرس

இறப்பு: ஹிஜ்ரி 126

தரம்: நம்பகமானவர், ஆனால் தத்லீஸ் செய்பவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ்

தந்தை பெயர்: முஸ்லிம் பின் தத்ரஸ்

வம்சம்: அல்அஸதீ அல்குரஷீ, ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்களின் மவ்லா

புனைப்பெயர்: அபுஸ்ஸுபைர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 126

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ் ரஹ் அவர்கள் அபுஸ்ஸுபைர் அல்மக்கீ என்று அறியப்பட்டவர். இவர் மக்காவைச் சேர்ந்த ஒரு தாபிஈ ஆவார். இவர் நம்பகமானவர், ஆனால் ஹதீஸ்களில் தத்லீஸ் செய்பவர்.

ஹிஜ்ரி 126 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ் ரலி, இப்னு உமர் ரலி, அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரலி, ஆயிஷா பின்த் அபூபக்ர் ரலி, ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி, அபூத்துஃபைல் ரலி, ஸயீத் பின் ஜுபைர், இக்ரிமா, தாவூஸ் பின் கைஸான், அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ், அலீ பின் அப்துல்லாஹ், நஃபிஃ பின் ஜுபைர் பின் முத்இம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்ஸுஹ்ரீ, அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், இப்னு ஜுரைஜ், ஹிஷாம் பின் உர்வா, மூஸா பின் உக்பா, யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, உபைதுல்லாஹ் பின் உமர் அல்உமரீ, மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஹுஸைன் பின் வாகித்

வேறு பெயர்கள்: அபுஸ்ஸுபைர், முஹம்மத் பின் முஸ்லிம், அபுஸ்ஸுபைர் அல்மக்கீ


ஆதாரம்: muslimscholars.info (11263) · Should verify

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.